புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 02

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

அ.மு.றியாஸ் அஹமட்


(விற்ஸ் பல்கலைக்கழகம், ஜொஹன்னஸ்பேர்க்).

“ஓசியிலயெண்டா, அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு” என்ற மனோபாவந்தான் எம்மைப் பீடித்துள்ள பீடையும் முடுமையுமாகும். இந்த பிரதான மனோபாவத்தைச் சாியாக எடைபோட்டதினால் தானோ என்னவோ வல்லரசுகளினதும், ஏகாதிபத்தியத்தினதும் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட்டுக் கொண்டதாக, பொிதாகப் பீற்றி, பழம்பெருமை, வீறாப்புப் பேசிக்கொண்டு திாிந்தாலும், நாம் இன்னும் அடிமைகளாகவும் அவர்களில் தங்கியுந்தான் இருந்து கொண்டிருக்கிறோம். கிடைத்த சுதந்திரம் என்பது கொள்கைரீதியான அளவில்மட்டுந்தான். கலை, கலாசாரம், பொருளாதார தளங்களில் இவர்களின் ஊடுவல்கள் மிகவும் அபாயகரமானதாக இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊடுருவல்களை பகுத்தறிவதற்கு துறைசார் நிபுணத்துவம் மிகவும் முக்கியமானது. இவைகளில் சில சாதாரண புலனுணர்விற்கு உட்பட்டனவாகவும், மற்றும் பல புலனுனணர்விற்கு அப்பாற்பட்டவையுமாகும். இவைகளை பகுத்துணர நவீன தொழில்நுட்பம் தேவை. (ஓநாயிடமிரு;நது ஆட்டைக் காப்பாற்ற நாியைக் கூப்பிட்ட கதை மாதிாி). இதற்கு கூட ஏகாதிபத்தியத்தில்தான் நாம் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது.

விக்ஸ் எனப் பலராலும் அழைக்கப்படும் “யுக்கலிப்ரஸ்” என்னும் மரங்கள் இன்றும் பரவலாக கிராமங்களில் காணப்படுகின்றன. மக்கள் இதனை தடிமன் (ஜலதோசம்) மற்றும், சளி உபாதைகள் ஏற்படும் போது விக்ஸ் இலையை அவித்து ஆவியை உள்வாங்குவதன் மூலம் நிவாரணம் பெறுகிறார்கள். அவுஸ்தரேலியாவைப் பிறப்பிடமாக கொண்ட இம்மரங்கள் 1970களில் இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசங்களிற்கு அறிமுகமாயின. அவுஸ்தரேலியாவில் வேறு மரங்கள் அதிகம் காணப்படாத வனாந்தரங்களில் இம் மரங்கள் தனியாக வளர்கின்றன. வளர்க்கப்படுகின்றன. இந்தியாவிலோ மூன்று தசாப்தகாலத்திற்குள் இம் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு விவசாயப் பண்ணைகளில் இவை நடப்பட்டன. கிராம வாசிகளின் விறகுத் தேவைக்கும், பண்ணைகளில் பராமாிக்கப்படும் கால்நடைகளின் தீவனத்திற்கும் இம் மரங்கள் அங்கு நடப்பட்டன. தோட்ட வரம்புகள், தோட்ட எல்லையோரங்கள் வேலியோரங்களில் இவை நடப்பட்டன. ஆரம்பத்தில் இம் மரங்களின் பிரயோசனம் விறகாகவும், தீவனமாகவும் அமைந்தாலும் அவற்றின் பெறுமதி அதனை விட மேலானது என அறியத் தொடங்கினர். காகித உற்பத்திக்கு காகிதக்கூழ் பெற்றுக் கொள்ளுமளவுக்கு இதன் பெறுமதி உயர்ந்தது என்ற இரகசியத்தை மக்கள் பூிந்து கொண்டனர். அத்தோடு மரவேலைகளுக்கும், தளபாடங்கள் செய்யவும் இம் மரங்களைப் பயன்படுத்தலாம் என்பதையும் தொிந்து கொண்டனர். இதனால் மக்கள் விறகுத் தேவைக்குப் பதிலாக ஆலைகளுக்கும் மர ஆலைகளுக்கும் அம் மரங்களை விற்றுப் போதிய பணம் உழைக்கலாம் என நம்பினர். இதனால் அம்மரங்களை பெருமளவுக்கு நடுவதற்கு உந்தப்பட்டனர். இம் மரக் கன்றுகளுக்கு திடார்த் தேவையும் அதிகாித்தது. இதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1979-1984 காலப் பகுதியில் வனத் திணைக்களத்தினர் 8 மில்லியன் விக்ஸ் கன்றுகளை மக்கள் மூலம் நடத் தீர்மானித்திருந்த போதிலும் 350 மில்லியன் கன்றுகளுக்கு எதிர்பாராத தேவையேற்பட்டது. அதிகம் முதலீடுகளைச் செய்து மக்களைக் கொண்டு இம் மரங்களை பெருமளவு வளர்ப்பதில் ஈடுபட்டனர். வர்த்தக வங்கிகள் மற்றும் கடன் வழங்கு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இம் மரங்களால் இலகுவாக அதிகமாக உழைக்கலாம் எனக் கிராமவாசிகளுக்கு ஆசையுட்டியன. 1980களின் ஆரம்பத்தில் அந்த விவசாயிகள் இம் மரநடுகையில் ஓரளவு வருமானத்தை பெறக் கூடியதாக இருந்தது. ஆனால் 1980களின் முடிவில் நிலைமை மாறத் தொடங்கியது.

