பனியில் விழுந்த மனிதர்கள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நாவாந்துறை டானியல் ஜீவா


நிலவு பார்த்து நீண்ட நாளாயின. இயந்திர இருப்பில் இறுக்கப்பட்ட வாழ்நிலையில் நித்திரையற்று, நிதானமிழந்து ஈழத்துக்காற்றுக் காவிவரும் கதையோடு பொழுதெல்லாம் போகும். விடிகாலை விரகம் எழுந்து என்னைச் சினக்க வைக்கும். என்னுயிர் மீட்கும், என் மார்போடு ஏதேனும் அணைக்க வேண்டும் போல் இருக்கும். முறிந்துபோன காதல் நிகழ்வு வந்து மனதில் மோதிச் செல்லும்போது விழிப்பொய்கையின் தீர்த்தத்தால் என்னைக் கழுவிக்கொள்வேன். நீட்சியான தொடர் சோக வலையத்திற்குள் கனேடிய வாழ்வும் கசந்து போயிற்றே என்று கவலையோடு இருந்த எனக்கு இரண்டு மாதத்திற்கு முன்தான் மனதிற்குப் பிடித்தமான வாழ்விடம் வாய்த்துக் கொண்டது.

பத்திரிகை விளம்பரம் ஒன்றில் வித்தியாவின் அப்பார்ட்மென்டில் று}ம் வாடகைக்கு இருப்பதை அறிந்து தொலைபேசியில் வித்தியாவிடம் கதைத்துவிட்டு, வித்தியா இருக்கின்ற பில்டிங்குக்குப் போனேன். அவள் கதவைத் திறந்து என்னை வரவேற்றாள். அந்த வரவேற்பின் தன்மையில் உள்ளத்தூய்மை ஒளி வீசியது. கள்ளங்கபடமில்லாத மனசு. சுமார் முப்பத்தாறு வயது மதிக்கலாம். சிவப்பில் மஞ்சள் விழுந்த ரோஜாப்பூ போட்ட இந்ேதூனேசியன் கவுண் போட்டிருந்தாள். உள்ளே அழைத்துச் சென்று று}மைக் காட்டினாள். பின்னர் சோபாவில் இருக்கச் சொன்னாள்.

குசினிப்பக்கமாகப் போன வித்தியா@,

“என்ன குடிக்கிறீங்கள் ? கோப்பியா ? ரீயா ?” என்று கேட்க

“உங்களுக்கு ஏன் வீண் சிரமத்தைஸஸ”

“பரவாயில்லைஸ இதில் என்ன சிரமம்,”

“எதுவென்றாலும் பரவாயில்லை” என்றேன். கணப்பொழுதில் ரீ போட்டுக்கொண்டு வந்தாள்.

“று}ம் பிடித்திருக்கா ?”

“ஓமுங்க, எவ்வளவுங்க சாப்பாட்டோட. . ?”

“முன்னு}ற்றைம்பது டொலர்” என்று உடைந்த குரலில் சொன்னாள்.

“பிரச்சியைில்லை. நான் அடுத்த மாதம் முதலாம் திகதி வாறேனுங்க” என்று சொல்ல, அவள் சம்மதம் முகத்தால் தெரிவித்தாள்.

ஏதோ அவளிடம் கேட்க வேண்டும் போல் என் மனதில் அரித்துக் கொண்டிருந்தது. கேட்டால் ஏதேனும் தவறான புரிதல் நிகழ்ந்துவிடுமோஸ ? கேட்காமல் போனாலும் மனம் நிம்மதியாக இருக்காது. சரி எதற்கும் கேட்டுவிடு என்று மனம் கட்டளையிட்டது முடிவாக@

“ரெலிபோனில் நான் கதைக்கும் போது ஒரு குழந்தையின் சத்தம் கேட்டது போல் இருந்தது அவங்கலக்காணல… ?”

“அது என் செல்வி, அவள் நித்திரையாய்க் கிடக்கிறாள்.”

