பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப் பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.
அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம் திண்ணை.காம்-இல் இவ்வாண்டு ஏப்ரல் 19 அன்று வெளிவந்த – “ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்? – ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி” என்னும் என்
கட்டுரையை [“நன்றி: திண்ணை.காம்” குறிப்பிட்டு] நண்பர் நாகி மூலம் அனுப்பிவிட்டு, விழாவில் பங்கேற்க இயலாதிருந்த
எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் உயிரோட்டமுள்ள இந்தச் சித்திரமும் தெளிவான படங்களும் மகிழ்ச்சியைத் தருவன.
கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிட்ட தங்களுக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
தேவமைந்தன்


தேவமைந்தன்(அ.பசுபதி)
A.Pasupathy(Devamaindhan)

Series Navigation