பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

கோபால் ராஜாராம்

சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில்

ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின் பயணம் ‘மருதம் ‘ வலை இதழாகத் தொடரும் என்று அறிகிறோம். இப்போது ‘சொல் புதிது ‘ இஸ்லாமிய மதம் பற்றி மூன்றில் ஒரு பங்கு இதழில் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்கப் பட்டு தொடர்ந்து வெளிவரும் என்று அறிகிறோம்.

சொல் புதிது பல புதிய பாதைகளில் செல்ல முயற்சித்தது. பொதுவாக மதத்திற்கு சிறு பத்திரிகைகள் முக்கியத்துவம் தருவது குறைவு. அப்படி முக்கியத்துவம் கொடுத்தாலும், ஜே கிருஷ்ணமூர்த்தி போன்றோரை அறிமுகப் படுத்தலாகும். விசிறி சாமியார், யதி போன்றவர்களையும் ஜெயமோகன் அறிமுகப் படுத்தியது வித்தியாசமான செயல். இது ஆன்மிகம் , மதமல்ல என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலோருக்கு மதமே ஆன்மீக உருவில் விரிவு பெறுகிறது, என்பதால் இந்தப் பாகுபாட்டை அழுத்திச் சொல்வது எந்த விதத்திலும் பொருள் பொதிந்ததல்ல. அப்படி ஒரு பாகுபாடு இருக்கிறதா என்பதும் எனக்குச் சந்தேகம்.

வரலாறு விஞ்ஞானம் போன்றவற்றில் சொல் புதிது கவனம் செலுத்தியதும் பாராட்டத்தக்க ஒன்று. புதுமைப் பித்தன் படைப்புகள் காப்புரிமை சமாசாரம் இன்று பழசாகிப் போனாலும், ‘சொல் புதிது ‘ இது பற்றி எடுத்த நிலைபாடு எந்த விதத்திலும் பெருமை சேர்க்கவில்லை. மதம் பற்றிய திறந்த சிந்தனையை முன்வைத்து அதைப் பற்றிய பல ஜனரஞ்சக உணர்வினர்களுக்கும் ஒரு தேவை இருப்பது பற்றிய பிரக்ஞையை வெளிப்படுத்திய இவர்கள், ரஜனியின் பிரபலத்தைத் தாக்க முற்பட்டது ஒரு முரண்பாடு. ரஜனி தொழுதலில், விசிறிசாமியாரின் தொழுகையின் எல்லா அம்சங்களும் உண்டு. பரவசம் தொடங்கி நிறுவனப்படுதல் வரை.

இதில் வெளியான பேட்டிகளும் – பாவண்ணன், மம்முது, வெ சாமிநாதன், ஹெப்சிபா ஜேசுதாசன் – முக்கியமானவை.

*********

புனைகளம் இதழ் இரண்டு

புனைகளம் இதழ் இரண்டைப் பற்றித் தாமதமாக எழுத நேரிடுகிறது.மூன்றாவது இதழ் வந்ததாய்த் தெரியவில்லை.

சிறப்பான அச்சாக்கமும், தெளிவான அமைப்பும் – உள் வெளி அமைப்புகள் இரண்டையுமே சொல்கிறேன் – கொண்டுள்ள புனை களம் தொடர்ந்து வெளியாக வேண்டும்.

இரண்டாவது இதழில் யசுநாரி கவபாதாவின் அறிமுகமும், சில கதைகளும் உள்ளன. அவருடைய நோபல் பரிசு உரை உள்ளது. நவீன கலை பகுதியில் தட்சிணாமூர்த்தியுடன் நேர்காணலும், சந்ரு பற்றி நடேஷின் கட்டுரையும், ஆதிமூலம் பற்றி வெ சாமிநாதன் கட்டுரையும் உண்டு. நாட்டார் வழக்காற்றியல் பகுதியில் நாட்டார் விவிலியம் பற்றி ஆ சிவசுப்பிரமணியன் கட்டுரை எழுதியுள்ளார். தாய்த் தெய்வம் பற்றி தொ பரமசிவனின் கட்டுரை உண்டு. எது நாட்டார் வழக்காற்றியல் என்ற கேள்வி எழுப்பி விடை சொல்ல முயன்றிருக்கிறார் ஃபிரான்சிஸ் செயபதி.

கோணங்கியின் கதை படிக்குமுன்பேயே மறக்கக் கோரும் ஒரு வீண். (பாழ் என்றும் சொல்லலாம், ஆனால் பாழ் என்ற வார்த்தைக்கு டி எஸ் எலியட்டால் ஒரு வசீகரம் கூடியிருப்பது , அந்த வார்த்தைப் பிரயோகத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் உபயோகிக்க விடாமல் செய்கிறது.)

செயபதி நாட்டார் வழக்காற்றியல் என்ற வார்த்தை குறித்து மட்டுமில்லாமல் இதன் ஆய்வுகள் பற்றியும் சில முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் கிராமத்தை மட்டுமல்ல நகரங்களை மையம் கொண்டும் அமையலாம். அதிகார வர்க்கத்துக்கு அப்பாற்படுத்தப் பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்தத் தேடிய தங்கள் வரலாறுகளே நாட்டார் வழக்காற்றியல் என்று வரையறை செய்கிறார்.

