பாரதி கலை மன்றம் பஹ்ரைன்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

அப்துல் கையூம்


நிகழ்ச்சி அறிவிப்பு பஹ்ரைன் நாட்டில், பாரதி கலை மன்றம் என்ற பெயரில் தமிழர்களுக்காக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. இதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலும், அங்கீகாரமும் முறையாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு களமிறங்கியுள்ள இம்மன்றம் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி ஈசா டவுன் இந்தியப் பள்ளி திறந்தவெளி மைதானத்தில் சன்டிவி புகழ் “அசத்தப் போவது யார் ..” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசத்தல் மன்னர்கள் வடிவேலு கணேசன், கோவை குணா, கோவை ரமேஷ், மதுரை முத்து, மதுரை மருது, வெங்கடேஷ், ராரா பிரபு, மைக்கேல் அகஸ்டின் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். இவர்களுடன் நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமாரும் கலந்து கொள்கின்றார்.

மேலும் விவரங்களுக்கு மன்றச் செயலாளர் கபீர் அஹ்மது [கைப்பேசி: 00973-39404100], கேளிக்கைச் செயலாளர் பாண்டி நாராயணன் [கைபேசி: 00973-39288609) தொடர்பு கொள்ளவும்.

தகவல் : அப்துல் கையூம்

Series Navigation