This entry is in the series 20041007_Issue

ஸ்ரீமங்கை


—-

என் பழையவேட்டியிில்.
இரு இழைகள்….
பச்சையும், இளஞ்சிவப்புமாய்
முறுக்கேறிய இழைகள்…

வேட்டி உறுதியாகத்தான் இருந்தது
இழைகள் பின்னிப்பிணைந்து மூலையோடு
மூலைவரை ஓடியவரை

எந்தவெட்டுப்பூச்சியின் பல்பட்டதோ…
இழைகள் இன்று விட்டுப்பட்டு
தானே வேட்டியென அடித்துக்கொண்டு
இற்றும் போயின…
சண்டையின் சாட்சியாக
அங்கங்கே பொத்தல்கள்..

இழைகளுக்குப் புரியவில்லை
வேட்டி துண்டானால்,
சிசுக்களின் பின்புறம்
நனைந்துகிடப்பதே இனி வாழ்வென.

அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

Series Navigation