இந்தக் கட்டுரையுடன் கூடவே டி தருமராஜனின் ‘கதையாடல் ‘ கட்டுரையும் வாசிக்கத்தக்கது. செயபதியின் கருத்துக்கு நேர்மாறாக ஒரு பதிவைச் செய்கிறது, இந்தக் கட்டுரை. அதற்கு நடைமுறை வலுவும் சேர்த்துக் கொள்கிறார் தருமராஜன். அதாவது நாட்டார் இலக்கியம் என்ற வரையறைக்குள் செய்யப் படும் ஆய்வுகள், நாட்டார் வழக்காற்றில் உள்ள சாதியம் மற்றும் இனமேன்மைகளை மறந்து போகின்றன. நாட்டார் இலக்கியம் ஒரு ரொமாண்டிக் தளத்தில் இப்போது வைக்கப் படுகிறது என்பது தான் காரணம். இதுவும் தொடர்ந்து விவாதிக்கப் பட வேண்டும்.

********

தீம் தரிகிட மாத இதழாகிறது

இரு மாதத்திற்கொரு முறை வந்துகொண்டிருந்த தீம் தரிகிட மாத இதழாகிறது என்று அறிகிறேன்.

ஜனவரி மாதத்து இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில்ஆறிவொளி இயக்கத்தில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வனின் அனுபவங்கள் தொடராக வெளிவருவது மிக முக்கியமான விஷயம். ‘இலக்கியம் ‘ பண்ணும் முனைப்பில் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தமிழில் அருகிக்கொண்டே போவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. அப்படி பதிவுகள் வந்தாலும் அது ‘அறிவுரை ‘ தொடராக ஆகிவிடுகிறது. இதைத் தவிர்க்கிற விதத்தில் தமிழ்ச் செல்வனின் தொடர் மிக முக்கியமானது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தைப் பற்றியும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. திறந்த கடிதம் என்ற அமைப்பில் திலகவதிக்கு ஞாநி கட்டுரெள எழுதியிருக்கிறார். இதே பாணியில் கருணாநிதி வாஜ்பாய், ஜெயலலிதாவிற்கும் எழுதியுள்ளார். எழுதப் பட்டவர்கள் படிக்காவிட்டாலும், எழுதப்பட்டவர்கள் பற்றிய விமர்சனமாய் இது கொள்ளப் பட வேண்டும் என்பது எண்ணம் போலும்.

கே எஸ் சுப்பிரமணியன் ‘கந்தசாமியும் கண்ணுச்சாமியும் ‘ என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். நம் கல்வித்திட்டம் பற்றி அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை. கண்ணுச்சாமி என்ற அசாத்திய புத்திசாலி , ஆங்கிலம் பயில முடியாத காரணத்தால் பள்ளிப்படிப்பில் தோல்வியுற்று முடங்கிய நிலையினை அருமையாய்ச் சொல்கிறது. எத்தனையோ கண்ணுச்சாமிகளும், கணித மேதை ராமானுஜன்களும் இந்தக் கல்வித்திட்டத்தின் புதை மணலில் அழுந்திப் போய் மட்கிப் போயிருக்கிறார்கள் என்று தெரியாமலே பொறியாளர்களையும், மருத்துவர்களையும் உருவாக்க பீடு நடை போடுகிற ஒரு அசிங்கமான கல்வித்திட்டத்திலிருந்து எப்போது மீளப் போகிறோம் என்று தெரியவில்லை.

தங்கர் பச்சான் படம் பற்றி அ ராமசாமியின் கட்டுரை உள்ளது. அபர்ணா சென்னின் மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் பற்றிய விமர்சனம் அபிமன்யு எழுதியுள்ளார்.

தீம் தரிகிடவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். கணிசமான ஆதரவு கிடைத்தால் நிச்சயம் இது மாதமிருமுறையாகவும் ஆகக் கூடும்.

*******

காலச்சுவடு : தமிழ் பதிப்புச் சூழல்

காலச்சுவடு ஜனவரி பிப்ரவரி இதழ் தமிழ் பதிப்புச் சூழல் மீதான் ஒரு பார்வையாய் அமைகிறது. க்ரியா வெளியீட்டின் எஸ் ராமகிருஷ்ணன், சல்மா ஆகியோரின் பேட்டிகளும், நஞ்சுண்டனின் கட்டுரையும், அமரந்தாவின் கட்டுரையும், அம்பையின் கட்டுரையின் மிக முக்கியமாய்க் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

தமிழில் 1936-ம் ஆண்டு வெளிவந்த மாதர் மறுமணம் இதழ் பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் நாட்டில் மாதர் மறுமண இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையையும் சுட்டிக்காட்டும் கட்டுரையை அம்பை எழுதியிருக்கிறார்.