விவசாயிகள் பணம் பண்ணும் ஆசையில் மரநடுகையில் ஒர் ஒழுங்கு முறையைக் கவனிக்காது அதிகளவு மரக் கன்றுகளை கண்டபடி நட்டதாலும் வனத் திணைக்களத்தினர் ஆரம்ப காலத்தைப் போலன்றி தரமற்ற கன்றுகளை விநியோகித்தமையினாலும் விக்ஸ் மரத்தின் வளர்ச்சி குறையத் தொடங்கியது. மரங்களின் தரமும், பருமனும் குறைந்து விட்டன. இதனால் பண்ணை விவசாயிகளின் விக்ஸ் மர விவசாயம் சாியத் தொடங்கியது. காகித ஆலைகளும் வன இலாகாவில் இருந்தே தங்கள் தேவைக்கு அவற்றைக் கொள்வனவு செய்தனர். பண்ணை விவசாயிகள் மரங்கள் ஏற்றுமதி செய்து வியாபாரம் நடத்தவோ சந்தை வாய்ப்பு பெறவோ இயலாது தடுமாறினர்.

இந்த நிலவரத்தில் பண்ணை விவசாயிகளுக்கு மற்றொரு போிடியும் ஏற்பட்டது. விக்ஸ் மரங்கள் தூிதமாக வளர்ச்சிபெறும் இனமாகும். விரைவில் இம் மரங்கள் வளர்ந்து நிலத்திலிருந்து கனியுப்புக்களையும், நீரையும் உறுஞ்சி முடித்தன. இதனால் மண் வளம் குன்றிப் போனது. நிலத்தடி நீரும் குறைந்தது. ஏனைய விவசாயப் பயிர்ச் செய்கை குன்றி பல விவசாயிகள் பயிர்ச் செய்கையைக் கைவிட்டு ஏழையாயினர். இதிலிருந்து கொட்டும் பூ, இலை, காய் கொண்டுள்ள இரசாயனப் பொருள் ஏனைய தோட்டப் பயிர்களின் வளர்ச்சியையும் தடை செய்தது. மேலும் இதன் இலையை உண்ணும் கோலா கரடி, உக்கச் செய்யும் பக்டாாியாவும் இலங்கையிலும், இந்தியாவிலும் இல்லாத போது இதனை இந்நாடுகளில் அறிமுகம் செய்தது பொிய துரோகமாகும். இதுவும் விக்ஸ் மர உற்பத்தியினால் ஏனைய தாவரங்கள் வளர்ச்சி குன்றுவதற்கு ஒரு காரணமாகும்.

