நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பெப்ரவரி 27, 2004


மத்திய நைஜீரியாவில் இனக்கலவரங்கள் காரணமாக சுமார் 50 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதெரியவந்திருக்கிறது.

பெரும்பான்மை கிரிஸ்துவ சமூகத்தினரை ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி கொன்றார்கள் என்று யெல்வா போலீஸார் தெரிவித்தார்கள்.

இந்த குழு அருகாமை சர்ச்சுக்கு ஓடி அங்கு தப்பிக்க முயன்றார்கள். அங்கும் தீவிரவாதிகள் துரத்திச் சென்று கொல்லப்பட்டார்கள் என்று மாநில போலீஸ் கமிஷனரான இன்னோசண்ட் இல்ழுஓகே தெரிவித்தார்.

அதன் பின்னரும் வன்முறை தொடர்ந்தது என்றும் இறுதி எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பெப்ருவரி மாதத்தின் ஆரம்பத்தில் இந்த பிரச்னை தீவிரமடைந்தது. அப்போது கிரிஸ்துவ தீவிரவாதிகள் முஸ்லீம் சமூகத்தினரை வாஸே மாவட்டத்தில் கொன்றார்கள்.

நில உரிமை மற்றும் மேய்ச்சல் பிரச்னைகள் போன்றவை இவ்வாறு இனமக்களை கொரில்லாப்போரில் ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் சென்ற 2001ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1000 பேர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறத். நைஜீரியா அரசு இந்த பிரச்னைகளின் காரணமாக இங்கு ராணுவத்தை நிறுத்திவைத்திருக்கிறது. யாரையும் கைது செய்யவில்லை என்றாலும் பிரச்னை கட்டுக்குள் அடங்கியிருப்பதாக போலிஸ் கூறுகிறது.

(Voice of America News)

http://www.africaonline.com/site/Articles/1%2C3%2C55202.html

—-

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்