“உங்கடை அவர் வேலைக்குப் போல. . . ?” அவள் மெளனித்து நின்றாள். எனக்கு ஏன்னென்று விளங்கலை. முகம் கறுத்து ஒருவித சோகம் அவளில் உறைந்தது.

“ஏதேனும் தவறாய்க் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.” என்று மிகவும் உடைந்த குரலில் சொன்னேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் கன்றாவிக் கதையைச் சொல்வதென்றால் இப்ப நேரம் போதாது. அது ஒரு சோகக் கதைஸ.” என்றாள். நான் சோபாவை விட்டு எழுந்து கதவை நோக்கி நடந்தேன். ஏதோ சோகம் முகத்தில் என்னில் படர்ந்து, என் நெஞ்சை அழுத்தியது. கதவைத் திறந்து வழியனுப்பினாள்.

முதல் சந்திப்பிலேயே என் மனதுக்குப் பிடித்துவிட்டது அளந்து பேசுகின்ற வார்த்தைகள், அடக்கமான குரலில் எதையும் தெளிவாச் சொல்லுதல், அடிக்கடி அலட்டிக் கொள்ளாத தன்மை, மற்றவர்களை மதிக்கின்ற தன்மையாயினும் அவளுக்குள் ஒரு சோகம் குடியிருக்கிறதை வீட்டிற்கு வந்த பின்னர்தான் அறிந்தேன்.

வித்தியா ஊரில் இருந்தபோது கல்யாணம் நிச்சயமானது. கனடா மாப்பிள்ளை என்ற காரணத்திற்காகவே அவளுடைய பெற்றோர் செய்து வைத்தார்கள். பின்னர் வித்தியாவின் கணவர் ‘ஸ்பொன்சர்ஸ செய்ய இங்கு வந்துவிட்டாள். இங்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே அவனோடு வாழ முடிந்தது. வித்தியாவின் கணவனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு தொடர்பிருந்தது. அதனால் அவர் அடிக்கடி வீட்டிற்கு லேட்டாக வருவதை வித்தியா அவதானித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் காரசாரமான, விவாதத்தின் பின் கணவர் வீட்டிற்கு வரவேயில்லை. ஒரு நாள், இரண்டு நாள் என்று காத்திருந்து வருடங்கள் பல போயின. வித்தியா கல்யாணம் செய்யும்போது சொல்லிய வாக்குறுதியெல்லாம் உலர்ந்து பேயின.. அவள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மனதால் நொறுங்கினாள். காலம் அவள்மீது கருணை காட்டவில்லை. வித்தியா கர்ப்பமாகி செல்வியை பெற்றெடுத்தாள். இப்போது ‘விவாகார ரத்துக்கு’ விண்ணப்பித்திருந்தாள்.

ஞாயிறு வேலையில்லாததால் சொஞ்சம் தாமதமாகவே எழும்புவது எனக்கு விருப்பம். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. என் அறையின் கதவு தட்டப்பட்டது. நிச்சயம் செல்வியாகத்தான் இருக்க வேண்டும்.

“உள்ளே வரலாம்ஸ’’ என்று குரல் கொடுத்தேன். கதவைத் திறந்து செல்வி வந்தாள்.

“மாமா குட்மோனிங்.. அம்மா உங்களை ேதுத்தண்ணி குடிக்க வரட்டாம்’’ என்றாள்.

“பத்து நிமிடத்தில் வர்றன் என்று சொல்லு”.

செல்வி “சரி மாமா” என்று சொல்லிக்கொண்டு கதவைச் சாத்திவிட்டுப் போனாள்.

