பந்தயங்கள்
ராம்ப்ரசாத்

வாசங்களைத் துரத்துவதான
பந்தயங்களில் பிரதானமாகிவிடும்
போட்டிகளில் வாசங்களே
ஊழாகிறது…
ஊழ்கள் பிரதானமாக்குகின்றன
வாசங்களையும், நிறங்களையும்…
பிரதானங்களின் நீரோடைகளில்
மிதக்கின்றன நாட்டங்களும், தேவைகளும்…
கானலின் பூக்களுக்கான இக்கரையும்
வண்டுகளுக்கான அக்கரையும்
சார்பியல் முரண்பாட்டின்
அத்துவானப்புள்ளிகளாகின்றன…
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)