பச்சை சிவப்பு தக்காளி சோளம் சூப்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

லாலெனா


கடினமான பிரட், சோர்டோ பிரட் ஆகியவற்றுடன் சீஸ் சேர்த்து சாப்பிட இனிய சூப்

சூப் 4 முதல் 6 கோப்பைகளுக்கு

தேவையான பொருட்கள்
2 மேஜை கரண்டி ஆலிவ் ஆயில்
1 பெரிய வெங்காயம் தூளாக வெட்டியது
1 பூண்டு பல் தூளாக வெட்டியது
1 1/2 தூளாக்கிய ஜீரகம்
4 பச்சை தக்காளிகள் தூளாக வெட்டியது
4 சிவப்பு தக்காளிகள் தூளாக வெட்டியது
1 1/2 கோப்பை புத்தம்புது சோளப்பற்கள்
7 கோப்பை வெஜிடபிள் பிராத்
உப்பு மிளகு ருசிக்கேற்ப

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு ஆகிய்வற்றை மிருதுவாக ஆகும்வரை வதக்கவும்

ஜீரக தூள் தக்காளி சோளம் ஆகியவற்றை சேர்த்து நடுத்தர தீயில் 5 நிமிடம் வதக்கவும்
இத்துடன் வெஜிடபிள் பிராத் சேர்த்து சூட்டை குறைத்து நன்றாக வேகவிடவும்.

இத்துடன் மிளகு உப்பு சேர்த்து பறிமாறலாம்

Series Navigation

லாலெனா

லாலெனா