This entry is in the series 20100312_Issue

நிலாரசிகன்.


மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும்
அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன்
நுழைகிறாய்.
கிளையிலிருந்து விடுபடும் இலையென
என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன்
கைகுலுக்குகிறாய்.
பின்,
நடனமிட துவங்குகிறாய்.
மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய்.
சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.
அனைத்தும் முடிந்து
வாசற்கதவை நெருங்கும் தருணத்தில்
சத்தமிட்டு அழுகிறாய்
ஒன்றும் நடந்துவிடாத
உன் பாவனைகளை
கழுவுகிறது பரிசுத்தமான
கண்ணீர்த்துளிகள்.
இனி,
சந்தோஷமாக விடைபெறலாம்
நீ.

Series Navigation