என் மனம் கடந்த கால நிகழ்வுக்குள் சென்றது. தமிழகத்தில் நான் இருந்த காலம் அது. ஒரு வசந்த காலம்தான். அரசியல் , இலக்கியம் என்று விரிந்த வாழ்வுலகம். எப்போதும் நள்ளிரவு இரண்டு மணிவரை ஏதேனும் படித்துக் கொண்டிருப்போன். நான் ஒரு நண்பனின் வீட்டில்தான் இருந்தேன். அவ்வப்போது எனக்குள் எழுகின்ற உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளால் ஒரு நாட்குறிப்பில் எழுதி வைப்பேன். மனதில் சோகம் அப்பிக் கொண்டாலும் அதன் வடிகாலாய் அந் நாட்குறிப்பிலேயே பதிவாகும். என் நண்பனுக்கு ஒரு தங்கை@ அவள் பெயர் சீதா. கொஞ்சம் கறுப்பாயிருப்பாள். அவளின் கூந்தலுக்குள் சிலவேளை காணாமல் போய்விடுவேன். கருமையும், நீளமும், அடர்த்தியும் கொண்ட தலைமுடியான எந்தப் பெண்களைப் பார்த்தாலும் அவற்றை ரசிக்க வேண்டும்போல் என் மனம் சொல்லும். சீதா ஏற்கனவே ஒரு பையனைக் காதலித்துக் கொண்டிருக்கிறாள். ஏதேனும் சிக்கலென்றால் கூட என்னிடம்தான் ஆலோசனை கேட்பாள். நானும் மனம் திறந்து கதைப்பேன். என் நாட்குறிப்பை நான் வீட்டில் இல்லாத வேளை அவள் வாசித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஒரு நாள் கண்கள் கலங்கியவாறு, என்மீது இரக்கபட்டு நாட்குறிப்பிலிருக்கின்ற விடயத்தைப்பற்றி என்னோடு பகிர்ந்தாள். அதில் எழுதியிருந்த விடயத்தில் சிலவற்றை நினைவில் வைத்து என்னிடம் அவள் சொல்கிறாள்…

“இன்றிரவு தூங்குவதற்கு முன் நாட்குறிப்பின் பக்கத்தைத் திருப்புகிறேன். இன்று மாசி பத்தாம் திகதி. என் இனியவளின் பிறந்தநாள். அவள் இவ்வேளை கனடாவில் என்ன செய்கிறாளோ தெரியலை. ஆனால் எனக்குள் அவளின் நினைவைச் சுமக்கின்றேன். தொடர்பு கொள்ள முடியாத சூழலில் எப்படி அவளுக்கு விருப்பமில்லை என்று முடிவெடுப்பது. அதுமுதல் காதல் என்பதால் என்னில் நெடிய வலியை ஏற்படுத்தி விட்டது. அன்றொரு நாள் மார்கழியின் முன்னிரவில் அவளிடமிருந்து விடை பெற்று தமிழகம் வந்தேன் கண்ணீர் கசிவோடு தவிர்க்க முடியாமல் பிரிவாயிற்று. அதன் பின்னர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாத வேளையில் இருந்தபோதுதான் அவள் கனடா சென்றதாக அறிந்தேன்ஸ.”சீதா மனப்பாடம் செய்திருந்த எனது நாட்குறிப்பில் ஒருநாள் பதிவை எனக்கு சீதா சொன்னபோது@ கலாவின் நினைவுதான் மீண்டும் எழுந்தது.

காதல் ஆண்களைக் கொல்வதைப்போல் பெண்களிலும் நிகழ்வதுண்டா ? அப்படி நிகழ்ந்திருந்தால் ஏன் இன்னும் தொடர்பு கொள்ளாமல் அவளால் இருக்க முடியும். . . ? சில வேளை என் முகவரி அவளுக்குக் கிடைக்காமல் இருக்கலாம்தானே என்று மனதுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சீதாவை நிமிர்ந்து பார்த்தேன். அவளின் முகம் ஏனோ சோகத்தில் வாடிக்கிடந்தது.

“ஏன் ராஜா எப்போதோ காதலித்தீர்; என்பதற்காக இப்போதும் அதையே நினைத்து மனதால் நொந்து கொண்டிருக்கிறீரேஸஸ இளமையின் துடிப்பில் எழுச்சியில் எழுந்த உணர்வால் அவளிடம் உமது மனதை பறிகொடு;த்தீர் இல்லை யென்னவில்லை. எப்போ வாய்ப்பு வருமென்று சில ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது நீர் மட்டும் அந்தக் காதலுக்காய் நினைவால் அழுது கொண்டிருக்கிறீர். அதுதான் தவறென்கிறேன்ஸ.” என்றாள்.