நஞ்சுண்டனின் கட்டுரை மிக அருமையான கட்டுரை. தமிழ் நாட்டில் புத்தக எடிட்டர்களே கிடையாது . அதனால் எழுதியது தான் , வெளி வந்தது தான் எந்த வரைமுறையும் இல்லாமல் புத்தகங்கள் வெளி வருகின்றன. மொழிபெயர்ப்புக்கு எடிட்டர் என்பது மிகப் பொறுப்புள்ள ஒரு வேலை. நஞ்சுண்டன் ‘நாயுடன் கூடிய சீமாட்டி ‘ ( ‘Lady with the dog ‘ )என்ற மொழிபெயர்ப்பின் அபத்தத்தில் தொடங்கி, இன்றும் கூட நிலைமை அவ்வளவாக மாறிவிடவில்லை என்று பட்டியலிடுகிறார். I have a pen என்ற வாக்கியம் ‘நான் பேனாவை உடைத்தாயிருக்கிறேன் ‘ என்று மொழி பெயர்க்கப் பட்ட நாட்கள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன. அமரந்தா, நஞ்சுண்டன் , சரஸ்வதி ராம்நாத் போன்ற பலர் மொழிபெயர்ப்பைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், பல அவசரக் கோல மொழி பெயர்ப்புகள் வரத்தான் செய்கின்றன.

இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் போது, கொள்ள வேண்டிய கவனத்திற்கு நஞ்சுண்டன் தமிழவன் மொழியாக்கத்திலிருந்து பல உதாரணங்களில் நிகழ்ந்த தவறைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார். இந்திய மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யும் போது, ஒரு மொழியின் அமைப்பு, கலாசாரப்பின்னணி, வார்த்தைப் பிரயோகத்தில் உள்ள பிரத்தியேகத் தன்மை – இவற்றிலிருந்து கவனம் தப்பிப் போவது சகஜம். உதாரணமாக இந்தியில் ‘சந்தோஷ் ‘ என்ற வார்த்தையின் பொருள் ‘திருப்தி ‘ என்பதாகும். இதை சந்தோஷம் என்றே மொழிபெயர்க்கத் தான் முதலில் தோன்றும். இன்னொரு பிரசினை பெயர்கள் பற்றியது. வங்காளத்தின் ‘பைத்திய நாதன் ‘ தமிழில் ‘வைத்திய நாதன் ‘ ஆகவேண்டுமா இல்லையா ? (வேண்டியதில்லை). ஊர்ப்பெயர்களை என்ன செய்வது ? வாக்கிய அமைப்புகளை என்ன மாதிரி அமைக்க வேண்டும் ? சிறுகதை மற்றும் புதினங்களுக்கும், விஞ்ஞானக் கட்டுரைகளுக்கும் மொழி பெயர்ப்பில் வித்தியாசம் உண்டு. நாடகம் வெறும் பிரதியாக மொழியாக்கம் செய்யப்படவேண்டுமா அல்லது, அல்லது மேடையேற்றத்தை முன்வைத்து செய்யப் படவேண்டுமா ? இப்படிப்பட்ட பிரசினைகளையெல்லாம் முன்னிறுத்தி நஞ்சுண்டன், அமரந்தாவின் கட்டுரைகள் போல, பல கட்டுரைகள் தமிழில் வெளிவரவேண்டும்.

*****

சிறு பத்திரிகை இயக்கம் : சில புதிய வழிகளில்

சிறு பத்திரிகைகள் தள்ளாட்டத்துடன் வருவதும், சொல் புதிது வேறு திசைகளில் செல்வதும் நாம் இனி சிறு பத்திரிகை இயக்கத்தின் முனைப்பை வேறு வழிகளில் செலுத்த வேண்டுமோ என்று யோசிக்கத் தூண்டுகிறது.

பல இதழ்கள் ஒரு சில இதழ்களில் நின்று போவதும், அப்போதைய மிகை உணர்ச்சி ஈடுபாடுகளினால், தொலை நோக்கை இழந்து போவதும் மிக இயல்பாய் இங்கே நடக்கிறது. அதில்லாமல் பல இதழ்கள் பத்திரிகை என்றாலும் கூட சமகால நிகழ்வுகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. இதனால், இனி வரும் செயல்பாடுகள் புத்தக உருவில் அமைந்தால் நன்றாய் இருக்கும். உதாரணமாக புனைகளைத்தில் ஓவியர்கள் பற்றிய குறிப்புகள் பேட்டிகள் இன்னும் ஒருமைப் படுத்தப்பட்டு சிறு பிரசுரங்களாக, ஒவ்வொரு ஓவியரைப் பற்றியும் அமையலாம். நாட்டார் இலக்கியம் பற்றிய பார்வைகள் ஒரு தொகுப்பில் வரலாம். சிறு பத்திரிகை என்பதாக இல்லாமல், சிறு பிரசுரங்களாக இவை வெளி வந்தால் அப்போதைய பிரசினைகளுக்கு அப்பாலும் நிரந்தரம் பெறும். இது பற்றி அனைவரும் யோசிக்க வேண்டும்.

********

gorajaram@yahoo.com

Series Navigation