This entry is in the series 20051021_Issue

தேவமைந்தன்


வெற்று மேசைமேல்
அந்த ஒற்றைத்தாள்
காற்றில் இரவெல்லாம் படபடத்து
தூக்கத்தை
கலைத்துப் போட்டது
காரணம்
அந்த ஒற்றைத்தாள்மீது
ஆகக் கனமாய்
அமர்ந்திருந்தது
பேப்பர் வெய்ட்
என்பார்கள் அதை
சர்வ வியாபகமான காற்று
ஒற்றைத்தாளின்
டென்ஷன் தாங்காமல்
அதைக் கிளப்பிப் போட
எவ்வளவோ முயற்சி செய்தது
ஊஊஊஹூம்
தோற்றது காற்று
புரண்டு புரண்டு
படுப்பதை விட்டு
நானாவது எழுந்து
அந்தப் பேப்பர் வெய்ட்டை
எடுத்து அந்தப் பக்கம்
வைத்திருக்கலாம்
நார்மல் வகையறா நான்
தூக்கம் கெட்டாலும் கெடுவேன்
இன்னும் விடாமல்
படபடத்துக் கொண்டிருக்கும்
அந்த ஒற்றைத்தாள்
யாரைச் சபிக்கும்

****
pasu2tamil@yahoo.com

20051021_Issue

சுவாசலயம்