“என்னைப் பொறுத்தவரையில் அது முதல் காதல்… காதல் என்றால் என்ன என்று அறியமுன் எழுந்திருக்கலாம். ஆனால் என்னுள் அது ஏற்படுத்திய மாறுதல்கள் எண்ணிக்கையற்றவை. அவளோடு நெருங்கிப் பழகவில்லையென்றாலும் அவளை ரசித்தேன். அவளின் பார்வையின் தெறிப்பில் என்னையிழந்தேன். எனக்குள் அவள் நினைவுகள் அத்தனையும் பதிவாய்யுள்ளன. அவளோடு வாழ்ந்தாக நினைத்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நினைவு உறங்காது. விழித்துக் கொண்டிருக்கின்றதுஸ”

“சொறி ராஜா உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்வும். ஆனால் என்னைப் பாருங்கள். நானும் ஒருத்தரை காதலிக்கிறேன். அவரோடு நிறையவே கதைக்கின்றேன். வாழ்ககையின் புரிதல், நோக்கு போன்றவற்றைப் பற்றியெல்லம் கதைப்பதுண்டு. ஆனால் அவன் அதைப்பற்றி எதுவுமே கவலைப்படுவதில்லை. அதேபோல் நானும் பொரிதாக அன்பு வைத்து பழகமுடியாத நிலையில் தாமரைத் தடாகத்தில் நிற்கும் நீர்போல் என் நிலை. ஆனால் ஒரு வேளை பிரிதல் என்று நிகழ்ந்தால் கூட நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நடந்தவற்றை ஒரு கனவாய் நினைத்து மறந்து விடுவோம். ஆனால் நீங்கள் அப்படியில்லை. அதுக்காக வாழ்ந்து@ அதற்காகவே அழிந்து போவீர்கள் போல் தெரிகின்றது. அதனால் தான் உங்களை நினைக்க கவலையாக இருக்குது’’ என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே

நண்பன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“என்னம் தூங்கலையெ” என்று கேட்டான்.

“இலலை, சாப்பிட்டபின் சாப்பாடு செமிப்பதற்காக இருவரும் கதைத்துக் கொண்டிருந்து விட்டோம். நேரம் போனது கூட தெரியல்லை” என்று சிரித்துக் கொண்டு சொன்னேன்.

“திருச்சிக்குப் போக வேண்டியதை மறந்திட்டாய்… ? நாளைக்கு வேளைக்கு எழும்ப வேண்டும்.காலையில் பஸ் எடுத்தால்தான் பின்னேரம் இலக்கியக் கூட்டத்திற்குப் போகலாம் அப்படியே உச்சிப்பிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம், திருவானைக் கோயில் எல்லாம் பார்க்கலாம். இரவு கே.கே. நகரில் சுந்தர் வீட்டில் தங்கியிருந்து மறுநாள் காலை சென்னைக்குத் திரும்பலாம்” என்றான்.

நான் பேசாமல் தலையை அசைத்தேன்.

சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில்தான் ஒரு நாள் நானும் சீதாவும் வீட்டில் இருந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்விட்டு@ மத்தியான வெயிலின் வெக்கை கண்ணை மசக்கி தூக்கத்திற்கு கொண்டுபோனது. நான் கட்டிலில் கொஞ்சம் அசதியாகிவிட்டேன். சீதா கட்டிலுக்கு பக்கமாக இருந்த மேசையின்மேல் தலையை வைத்தபடி கட்டிலில் இருந்தாள். திடாரென…. என்னை சீதா எழுப்பினாள். நான் திடுக்கிட்டு விழித்தேன்.

“ராஜா என்னை விட்டுட்டா தூங்கிறாய்ஸ. ?” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனித்தேன். கணப்பொழுதில்…

“ஏன் சீதா நீ தூங்கலயா… ?”

“மேசையில் தலையை வைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் தூங்கலஸ”

“ஏன்… ?”

“உன் நினைவு என்னைக் கொல்லுதுஸ.”

