புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

புதுப்புனல்


புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத இதழை இந்த மாதத்திலிருந்து வெளியிடத் தொடங்குகிறது. புதுப்புனல் பதிப்பகம் நடத்தி வரும் திரு. ஆர்.ரவிச்சந்திரன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, புதிய எழுத்தாளர்கள் அறிமுகம், பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க நூல் வெளியீடுகள் குறித்த விவரங்கள் என பல பகுதிகளைக் கொண்டதாக அமையும் புதுப்புனல் இதழுக்கு படைப்புகள் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதவும் அல்லது கீழ்க்கண்ட கைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

மாதாமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை புதுப்புனல் அலுவலகத்தில் புதுப்புனல் வாசகர் வட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
சந்தா விவரங்கள் தரப்பட்டுள்ளன. விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.

விலாசம்: புதுப்புனல்
பாத்திமா காம்ப்ளெக்ஸ்
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல் தளம்(ரத்னா கபே எதிரில்)
திருவல்லிக்கேணி
சென்னை – 600 005
கைபேசி:9962376282 (சாந்தி ரவிச்சந்திரன்)

Series Navigation