நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

கே ஆர் மணி


அவைக்கு என் அன்பான வணக்கங்கள் ! வந்தனம் ! ஸ்வாகதம் !

நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்.

அறுபது புத்தகங்கங்கள், மொழிபெயர்ப்புகள், கதை திரட்டுக்கள், இருபத்தியைந்து வருடமாய் சீராய் இயங்கிவரும் ஒரு சீனியர் எழுத்தாளரை மும்பாய் இலக்கியசந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும் அவரது நாவலை சார்ந்த என் வாசகனுபவத்தை பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சிதான். நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதையை நவீன நாடகமாக்கிப் படைத்த நண்பர்களுக்கு நன்றிகள்.

இந்த நாவலில் – உத்யோகம் பார்க்கும் தம்பதியர்கள். அவர்களுக்கான தனிக்குடித்தனம் ஒரு பெண் குழந்தையோடு. ஒட்டம்,
வேலை, குழந்தை என்கிற வேகத்தில் மறு குழந்தைக்கான அவசியமும் தேவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.ஒரு குழந்தையே போதும், மற்றது காஸ்ட்லி என்று ஏதோ ஏசி, வாசிங்மிசன் வாங்குவது போல முடிவுசெய்யப்படுகிறது. அதன் யதார்த்தம் மற்றவர்களுக்கு எவ்வளவு எளிதாய் போனாலும் அதற்கு பின்னான ஒரு பெண்ணின், மெல்லிய மனதின், தாயின் கோணத்தில் வலிகள், வேதனைகள், மனச்சிக்கல்கள் அலசப்படுகிறது. எல்லாவற்றிற்கும் கடைசியில் இதுதான் உலகத்தின் வேகம் வேறுவழியில்லை என்று உணர்ந்துகொண்டு மறுபடியும் ஓட ஆரம்பிக்கின்றன. தேவையில்லையென கணவனால் அறுதியாக முடிவெடுக்கப்பட்டு, வேறுவழியின்றி உதவியின்றி அதற்கும் சம்மதித்த நாயகி குழந்தையை கலைத்து தனது அலுவலக ஒட்டத்தை தொடர்கிறாள். வாழ்க்கை சக்கரம் ஒடிக்கொண்டேயிருக்கிறது. நேற்றை மறந்து விட்டு, நாளைக்காக இப்போதே இக்கணமே. இந்த ஓட்டம் இன்றைக்காக அல்ல, என்றுமே வராத நாளை என்ற ஒன்றுக்காக.

முன்னுரை லாசவை படிக்காமல் படித்து என்னுரை எழுதிவிட்டு படித்தால் அப்பா oops லாசரா. லாசராதான். பக்கம்பக்கமாய் யோசித்ததை எழுத நினைத்ததை ரத்தின சுருக்கமாய். ஒரு மாமலையின் முன்னால் நின்று பேசமுயல்கிற குட்டி ஆடாய்
எனையுணர்ந்தேன். ஆனால், முன்னுரை எழுதியிருக்கிற லாசராவிற்கும் எனக்கும் உள்ள ஒருவேறுபாடு, இது வெறும் கரு கலைப்புபற்றியல்ல ; வெறும் யந்திரத்தனம் பற்றியதுமில்லை; மாறாக வேகம், மாற்றம் பற்றியது. குறிப்பாய் வேகமுறுகிற மாற்றம் பற்றியது. அதனால் மாறுகிற விழுமியங்களை பற்றி கவலை கொள்வது. அதனால் ஒவ்வொரு தலைமுறையும் சந்திக்கும் பிரச்சனைகள், இதை தாண்டி மானுடகுலம் எப்படி பயணிக்கிப்போகிறது என்பது பற்றி வினாக்களை நம்முன்னே வைப்பதாய் உணர்கிறேன். ஆனால் இந்த வேகம் irreversiable ஆ ? அல்லது லாசரா சொல்வதுபோல் இளமையின் ஸ்த்யமாயையாய். Are They passing clouds ? யுகயுகமாய் தெரியாதவினாக்கள். பதில் கண்டுபிடிக்க பதறவைக்கும் கேள்விக்கொக்கிகள்.