“என்ன சொல்ற…உனக்கென்ன பயித்தமா பிடிச்சிட்டுதுஸ.”

“ என் காதல் வாழ்வு முறிந்து விட்டது.” நான் விக்கித்துப் போனேன்.

“என்ன நடந்தது ?”

“அவன் வேறும் சுகம் தேடும் காமுகன். அதனால் எனக்கு பிடிக்கலே@ நேற்றையோடு அவனை கை கழுவி விட்டேன்”. நான் எதையோ இழந்தது போல் நினைக்க…

“அவள் என்னைப் பார்த்து இதையெல்லாம் நானே பெரிதாக எடுக்கல, நீ ஏன் அதைப்பற்றி யோசிக்கிறாய் ? ராஜா உனக்குப் பிடித்தமான ‘பிளேன் ரீ’’ போட்டுக்கொண்டு வரட்டா… ?”

“சரி போட்டுக்கொண்டு வா..” என்றேன். இரண்டு கப்பில் தேநீர் போட்டுக்கொண்டு வந்து எனக்கு ஒன்றை தந்தாள். நான் சொஞ்சம் கண்களை மேலே உயர்த்தி அவள் கையில் வைத்திருந்த தேனீர்; கோப்பையை எட்டிப்ப பார்த்தேன். அந்தக் கோப்பையிலும் வெறும் தேனீர்தான்ஸ.

“ஏன் சீதா நீ பிளேன் ரீ குடிக்கிறதில்லையே ? இப்ப திடாரென.. ?”

“ ராஜா இனிமேல் உங்களுக்கு எது பிடிக்கிறதோ… அதெல்லாம் எனக்குப் பிடிக்கும்ஸ.”

“ என்னில் உனக்கு எதுவெல்லாம் பிடிக்கும் ?”

“குஞ்சுமுகம் பிடிக்கும், குறுந்தாடி பிடிக்கும். உன் கவிதை பிடிக்கும். மொத்தத்தில் உன்னையே பிடிக்கும்ஸ.”என்று சொல்லிக் கொண்டு என்னை தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட முயன்றாள். அவளின் பேச்சில் என்னை மறந்திருந்த எனக்கு நெஞ்சோடு அணைத்தவுடன் கோபம் வந்தது… “சீதா இதை என்னோடு வைத்துக்கொள்ளாதே. நீ நினைக்கிற நிலையில் நான் இல்லை. இண்டையோட இந்தச் சேட்டையெல்லாத்தையும் நிறுத்து! ஒரு மனிதன்மீது அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ஆதிக்கம் செலுத்துகிறாய். இவ்வளவு நாளும் உன்னை என் சகோதரியாக நினைத்துத்தான் பழகினேன். நீ இப்படி நடந்து கொள்வாய் என்று கனவில்கூட நான் நினைக்கல….

“ராஜா இப்பவும் சொலெ;றன், எப்போதே நிகழ்ந்த ஒன்றுக்காய் வாழ்றாயோ அதுதான் தவறு. நான் உன்னை இன்று விரும்பினதாக நீ நினைக்காதே உன்னுடைய ஒவ்வொரு செயலும் என்னைப் பாதித்தது@ எனக்குள் மாறுதல்களை உண்டு பண்ணியது. இன்று சொல்லாவிட்டாலும் உன் பதிலுக்காக காத்திருப்பேன்ஸ..”என்றாள்.

எப்படியோ மூன்று வருடம் ஒடிவிட்டது. நான் மீண்டும் யாழ்ப்பாணம் போய்விட்டேன். சீதாவும் வெளிநாட்டு விடயம் சரிவராமல் மன்னாருக்கு திரும்பி வந்து விட்டாள். சீதாவை அவள் வீட்டுக்கார் திரமணம் செய்ய வற்புறுத்தினார்கள். அவள் விரும்பவில்லை. எனக்கும் அவளுக்கும் மட்டும்தான் காரணம் தெரியும். பின் அவளுடைய நண்பியிடம் ஒரு கடிதம் மன்னாரிலிருந்து கொடுத்து அனுப்பினாள். அக்கடிதத்தில்ஸஸ..

எனக்குப் பிரியமானவரே!

நான் நலம், நலம் அறிய ஆவல். என்னைத் திருமணம் செய்யும்படி எனது வீட்டார் வற்புறுத்துகின்றார்கள். நான் என்ன முடிவு எடுப்பதென்று புரியாத நிலையிலுள்ளேன். நீ எனக்குள் வாழ்கிறாய்.. அப்படி இருக்கும்போது இன்னொருவனுக்குச் சொந்தமாவது எப்படி ? என் இதயம் உன்னைச் சுமந்து நெடுநாளாய் வாழ்கின்றது. தமிழகத்தில் வாழ்ந்த வாழ்வே இன்னும் எனது இருப்பை இனிமையாக்கிக் கொண்டிருக்கின்றது. எப்படியாயினும் உனது பதிலை கொடுத்தனுப்பி விடவும். அப்படி அனுப்பவில்லையாயின் நீ இன்னும் என்னை விரும்பவில்லையென்றே முடிவெடுக்கலாமென்று நினைக்கிறேன்.

என்றும் உன்னை நேசிக்கும்

சீதா

நான் கடிதத்தை வாசித்து முடித்ததும் என் கண்கள் கலங்கியது. ஏன் இன்னும் என் மனம் கனடாவி;ல் வாழ்கின்ற கலாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது… ? சீதா வேறு ஒருவனை காதலித்து கைவிட்டதாலா….சீதாவை விரும்ப மறுக்குது மனசு. என் மனம் ஒரு கணம் சஞ்சலப்பட்டது. சீதாவின் அண்ணன் என்னை கவனித்த விதம் எல்லாம் என் மனதில் தோண்றி மறைகிறது. நான் பதில் கடிதம் கொடுத்து விடவில்லை.

சீதா இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள்!

நான் யாழ்ப்பாணத்திலிருந்த போதுதான் இந்திய இராணுவம் ஈழத்தின் மீது போர் தொடுத்தது. அதன் பின்னர் ஊர் ஊராய் அகதியானேன். யுத்தம் முடிவுக்கு வருவதற்குள் கொழும்பு வந்து விட்டேன். கொழும்பிலிருந்து ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தினு}டாக கனடா வந்தபொழுது கலாவைத் தேடினேன். கண்டுபிடிக்க முடியலை. ஒரு நாள் வோர்டன் அன் பின்ஞ்சிலுள்ள கே. மாட் கடைக்குள் எதிர்பாராத விதமாகச் சந்தித்தேன். தள்ளுவண்டியில் ஒரு குழந்தையோடு… விக்கித்துப் போனேன். இருவரும் பேச முடியாத அமைதி. ஏதோ போன ஜென்மத்தில் எங்களுக்குள் ஒரு உறவு படர்ந்தது போல் பார்வையின் தெறிப்பு….

“என்ன கலா எப்படி இருக்கிறீர்… ?

“எப்படியோ இருக்கிறேன்ஸ..” அவளின் பதிலில் ஒருவித விரக்தி தென்பட்டது.

“குழந்தை உன்னைப் போலவே இருக்குதல்லஸ”. மெளனவிரதம். அவள் கண்கள் கலங்கின. ஏதோ சொல்ல முனைவதுபோல் அவள் எத்தனித்தாள்.

“ராஜா உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்ஸ. ?”

“இன்னும் கல்யாணமே செய்யல….” கண்களிலிருந்த கண்ணீர்த் துளிகள் மெதுவாக கன்னத்தில் படிந்தது. “ஏன் அழுகிறீர்… ?”

“அழாமல் என்ன செய்ய..! எல்லாம் முடிந்து போனது@ என் வாழ்வும்தான்.

‘என்ன நடந்தது… ?”

“இந்தக் குழந்தை கல்யாணத்தின் விளைபொருள். ஆனால் கல்யாண வாழ்வு அஸ்தமித்துவிட்டது.”

