படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

விஜயன்


நவம்பர் 12 – சத்தியமூர்த்தி பவனில் பயங்கர வன்முறை இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அரிவாள் வெட்டு. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியின் தோற்றமும் மாற்றமும் பற்றிய நம் படிமங்களை மறு பரிசீலனை செய்கிறது.
1885ல் ஆலன் அக்டோவியஸ் ஹய+ம், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் நேஷனல் காங்கிரஸ் அன்று இருந்த பிரிட்டிஷ் அரசில் படித்த இந்திய இளைஞர்களுக்கு போதிய பங்கு வேண்டும் என்பதற்காக மட்டும் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த இயக்கம் இந்தியாவின் சுதந்திர இயக்கமாக பரிணாம வளர்ச்சி பெற்று “திலக்” போன்ற தீவிரவாத சுதந்திர கொள்கையும், கோகலே போன்ற மிதவித சுதந்திர கொள்கையையும், உள்ளடக்கிய இயக்கமாக இருந்தது.
1918ல் காந்தியின் வரவுக்குப் பின்னால் காங்கிரஸ் இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கினைந்து அவரின் சத்ய சோதனையான அகிம்சை சத்யதிரகம் போன்ற பண்புகளுடன் மும்பையிலிருந்து இந்தியா முழுவதிற்கும், ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது; 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அடுத்து, 1947ல் சுதந்திரமடையும் வரை ஒரு மக்கள் இயக்கமாக இருந்து வந்தது. காங்கிரஸ் என்றால் கதர், ராட்டை, அகிம்சை சத்யாகிரகம் போன்றவை படிமங்களாக இருந்தது. சுதந்திரமடைந்தபின் காந்தியடிகள் காங்கிரஸ் கட்சி குறிக்கோளை அடைந்துவிட்டதால் கலைக்கச் சொன்னார்.
1950ல், கட்சி ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம் வந்ததால்; இந்தியன் நேஷனல் காங்கிரஸ் இயக்கம், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்து 1950லிருந்து 1969 வரை ஆட்சியிலிருந்தது.
நேருவின் மறைவுக்கு பின்னால் பழைய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் எனப் பிரிந்து பின்னர் இந்திரா காங்கிரஸே தற்போது, இந்தியன் நேஷனல் காங்கிரஸ். புழைய காங்கிரஸ் ஜனதாவில் இணைந்து, தற்போது சுப்பிரமணிய சாமி ஒருவர் தவிர ஜனதா என்ற ஒரு கட்சி, ஆங்கிகாரம் பெற்ற கட்சியின் பட்டியலில் இல்லை. அது வெறும் லெட்டர் பேட் கட்சி.
தற்சமயம் கட்சி அரசியல், ஜனநாயக அரசு முறையில் ஆட்சிக்கு வரும் நிலையில் உள்ள எந்த கட்சியும், உட்கட்சி ஜனநாயக முறையாய் தேர்தல் வைப்பதில்லை. பெரும்பாலும் அதன் வசீகரத் தலைமையின் இச்சைக் கேற்பவே கட்சி ஜனநாயகம் இருக்கிறது. கட்சி அரசியல் வேறுபாடின்றி “தனிநபர்” செல்வாக்கும், வாரிசு அரசியலுமே தலை தூக்கிநிற்கிறது; சோனியா முதல் கலைஞர் வரை, தேவகவுடாவிலிருந்து குமாரசாமி வரை
இந்திய ஜனநாயகத்தில் “கட்சியின் பெயர்” காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம், சிபிஐ, திமுக, அதிமுக போன்றவை, வெறும் குறியீடுகளே. பதவியைப் பிடிக்கும் குணத்தில் யாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதை ஆரம்பத்தில் சொன்ன செய்தி நிரூபிக்கிறது. காமராஜரின் மேற்கோளான “ஒரே குட்டையில் ஊறிய மட்டை” இன்று மத்திய, மாநில கட்சிகள், அனைத்துக்கும் பொருந்தும் ஒரு விஷயம். சத்யமூர்த்தி பவனில் நடக்கும் வன்முறை எல்லாகட்சியிலும் நடக்கிறது.
“யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே அட அண்டை காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே” என்ற கவிஞரின் வரிகள் இந்திய வாக்காளர்களுக்காகவே எழுதியது என்று நினைக்கிறேன்.
கர்நாடகாவில் ஜனதாதளம், பிஜேபி ஆட்சி சிக்கலை ஐந்து வாரம் முன்னால், எழுதும்போது, குமாரசாமி எப்படி தனது 20 மாத ஒப்பந்தம் முடிந்தவுடன் அக்டோபர் 3ம் தேதி பிஜேபியிடம் ஆட்சி மாற்றம் செய்து, ஒப்பந்தத்தை கன்னியமாக நிறைவேற்றாதது தவறு என்று எழுதினேன். 356ல் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்தபின் 40 நாள் இழுபறிக்குப்பின், ஞானம் திரும்பி “சம்திங் இஸ்பெட்டர் தென் நத்திங்” என்ற யதார்த்தம் புரிந்தபின், மீண்டும் ஜனநாயக அரசு தொடர்ந்தது. எத்தனை நாள் என்பது, பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
டிவி நிகழ்சிகளில், சிறிய இடைவேளைக்குப் பின் நிகழ்ச்சி தொடரும் என்று சொல்லும் பல நிகழ்சிகளில், இடைவேளைக்கும், தொடர இருக்கும் நிகழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போல மக்களைப் பொறுத்தவரை கட்சி அரசியல் என்பது ஒரு ஈவண்ட் மேனேஜ் மெண்ட் தேர்தல் என்கின்ற நிகழ்ச்சியை நடத்தும் பண பலம், ஆள்பலம் உள்ள குழுவே இன்றைய கட்சி அரசியல். 1918ல் காந்தி கண்ட மக்களியக்கம் அல்ல. “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொருக் கவலையில்லை” என்று நினைப்பது கூட சரிதானோ?


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்