நேற்றய வேகம் இன்றைக்கு இழிவு. இன்றைய வேகம் நாளை கேலி செய்யப்படலாம். இந்தக்கதையின் வேகத்தை என் தலைமுறை புன்முறுவலோடு ஒதுக்கிவிடலாம். [சென்னையைவிட மும்பை, மும்பையை விட நியூயார்க்.. காரக்குழம்பு க்யூப்கள், காய்கறி லோசன்கள்.. எப்போதாவது.. பார்க்கிற அரிசிச்சோறு.. வாழ்க்கை, பழக்கம் எல்லாம் மாறிவிட்டநிலையில் மாறாதது எதுவுமில்லை. எதுவெல்லாம் மாறுகிறது. எல்லாமே அகமாற்றம், புறமாற்றம். முப்பது வருடங்களில் கணிப்பொறி பிடித்த இடத்தை பத்து வருடங்களில் அலைபேசி பிடிக்கிறது. ஐபோட் எல்லாவற்றையும் மாற்றுகிறது. மாறுவது புதிதல்ல, வேகமாக மாறுவதுதான் புதிது. Global village. முட்டிமே துனியா, உள்ளங்கையில் உலகம் ]

இந்த வேகத்தின் மூலமென்ன ? அறிவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, தொழிற்புரட்சிகள், அறிவுப்புரட்சி என சுருங்கும் உலகம். வாழவேண்டிய, வெற்றியுடன் அதற்காக வெறியுடன் வாழவேண்டிய நிர்பந்தம். அதனால் தான் நானே என்னை எனது extended familyஆக கருதவேண்டிய துர்பாக்கியம். பிரச்சனையின் மையம், பொருளாதாரமோ, ஆணாதிக்கமோயில்லை. யந்திரத்தனத்தினால் கிடைக்கிற நேரமின்மை. அவளால் நேரடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றாலும், மனவலியிருப்பினும் sub concious மனதில் ஏற்றுக்கொண்டாள் போல. ஆம் என்கிற பட்சத்தில், பழைய விழுமியமாறுபாடுகளும், அதனால் ஏற்படுகிற கோளாறுகளாகவும், பழையன விடுத்து புதியன புகுதலில் வரும் மனச்சஞ்சலங்களாகவும் இதை எதிர்நோக்கலாம். [இன்னொரு குழந்தை தேவையா ? , யூஎஸ்ஸில் பிள்ளை பெற மாமியார் மட்டும் தேவை, காரியத்திற்காகதா மாமானார் தேவையில்லை, என் குழந்தைகள் வளர்ப்பதே எனக்கு அதிகமாகபடுகிற வேளையில் ஊரான்(சொந்தக்கார) குழந்தைகளை எப்படி ஊட்டி வளர்க்க, குழந்தைகளிடமிருந்து ஒட்டியும், ஒட்டாமலும் நமது வாழ்க்கை நடத்திக்கொள்வது எப்படி, திவசம் தேவையா.. இப்படிப் பல பல..]

வேக உலகத்தில் உயிர்கள் கூட நுகர்பொருளாக மாறிவிட்ட அபத்தம் ; வாழ்க்கையின் தாம்பத்தியித்தின் குறிக்கோளே
மானுடகுலத்தை நீட்டிக்செய்வதுதான் என்றால் ஒரு உயிர் ஜனிப்பதையை நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது ? அந்த உயிருக்கா, பெற்றோருக்கா, யாருக்கு.. காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த வழி ஒன்று கண்டுவிட்டாலும்,
வாழ்வதற்கா, சாவதற்கா என்ற உரிமையை யார் எடுத்துகொள்வது. இந்த கதவுகளின் இடுக்களின் வழியே அந்த ஜூவன் கசிந்துவிடுகிறது. அங்குதான் ஆரம்பிக்கிறது மனப்போராட்டம். உயிர்ப்போராட்டம். இந்த குருசேத்திரத்தில் பொருளாதார நிர்பந்தங்கள், வாழப்போராடவேண்டிய கட்டாயம் – அதற்கு எதிராய் பழைய குப்பைகள், அல்லது குப்பைகள் என கருதப்படுபவை , பாவம் அவர்கள் கெளரவர்களல்ல, ஆனாலும் அழிக்கப்படுகிறார்கள். விசுவரூப தரிசனம் கொடுக்கிற கண்ணணும் மாறிக்கொண்டேயிருக்கிறார். பாவம் அவரும் இந்தவேகத்திற்கு விசுவரூப தரிசன மேக்கப் ரொம்ப காஸ்ட்லி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ..

