பிள்ளை-யார் ?

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ராஜி


பிழைக்காத பூடகமான பொலிவு பிள்ளை யாரே!
வழி காட்டு பவரே, விரும்பத்தக்க உடையவரே!

உணர்வேன் எந்த வகையில், உன்னை நான் ?
கனிந்து அளிப்பாயோ கரிமுகனே, தகுந்த ஆசான் ?

கருணைக் கடலே கற்பனை ஒளிரே,
வறுமைத் தீர்க்கும் கற்பகக் களிரே!

நிலைத்து தடைகள் மாற்றிடு வாயே!
கலை, கற்பனை, தந்தருள்வாயே!

அரந்தை விளையாட்டு எனக்கு மட்டும் தானோ ?
அகந்தை இஇல்லாத பாவை நான் மட்டும் தானோ ?

ஸர்வ ஸித்தி, கவி பிள்ளை-யாரே!
ஸித்தி சுத்தி எனக்கருள் வாயே!!
tpsmani@hotmail.com

Series Navigation