படைப்பு

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

ஜி.எஸ். தயாளன்


தன் வலியின் உக்கிரத்திற்கு ஏற்ப
சிறு குழந்தை உரக்க அழுகிறது
தீராத தன்வலி கண்ணீராய் கரையக்கரைய
குழந்தை அழுதழுது ஒய்க்கிறது
இன்னும் கொஞ்ச நேரத்தில்
சிரித்து விளையாடத் தொடங்கும்
அக்கணத்தில் கண்டடைந்த தன்விளையாட்டை குதூகலித்து
உனக்கு இதுபோல் முடியாது என குரலிட்டதற்கும்
பணிந்துவிடாதே உள்நோக்கிப்பார் என மறுகுரலிட்டதற்கும்
தாழ்ப்பணிந்து
குஞ்சாமணியை திறந்து பார்த்தேன்
வளர்ந்த குழந்தையுடையதாய் இருந்தது
சிறு குழந்தையுடையதாய் அது மாறும் நாளில்
எனது தன்வலி
தன் அழுகை
தன் விளையாட்டு
எல்லாவற்றையும்
படைத்துவிட முடியும்.


gsdhaya@mail.com

Series Navigation

படைப்பு

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

வை.ஈ. மணி


முடி காண முயன்று சென்று
—– மலர் கண்டு மருண்டு நின்று
கடி தேனும் நாணம் இன்றி
—– வழு வுரைத்துத் தலையி ழந்த

உயிர், மேலும் உணர்வு சேர்ந்த
—– உடல் படைக்கும் பிரமன் மேலா ?
பயன் ஈர்க்கும் களிமண் கலங்கள்
—– பல படைக்கும் குயவன் மேலா ?

உயிர் பிரிந்த பிறகு வேகும்
—– உடல் சுடாத மண்ணை ஒக்கும்
பயன் படாது சுட்ட பின்னும்
—– புதிர் அன்றோ பிரமன் படைப்பு

உயிர் அற்ற மண்ணைக் குழைத்து
—– கலை வடிவம் பெற்ற பானை
நிறம் சிவக்க வெந்து மனிதன்
—– பயன் அடைய உதவக் காணீர்

எழும் விநாவின் விடையைக் காண
—– எவர் உள்ளார் பிரமன் அன்றி ?

ntcmama@pathcom.com

Series Navigation