ஆக இந்தக்கதை வேகம், மாற்றம் பற்றியது .வேகமுறுகிற மாற்றம் பற்றியது. அதனால் மாறுகிற விழுமியங்கள். அது கூடவே இருப்பதை விட வசதியான சூழலுக்கு ஏங்குவதான மானுடத்தின் கனவு பற்றியது.

survival for fittest என்கிற தத்துவத்திற்கும் வாசுதேவகுடும்பகம், milk the nature, வாடிய பயிரை கண்டு வாடிவதங்கு என்கிற இந்திய தத்துவஞானத்திற்கும் ஏற்படுகிற மோதல். குருசேத்திரத்தில் புதிய விழுமியங்கள், புதிய பார்வைகள், புதிய சமன்பாடுகள். காலம் ஒரு பகாசுரன். அதன்முன் எல்லாயிசங்களும், தத்துவங்களும் தோற்றுத்தான் போகின்றன. எல்லாவற்றின் நல்லதையும் உறிஞ்சு அதுவளர்ந்துகொண்டே போகிறது. ஆகவே இந்தக்கதை ஒவ்வொரு இருபது ஆண்டுக்கும் பார்ட்-2, 3 என எழுதப்படத்தேவையான Global, universal platform எனப்படுகிற உலகத்தளமிருக்கிறது.

கதாபாத்திரங்கள் :
அமிர்தவல்லி, நடராஜன், மாமானார், மாமியார், நனவோடையில் வந்துபோகும் அம்மா, அப்பா, குழந்தை செளம்யா, அபார்சன் டாக்டர், முதிர்கன்னி தோழி, அதைவிட மழை, நடராஜர் கோவில். முக்கிய கதாநாயகன் லாசரா சொல்வதுபோல யந்திரத்தனம்.
அமிர்தவல்லியின் உலகம் :
கல்யாணத்திற்கு முன்: கனவினாலானது. அவள் குதிரை
படிப்பு, பரதம், கனவு, நீள் கடிதங்கள், கட்டுப்படாத காட்டுக்குதிரையாவள். தன்னடையாளம் மிகுந்த குதிரை.
[பேம்பர்ட் குதிரையோ ?] அன்பான அப்பா, சூட்சுமமான அம்மா, தூக்கெயெறிய காதல், சின்னபாத்திரத்தில் பாதுகாப்பான மீனாவள்.
எந்த சூழலுக்குமாய் வளர்க்கப் பட்டவள்தான் அவள்.

கல்யாணத்திற்கு பின்:
காலை அவசரம், சொல்லப்பட்டதுபோல மாமியார், பசு மாமானார், நல்ல, சுயநலமான கணவன், பிடிப்பான குழந்தை,
நல்ல ஆபிசு.. தொலைந்துபோனது நேரமும், தனக்கான அடையாளங்களும்.
லெளகீக சேற்றில் கால்கள் புதைய தத்தளிக்கிறேன்.[23]
கல்யாணம் அவளது கண்ணாடியில் ரசம் மங்கச் செய்து, அவளது பிரத்யேகங்களைக் கரைத்து விடுகிறது. [37]

நடராஜனின் உலகம் :
தேவையான அளவுக்கு நல்ல கணவன். நல்லவன். கொடுமையில்லை. குத்தலில்லை. தன்னை பாதிக்காத எதுவும் அவனை
பாதிப்பதில்லை. குறுகியது என்று வேணாலும் குற்றம் சொல்லலாம். தனது நாற்காலிப்பெருமைகளை தன்னுள் சுமந்து குடும்ப
உறவுகளில் மெல்லிய மலச்சிக்கலை ஏற்படுத்தும் இவனுக்கு கூலியில்லா மனைவி இரண்டாம்பட்சம்தான். மெட்ரோவில்
வளர்க்கப்பட்ட தான், தனது வாழ்க்கை என்கிற நுகர்வோர் கலாச்சாரத்தின் பிரிதிநிதி.

/அநேகமாய் எல்லா ஆண்களும் இப்படித்தானிருக்கிறோம் என்கிறார் லாசாரா /

அவனது நுனிப்புல்லான கதாபாத்திரம் ஆசிரியரின் மொழியிலிருந்து :

/ஆழமற்ற சாரமற்ற வாழ்க்கைக்கு பழகியவன் அவன். அம்மா, அப்பா பாசம் கூட அதன் ஆழத்தில் அவன் அறியாதவன்.
பிறக்கும் போதிருந்தே அவர்கள் குடும்பத்தில் அடிப்படை தேவை பிரச்சனை கிடையாது. தேவை என்றால் கூட
என்னவென்று தெரியாது அவனுக்கு.. அவன்முன் விரிக்கப்பட்ட வாழ்க்கைக் கம்பளம், முட்களை இடர்களை இடையூறுகளை
அவன் கண்ணிலிருந்து மறைத்திருந்தது. உணர்வு கட்டங்களை, போராட்டங்களை அநேகமாய் விலக்கியது அவன் வாழ்க்கை.
வாழ்க்கையை அகல-ஆழ அல்ல – உழுதவன் அவன். அவன் உலகம் அவள் உலகத்தை விடப் பரந்தது./ 41