விக்ஸ் மரங்களை கடலோரப் பயிர்களாக நடலாம். அது காற்றுக்கு தாக்குப் பிடிக்க கூடியதாக இருந்தாலும்கூட காற்று வீசும் போது இம் மரங்கள் ஒரு பக்கமாகவே சாய்வதால் அந் நோக்கமும் நிறைவேறக் கூடியதாக இல்லை. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போதிய தாிசு நிலங்கள் இல்லாமையால் இம் மரங்களை வளவுகளிலும் விவசாயக் காணிகளிலும் வளர்க்க வேண்டியிருக்கின்றது. இம் மரங்கள் ஏனைய தாவர வளர்ச்சியை பாதிக்கும் என விஞ்ஞானிகள் கருதுவதால் நம் விவசாய உற்பத்திக்கு இது ஊறு விளைவிக்கலாம். இவ் விவகாரத்தில் நமது விஞ்ஞானிகள் அதிகளவு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலவரத்தில் இம் மர நடுகைக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டுமா ? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஐரோப்பியாின் வெள்ளெலிகளாக நாங்கள் பயன்படுத்தப்படுகின்றோம். இலங்கையில் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லினங்களும், இபில் இபில் மரங்களும் மலைநாட்டில் வளர்க்கப்பட்டிருக்கும் பைனஸ் மரங்களும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில பருத்தியினங்களும், சூடானின் சில கோதுமையினங்களும், சில தொிந்தோ அல்லது தொியாமலோ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில உயிர்; அங்கிகளும், முதலாளித்துவ முதலாம் மண்டல நாடுகளால் இன்னும் மூன்றாம் மண்டல நாடுகளை இறுகப் பிடித்து வைத்திருக்கும், உயிாினவியற் தொழில்நுட்பட ஆக்கிரமிப்பேயன்றி வேறொன்றுமில்லை.

எனவே வெளிநாடுகளிலிருந்து இலவசமாகவோ அல்லது வேறு வழியாகவோ தருவிக்கப்படும் எதைப் பற்றியும் முன்னெச்சாிக்கையுடன் பலாபலன்கள் ஆராயப்பட்ட பின்னரே நாட்டில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். அவ்வாறின்றேல் மேற்கண்ட மாதிாியான பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். “ஓசியிலயெண்டா அம்மாக்கொண்டு அப்பாக்கொண்டு” என்ற மனோபாவம் எப்போது மாறுகிறதோ, அப்போதுதான் வெள்ளெலிகளாக நாங்கள் ஆக்கப்படுவதிலிருந்து விடுபட முடியும்.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

அ.மு.றியாஸ் அஹமட்

அ.மு.றியாஸ் அஹமட்

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


ஏகாதிபத்தியம் என்ற பதம் அரசியல் சூழலில் மிகவும் பாிச்சயமானது. ஆனால் சூழலியல் ஏகாதிபத்தியம் அதிகம் பாிச்சயமான விடயமல்ல. தோலிருக்கச் சுளை விழுங்கும் சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.

காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பெளதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபாிப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.

ஏகாதிபத்தியம், காலனியப்பட்ட நாடுகளின் சமூக, அரசியல், பண்பாட்டுக் கட்டமைப்புக்களை மாத்திரம் மாற்றியமைக்கவில்லை அந்நாடுகளின் சூழலியலையும் சிதைவுக்குள்ளாக்கியது. பாரம்பாியமான வாழ்வியல் வளங்களையும் சிதைவுக்குள்ளாக்கியது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்குக் காரணமாக உயிாியல் மற்றும் சூழலியல் அம்சங்கள் அடிப்படைகளாக இருந்ததை குறொஸ்பி கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். தான் வாழும் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட எவரும் இதனைத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும். எங்களது சூழல் சார்ந்து இவை பற்றிய சிந்தனைகளும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும்.

