புதிய பரிணாமம்
புஷ்பா கிரிஸ்டி

அடர்ந்த புல்வெளித் தொடராய்
புல்வெளி விலகிய இடைவெளியில்
மண்வீதிப் பாதை பரிணாமிக்க
அழைத்துச் செல்கிறது கால்கள்
பயணத்தின் வேகம் கூடுகிறது
மரங்களின் இலைகளினூடே
ஒளிக்கற்றைகள் தெறிக்கின்றன.
புத்தகங்களின் பக்கங்களாய்
மரங்கள் மறைகின்றன.
தூரத்தே தெரிந்திடும் சிறு விளக்கொளி
காட்டினுள்ளும் மனிதர்கள் வசிப்பதைக்
கட்டியம் கூறுகின்றன.
காடுகள் அழிந்து, குடிமனைகளாய் மிளிர்ந்து
நகரங்களாகி, மீண்டும் புதிதாய்
பரிணாமம் பெறுகின்றன
pushpa_christy@yahoo.com