/சிலருக்கு கடைசிவரை இப்படியே வண்டி ஒடுவிடுகிறது. சிறு தலைவலி என்றால் கூட துடித்து போகிறான். அவளும்
அவனுக்காக உருகிக் கரைந்துருக வேண்டும் என்று சுயநலமாய் எதிர்பார்த்தான்.
வாழ்க்கையை முழு வட்டத்தில் வாழ்வது யாருக்குமே கூடாதுதான். /

கலைப்பும், கலங்கலும் :

கலச்சிரு அமி. ‘ Abort it ‘

மார்பகங்களை பிளந்துகொண்டு பாய்கிறது ஈட்டி. பால் சுரக்கும் காம்புகளில் இரத்தும்.. தாள முடியவில்லை மழையின் புலம்பல்.. ஒப்பாரி பாடலை போன்ற மழை. அமைதி இருவருக்கிடையே அகழி வெட்டியது. முதலைகள் நிறைந்த அகழி, ஆ, ஆவென பசியுடன்
காத்திருந்தன முதலைகள்.

எனக்கு ஒரு பையன் வேணுங்க.’ பிடிவாதமாய்த்தன்னை திரட்டிகொண்டு பலவீனமாய்ச் சொன்னாள். அதன் சம்பிரதாயத்தன்மை, காலங்காலமாய் பெண்வர்க்கம் ஆணின் பாதம் பணிந்து கேட்கும் இரைஞ்சலின் இரைச்சல். ‘முதல் குழந்தையா வளக்கறதுக்கே என்ன பாடுபடறேன்னு எனக்கு தெரியும். ‘ நாந்தன கஸ்டப்படறேன் நீ என்னத்த கிழிக்கற என்று நினைத்தாலும் கேட்கமுடியாத வார்த்தை முழுங்கல்கள். கல்யாணத்திற்கு பின் அவள் மைதானத்தில் தனிமையான தீவு. பார்வர்ட், பேக்வர்ட், கோல்கீப்பர் எல்லாம் அவள்தான்.

கலச்சிரு.. ச்சை. சட்டென்று தோல் நழுவ அவனது மாமிசத்தைப் பார்த்து விட்டதுபோல் கலவரமாய் இருந்தது. 84,85

அமைதியாய்
உட்கார்ந்திருந்தது பூனை
மீசையோரம்
ரத்தக்கறை.

வசனநடை : simplifly ஏர்டெக்கான் நடை :

ஒடும், நடக்கும், தவழும் அழும் வசனநடை. குறும்பு நடை, குசும்பு நடை.

குசும்பு :
1. ஏம்மா.. எலெக்சன்ல.. நிக்கப்போறீயா. [ துண்டோடு நிக்கிற மருமகள் பார்த்து மாமனார் ]
2. கடிகாரம் திருட்டு போகிறது. அப்போது அமிர்தவல்லி
‘அவனுக்கு..[திருடனுக்கு] ஒரு நிமிசம் போதும். நீங்க தாராள மனசு பண்ணி நாலு நிமிசம் கொடுத்திருக்கேள்’ 16
3. நாசுக்கான மருமகள், மாமியார் சண்டைகள் :
‘குழந்தை அப்படியே பாட்டியக்கொண்டிருக்கு.. உங்க பிள்ளைன்னு நீங்க உசத்தியா பேசறேள். அதோட
அம்மான்னு அது உசத்தியாப் பேசறது.’ அமிர்தவல்லி.. 17
4. மருமகளின் காரியத்தின் மீதான குற்றப்பத்திரிக்கையில்
‘வாசிங் மிசின் நின்னூட்டாலோ தர்ப்பணத்துக்கு வாத்தியாருக்கு காத்திண்டிருக்கிற பிராமணன் மாதிரி. இவ உக்காந்திருப்பா.’ –
5.எப்போதும் தன்குரலைத்தானே கேட்பதில் ஒருவேளை அவளுக்குப் பிரியமோ என்னமோ ?
தூங்கும் போது கூட மாமியார் குறட்டை விடுகிறாள்..
6. மீட்டர்னு ஒண்ணு வெச்சிருக்கியே, அப்புறம் மீட்டருக்கு மேலே ரெண்டு ரூபா.. கேக்கேறே.. மீட்டர்னு ஒண்ணு இருந்தாத்தானே.. அதுக்குமேலே ரெண்டுரூபா கேக்கமுடியும்னு ‘ 36

