ரிச்சர்ட் ஸ்டெப்லெர்
ஸோஹோ கிராண்ட் ஹோட்டல் முன்பு மேற்கு பிராட்வேயில் அழகான வெள்ளி கூப்பே கார் பலரது கவனத்தைக் கவர்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தது. பி எம் டபிள்யூக்களும், ஜாகுவார்களும், போர்ஷாக்களும் நிறைந்திருக்கும் இந்த பக்கத்தில், இந்த ஸ்பொர்ட்ஸ் கார் தன்னை உறுதியாக நிறுத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தது. வரும் போகும் மக்கள் ‘இது என்ன ? ‘ என்று கேட்டார்கள்.
முன்னர் இருக்கும் நீள்வட்ட கிரில்லில் சின்ன திரிசூலம் இருக்கிறது. பக்கத்து கதவுகளிலும் எந்த விதமான மாடல் பெயரும் இல்லை. பின்னால் மட்டும், டிக்கி அருகில் சின்னதாக எளிமையாக அழகான எழுத்துக்களில் மாஸெரெட்டி எனக் காண்கிறது. அமெரிக்காவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து போன, முன்பு மாஸெரெட்டி என்று போற்றப்பட்ட இத்தாலியக் கார். இந்தக்காரின் வடிவமைப்பாளரான ஜியார்ஜியட்டோ ஜியூஜியாரோ இந்தக்காரை ‘அலங்காரமில்லாத, தெளிவான அமைப்பும் நல்ல ஆளுமையும் இருக்கும் கார் ‘ என்று சொல்வதை பலர் ஒப்புக்கொள்வார்கள்.
ஸோஹோவில் நின்று கொண்டிருந்த கார் 3200GT. இது ஐரோப்பியமாடல். இது 1998இல் ஃபெர்ராரி நிறுவனம் மாஸெரெட்டியை வாங்கியபின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல். 1993இல் அமெரிக்க மாடலை அறிமுகப்படுத்தினார்கள். வரும் வருடம் ஆரம்பத்தில் இந்தக்கார் புது V-8 என்ஜினோடும் புது வடிவமைப்போடும் இரண்டு பேர் உட்காரும் கன்வர்டிபிளாக, மேலே இருக்கும் கூரை பின்னால் இருக்கும் உலோக தகடுக்குள் மறையும் வண்ணம் அமைந்து வெளிவரும்.
42 லிட்டர் என்ஜின் 390 குதிரைச்சக்தி கொடுக்கிறது. இது இந்த ஸ்பைடர் காரை, மணிக்கு 175 மைல் சாதாரணமாக உந்தக் கூடியது. ஆறு வேக சக்தி கடத்தி (six-speed manual transmission) மூலமாகவோ அல்லது தானியங்கி 6 வேக காம்பிகோர்ஸா சக்தி கடத்தி மூலமாகவோ இந்த சக்தி பின் சக்கரங்களுக்கு செல்கிறது. காம்பி கோர்ஸா தானியங்கி சக்தி கடத்தி கணினி கட்டுப்படுத்தும் ஆறு வேக தானியங்கி. இது பார்முலா ஒன் கார்பந்தயங்களுக்காக உருவாக்கப்பட்டது.
இதில் இருக்கும் மற்ற கணினி கட்டுப்படுத்தும் அமைப்புகள், 1) பிரேக்குகளுக்குத் தகுந்தாற்போல காரின் ஸஸ்பென்ஷனை கட்டுப்படுத்தும் தானியங்கி அமைப்பு (பெரெம்போ நிறுவனம் உருவாக்கியது) 2) கார் ஓட்டும் சக்கரத்துக்கு அருகில் இருக்கும் கணினி திரையை, போகும் வழி வரைபடம் பார்க்கவும், இசைக்காகவும், காரின் உள்ளே இருக்கும் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஜிபிஎஸ் எனச் சொல்லப்படும் கார் உலகத்தில் எங்கே இருக்கிறது என்பதை துல்லியமாகக் காட்டும் அமைப்பும், கையை உபயோகப்படுத்தாமல் பேசக்கூடிய தொலைபேசியும் கொஞ்சம் காசு கூட கொடுத்தால் கிடைக்கும். இந்தக் கார் பலவண்ணங்களில் கிடைக்கும், இது தவிர ஸ்பைடர் காரின் கூரைக்கு 5 வண்ணங்களும், காரின் உள்ளே பயன்படுத்தப் படும் தோல் வேலைகளுக்கு 10 நிறங்களிலும் கிடைக்கும்.
மாஸெரெட்டி வட அமெரிக்காவில் இருக்கும் 38 ஃபெராரி கடைக்காரர்களிடமும் கிடைக்கும். இதற்காக தனி கண்காட்சி கடைகளைக் கட்டவும் ஆரம்பிக்கிறது நிறுவனம்.
சரி. ஃபெராரிக்கும் மாஸெரெட்டிக்கும் என்ன வித்தியாசம் ? ‘ஃபெராரி சுத்தமான ஸ்போர்ட்ஸ் கார். ஆனால் மாஸெரெட்டி அப்படி ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் அல்ல. தினசரி உபயோகத்துக்கும், ஊர்களுக்குச் செல்வதற்குமான கார் இது ‘ என்கிறார் மாஸெரெட்டி காரின் பிரதிநிதி.
விலையிலும் நிறைய வித்தியாசம். ஒரு ஃபெராரி 360 காரின் விலை $161,000 டாலர் (72 லட்சம் ரூபாய்). மோடெனா கூப்பேயின் விலை $144,000 டாலர் (64 லட்சம் ரூபாய்). மாஸெரெட்டி கூப்பே மற்றும் கன்வர்டிபிள் கார்களின் விலை சுமார் $80,000 டாலரிலிருந்து $90000 டாலர்கள் மட்டுமே இருக்கும்( 40 லட்சம் ரூபாய் மட்டுமே)
வலைத்தளம் http://www.maseratispyder.com
(நன்றி நியூயார்க் டைம்ஸ்)
- தொழில்
- பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்
- சேனைக்கிழங்கு பக்கோடா
- பூசணி அல்வா
- புதிய மாஸெரெட்டி கார்
- கிருமிப் போர்முறை (Germ warfare)
- கடலை அழிக்கிறது மனிதக்குலம்
- ஜாதி…
- தனிமை
- சிக்காத மனம்
- இருக்கிறது..ஆனால் இல்லை…
- நிகழ்வின் நிழல்கள்…..
- காதலும் கணினியும்
- நிலவு ஒரு பெண்ணாகி
- ஒரு அரசியல் பயணம்
- ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை.
- இந்த வாரம் இப்படி (சூலை 29, 2001)
- ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.