பனி மழை

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

புஷ்பா கிறிஸ்ாி


வானத்திலிருந்து பனித்துகள்கள்
பஞ்சுத் துண்டங்களாய்

யாாிந்தப் பனித்துகளகளை
அங்கிருந்து இங்கே போடுகிறார்கள் ?

எத்தனை பொிய தலையணை ஒன்று
அதிலிருந்து பஞ்சுப் பொதி
பிய்ந்து துகள்களாகி கீழே விழுகின்றதோ ?

என்ன இது இன்னும்
வானப் பெண்ணின் ஸ்நானம் நடக்கிறதா ?

பெண்ணே நீ குளிப்பதனால்
எமக்கொன்றும் குறைவில்லை

ஆனால் பனி படர்ந்த நிலத்திலே
நடக்கும் போது எத்துணை வழுக்கல்
வாழ்க்கையில் வழுக்காதவர் கூட
உன் வருடலில் வழுக்கிய கதைகள் இங்குண்டு

கஸ்டப்பட்டு வேலை செய்து முடித்து
வீடு வரும் போது பனி தள்ள வேண்டியது
மேலும் வேலை தான்
என்றாலும் பனி கிடந்து அதன் மேல்
நடந்து, வழுக்கி விழும் அவலம் எதற்கு ?

நாாிப் பூட்டு நகர்ந்து விடும் குளிாில்
நாலு பக்கமும் பனிச் சகதி
தள்ளித் தள்ளி களைத்து விட்டால்
தள்ளாடி நடந்து வீட்டினுள் நுளைந்தால்
கொஞ்சம் கோப்பித் தண்ணீர் தரக்கூட
நாதியில்லாத நாட்டில் நாங்கள் இங்கே

***
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி