பிரதீபா கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

பிரதீபா புதுச்சேரி


ஆகாயத்தில்
கரிநாள்
கார்மேகங்கள் சூழ்ந்து
மத்தள‌ம் இடித்து
பிரியாவிடை கொடுத்து
மழைத்துளி ஒவ்வொன்றையும்
பூமிக்கு தாரைவார்த்தது…

எய்திய வேகத்தில்
மண்ணை அடையும்
துளிகள் அதனோடு
ஐக்கியமாகி வளம்சேர்த்தது…
கரிய ஒழுங்கைகளை
அடையும் துளிகள்
தாயின் கைவிட்டோடிய‌
குழந்தை மீண்டும்
தாயிடமே குதித்தோடுவது போல்
விழுந்த வேகத்தில்
வானை தொட
தெரித்தும் தோல்வி அடைய
தலைதாழ்த்தி அமைதியாய்
கால்வாயை நாடுகின்றன…

சமுத்திரத்தில் மோட்சம்
அடைய அன்று
கதிரொலிகளால்
வானை அடைந்து
மீண்டும் மழைத்துளியாய்
மண்ணை சேர…….

====
காகிதத்திரை ஒவியம்
==
ஸ்தம்பித்த காட்சிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கதை பேசும்…

சித்தெறும்புகளாய்
ஒடிக்கொண்டுடிருக்கும்
நம் வாழ்வில்
நம் பார்வையிலிருந்து தவறிய‌
காட்சிகளை உற்றுநோக்கச்
செய்யும்…

வண்ணங்கள் வார்த்தை
ஜாலம் ஆடும்
காகிதத்திரை ஒவியம்……

——
காதல் திருமணம்

காதலாகி கசிந்துருகி
கண்ணே என்றும்
மணியே என்றும்
நீயின்றி நானில்லை
என்றும் கதை பல பேசி
உற்றார் இழந்து
சுற்றம் துறந்து
கைதளம் பற்றிய பின்
பொன்மான் பொய்மானாகி
ஆதவன் ஆண்டானாகி
நாளும் ஏமாற்றத்தில்
தேய்கிறது முதிர்ச்சியற்ற‌
காதல் திருமணம்……..

– பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

Series Navigation

பிரதீபா புதுச்சேரி

பிரதீபா புதுச்சேரி