பலூன்

This entry is part 46 of 43 in the series 20110529_Issue

ச. மணி ராமலிங்கம்


அழுகைக்கு ஆர்தலாய்
வாங்கப்படுகிறது
சிறுமிக்கான ஒரு பலூன்….

நாள் எல்லாம் விளையாடிய
களைப்பில் ஓய்வெடுக்கின்றனர்
கட்டியில் சிறுமியும்
ஜன்னலில் பலூனும்….

மின்விசிறி காற்றில்
கசிந்து கொண்டிருந்தது
பலூன்காரனின் வாய்காற்று….

ச. மணி ராமலிங்கம்

Series Navigation<< குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)வழங்கப்பட்டிருக்கின்றதா? >>