ஏகாதிபத்தியத்தால் உலகின் ஏனைய பகுதிகளுக்குப் பரவவிடப்படும் ஐரோப்பிய நோய்களால் அப் பகுதிகளில் வாழும் மக்களைப் பலங் குன்றச் செய்வதன் மூலமாக, ஏகாதிபத்தியவாதிகளது இராணுவ, தொழிநுட்ப ரீதியான வெற்றிகளுக்கான வாசல்கள் திறக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியவாதிகளால் அறிமுகப்படுத்தப்படும் தாவரங்கள், விலங்குகள் என்பவை ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அல்லது அவர்களது இராணுவ நலன்களுக்கோ ஆதாரமாக இருப்பது மாத்திரமல்லாமல், காலனியப்படுத்திய நாடுகளில், சூழலியல் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. இம் மாற்றம் அத்தேச மக்களுக்குப் பாதகமாக அமைவதுடன் அவர்களது பண்பாடுகளை, அவர்களது வாழ்வியலைப் பேணியிருக்கும் தாவர, விலங்குச் சூழல்களையும் நாசப்படுத்திவிடுகின்றது.

காலனியப்பட்ட நாடுகளது பயிர்ச்செய்கைகளை மாற்றியமைத்து, காலனித்துவ நாடுகள் தமக்குத் தேவையானவற்றை அறிமுகம் செய்துவிடுகின்றன. இதன் மூலமாக காலனியப்பட்ட நாடுகளது சூழல் சார்ந்த இயக்கம் தடுக்கப்பட்டு, காலனித்துவ நாட்டினை மையமாக கொண்டு, அந் நாட்டின் தேவைக்கேற்ப இயங்க வைக்கப்படுகிறது. இன்றைய உலகம் எதிர்கொள்கின்ற மிகப் பொிய சூழல் மாற்றம் இதுவாகும்.

காலனியப்பட்ட நாடுகள் தமது பாரம்பாியச் சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கைகளில் இருந்து தடுக்கப்பட்டு, காலனித்துவ நாடுகளுக்கு பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதற்கும், மேற்படி நாடுகள் எதிர்கொள்ளும் பஞ்சம், பட்டினிச் சாவுகளுக்குமுள்ள நேரடித் தொடர்பும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஏன் ஒரு பகுதி நாடுகள் எப்போதும் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் எதிர்கொள்பவைகளாாகவும், மற்றொரு பகுதி நாடுகள் நிவாரணம் வழங்குபவைகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன என்று சற்றுச் சிந்திக்கத் தொடங்கினால், பிரச்சினைகளை அடையாளம் காணும் கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன.

ஒட்டுப் போடப்பட்ட அல்லது மெருகிடப்பட்ட காலனித்துவக் கல்வி முறைமையுள் இத்தகைய பார்வைகளுக்கான சாத்தியப்பாடுகள் எந்தளவிற்கு இருக்க முடியும் ? நடைபெறுகின்ற ஆய்வுகளுள், எழுதப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகளுள், அவற்றை மேற்கொள்ள கையாளப்படுகின்ற ஆய்வு முறைமைகள் பற்றிய மறுமதிப்பீடுகள் இதனை நன்கு புலப்படுத்தும். இவை பற்றிய உக்கிரமான விவாதங்கள் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.

சூழலியல் ஏகாதிபத்தியம் குறைத்து மதிப்பிடக்கூடிய விடயமல்ல. அது நவகாலனித்துவச் சூழலில் தன்னை நன்கு விசாலித்து நிலைநிறுத்தித் கொண்டு வருகின்றது. “மூன்றாம் உலக” அல்லது “அபிவிருத்தி அடைந்து வருகின்ற” நாடுகளது தாவர, விலங்கு உயிாினங்கள் மீதான மேற்குலக நிறுவனங்களின் உாிமைகோரல்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய மேற்குலக முன்வைப்புகளுக்குப் பின்னாலுள்ள ஏகாதிபத்திய அரசியல் பற்றியும் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இயற்கைச் சூழல்பற்றிய மேற்குலகம் கடைப்பிடிக்கும் கொள்கைகளும், ஏனைய நாடுகள் மீது குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது நிர்ப்பந்திக்கும் கொள்கைகளும் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. இவற்றின் மூலமாகத் தொடர்ந்தும் தமக்குச் சாதகமான சூழ்நிலையை வைத்திருக்க அந்நாடுகள் விளைகின்றன. ஐ.நா.வினதும், யுனஸ்கோவினதும் பல தீர்மானங்களும் விமாிசனங்களுக்கு உட்பட்டு; வருவதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விாித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்