பார்க் ‘கலாம் ‘

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

கோமதி நடராஜன்


ஆண்டுகள் பல கடந்து
கண்டெடுத்தோம் ஒரு
ஒரு காமராஜ்.
அவர் அனுபவத்தில்
பட்டம் வாங்கிய அறிவாளி
இவர் பல்கலைக் கழகத்தில்
பட்டம் வாங்கிய அனுபவசாலி.
அவர்,
பார்க்கலாம் பார்க்கலாம் என்று
கூறியே, வளங்கள் பல கண்டவர்.
இவரும்தான், சொல்கிறார்,
‘பார்க்கலாம் ‘ ‘ பார்க்கலாம் ‘ என்று.
இவர் வந்த பின்,
இந்திய மாணவர் சமுதாயம்,
தலை நிமிர்ந்து
நிற்பதைப் பார்க்-கலாம்,
விஞ்ஞானம்,மறுமலர்ச்சி,
அடைவதைப் பார்க்-கலாம்
நாட்டின் பொருளாதாரம்
உயர்வதைப் பார்க்-கலாம்,
இது போல்,நன்மைகள்,
எத்தனையோ பார்க்-கலாம்.
நமது,மதிப்பிற்குரிய,
ஜனாதிபதி,
டாக்டர் அப்துல்கலாம்,ஆட்சியில்.

ngomathi@rediffmail.com
komal@ambalam.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்