புகழின் நிழல்

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

பாரதிராமன்.


வாய்ப்பு கிடைத்தது

நண்பரின் படப்பிடிப்பைத்

தொடர்ந்து பார்க்க.

படப்பிடிப்பின்போது

பயங்கர பாராட்டுகள்.

எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை

எவருக்கும் தெரியாமல் ?

கதாநாயகனின் கால்ஷ ‘ட்டுகள்

காத்திராமல் மொத்தமாக கிடைத்ததெப்படி ?

பணத்தைத் தண்ணீராக செலவழித்திருக்கிறார்

அள்ளித் தரப்போகிறது அத்தனையையும்

நடனக் காட்சி ஒன்று போதும் கல்லா நிரம்ப

சண்டைக் காட்சிகளில் இதை மிஞ்ச படமில்லை.

வசனத்துக்காகவே வாரக்கணக்கில் ஓடும்

பாட்டு ஒவ்வொன்றும் பைத்தியமாக்கும்

படம் வெளியான அன்று

ஒரு ரசிகரைக் கேட்டேன்

‘ படம் எப்படி ? ‘

‘ ஊத்திக்கிச்சு ‘ என்றார் அவர்

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.