“என்ன சொல்றீங்க கலா…”

“நான் ‘தனித்தாய்’ வாழ்க்கை” என்று சொல்லியபடி விழிகளைத் துடைத்துக் கொண்டாள். நான் வேலைக்குப் போறதற்கு நேரமாகுது என்று சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்க,

“ராஜா உங்கட ரெலிபோன் நம்பரைத் தாங்ங்களென் ?” என்று கேட்டாள். எனக்கு விசர்க் கோபம் வந்தது. ஏதேனும் அவளுக்குச் சூடான பதில் சொல்லணும் போல் தோன்றியது.

“முற்றுப்புள்ளி வைத்த கதையை இனி தொடர விரும்பவில்லை’’ என்று சொல்லிக் கொண்டு கடைக்கு வெளியே நடந்தேன்.

“மாமா.. மாமா..” என்று மீண்டும் செல்வி கதவைத் தட்டினாள். என் கடந்த கால நினைவிலிருந்து மீண்டேன்.

“செல்வி கதவைத் திறந்து வாங்களென் உள்ளே’’என்று குரல் கொடுக்க@ செல்வி உள்ளே வந்தாள். “மாமா உங்களுக்கு ரெலிபோன்ஸ. ரெலிபோனை கதைச்சுப் போட்டு மம்மி உங்களை வெளியில வரட்டாம். தேத்தண்ணி குடிக்க..” என்று சொல்லிக் கொண்டு கதவைச் சாத்திவிட்டுப் போனாள்.

“ஹலோ…!”மறு முனையில் நண்பன் சக்தி.

“என்ன வெள்ளணத்தோட… ?”

“இண்டைக்கு பின்னேரம் என்ர பிள்ளையின்ர பிறந்த நாள். ஒருத்தருக்கும் சொல்லல. என்ர பிரண்டுகளுக்கு மட்டும்தான் சொல்றன். நீ உன்ர வீட்டுக்கார அக்காவையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வாவன்ஸ..” “இல்ல நான் மட்டும் வாறேன்’’

“ஓ.கே. பாய்” என்று தொலைபேசியை துண்டித்தேன். என்னைக் கூப்பிட்டது சரி. ஆனால் ஏன் என் வீட்டுக்கார அக்காவை அழைத்துக்கொண்டு வரச் சொன்வது எந்த வகையில் நியயாம்… ? போன கிழமை சக்தி வீட்டுக்குச் சென்றபோது சக்தியோடு ஒரு கணம் கதைத்தவை என் நினைவுக்கு வந்தது. “மச்சான் நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கையில்லை. நீண்ட விரக்தியில் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறாய். அது பிழையான விடயம். ஒரு பெண் செய்கின்ற தவறுக்காக எல்லாப் பெண்களையும் அதே நிலையில் வைத்துப் பார்ப்பதுதான் தவறு. உதாரணத்துக்கு வித்தியாவை எடுத்துககொள். தன் கணவனைத் தெய்வமாக நினைத்தவள். ஆனால் இன்னொரு பெண்ணுக்குக் கணவனாய் இருந்தான் அவன். அதனால் அவள் அவனை வெறுத்தாள். இப்போ விவாகார ரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறாள்;;’’.

“சக்தி இப்ப நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய் ?”

“வித்தியா நல்லவள். உன்னால் முடிந்தால் அவளுக்கு வாழ்வு கொடுக்கலாம்ஸ.”. சக்தி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டு,

“வித்தியாவிற்கு ஆட்சேபணையில்லையென்றால் நான் அவளைத் திருமணம் செய்கிறேன”; என்றேன். சக்தி மீண்டும் மெல்லிய குரலில், மகிழ்வோடு… நான் ஏற்கனவே வித்தியாவிடம் கேட்டுவிட்டேன். அவளுக்கு விருப்பம் என்று என்னிடம் சொன்னவள்.நீ யோசித்து முடிவொன்றுக்கு வாஸஇப்படியே எத்தனை நாளுக்கெண்டு இருக்கப் போறஸஸ”.ஒரு கணம்தான் நினைவிலிருந்து நான் மீண்டேன்.கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

(முற்றும்)

daniel.jeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஜீவா

நாவாந்துறைடானியல்ஜீவா