படிகளின் சுபாவம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

பா.சத்தியமோகன்


எவரோ சிந்தித்து அமைத்த படிகளில்
பத்திரமாக நடந்து கடக்கிறோம்
வருடங்கள் உருண்டு செல்ல
பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே
நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை
‘என்னைப் பிடித்து என் வழி நடந்து போ ‘ என்று
படிகள் ஒன்றும் அழுததில்லை
குற்றம் சொல்லவே பிறந்தார் சிலர்
படிகள் என்ன செய்யும் பாவம்
குறைகள் கூறுதல் சுலபம் படிகள் அமைத்தல் கடினம்.
——————-
cdl_lavi@sancharnet.in

Series Navigation