வேகநடை : வேகமான காலை வேளை

1. தாமதம் இழப்புகளை கொண்டுவந்துவிடும். பின் தூங்கி முன் எழல். அமிர்
2. நேரமா, கையில் வாட்சேயில்லை.விடுமுறை நாளில் வருத்தப்பட்டுக்கொள்ளலாம்.- நடராஜன்
3. குழந்தையை தயார்படுத்துதல்

‘ம். அம்மா. இன்னுங் கொஞ்சநாள்ல உலகம் அழியப் போறதாமோ ?.. ‘ குழந்தை 19
‘அதெல்லாம். அப்றம் பேசிக்கலாம். ‘
‘காக்க.. காக்க.. ‘ வார்த்தைக் குதிரை…..’மந்திரத்தை எங்கே விட்டேன்..?
இறக்கை கட்டிப் பறக்கும் காலைகள். மெதுவாய்த் துவங்கும் இருட்டு விலகல். வரிசையில் நின்று பால் வாங்கியபின் சுறுசுறுக்கும் காலைகள்
4. குழந்தை கிளம்பிய பின் : ‘ புயலடித்து ஒய்ந்தாற்போல ஆசுவாசம். பேனுக்கடியில் ஒரு நிமிஸ ஒய்வு.
5. தற்காத்து, தற்கொண்டான் பேணி, குழந்தையும் பேணி பிறகு அவள் அலுவலகம் செல்லவேண்டும். 40

கவித்துவமான உருவகங்கள் :

1. மிகப்பிரதமான அத்தியாயத் தலைப்புகள் :
கடிதப்படலம், அரசு யந்திரபடலம், கோவிலுக்கு போன படலம், டாக்டருக்கு போன படலம், அடிமைப்படலம், நடராஜ நர்த்தனப்படலம், நகர வாழ்க்கை படலம்.

2. அவள் குதிரை : அவன் நர்த்தன நடராஜன் : நல்ல உருவகம்.-
பரதக்குதிரை, சமையல் குதிரை, கண்ணடைத்து போன குதிரை. பரதம், ஆங்கில நாவல்கள் படிப்பு, அழகு, கொஞ்சம் திமிர், கனவு
மிதக்கும் குதிரையவள் – கிராமத்துக்குதிரை. மெல்லிய உணர்வுகளால் கோதப்பட்டு பட்டுத்தாம்பாள வாழ்க்கை.

அமிர்தவல்லி குதிரைக்கு மெட்டி – கால் லாடம், அவள் பொட்டு – தலைக்குஞ்சலம், வீடு – அவள் சுமக்கும் பொதி. கடிவாளம்- தாலி.
அதனால்தான் அவளுக்கு பட்டப்பெயர் குதிரையோ ?

அவனின் நர்த்தன முத்திரையில் காலடியில் கசங்குகிறது அவன் குழந்தை. கால் தூக்கி ஆடமுடியாத கர்வத்தோடு கூடிய ஆணின்
அசுரபலம். என்ன குரூரம். Hi சுவாமி நடராஜா, கால்தூக்கிதானே ஆடவேண்டும். சுடிதார் இருக்கிறது வா. ஒரு கை பார்க்கலாம்.
என்னமுத்திரை போடுவாய் பார்க்கலாம் என்பதனா கோபம். வா..மச்சி.. வா.. பாவம் நடராஜன்..

/சிறப்பாக ஒடினால் பெயர். அருமையான சவாரி நான். பந்தயத்தில் நான் தோற்றால் ஓட்டத்தை நிறுத்திவிட்டால்
ஜாக்கியால் சுடப்படுவேன். என் ஜாக்கி அழிக்கும் தெய்வம். மண்டியோடுகளை மாலையாக போட்டுக்கொண்டிருக்கும்
கபாலீஸ்வரன். நகரம். அதன் வாழ்க்கையை எனக்கு புரியவைத்தவன் நடராஜன். அழிவு ஆனந்தமானது /

3 அப்பா+அம்மா = குழந்தைகள்

வீட்டில் அம்மா,அப்பாவிற்கான உறவுகள் அதற்கான விழுமியங்கள் எங்கிருந்தோ பறந்துவந்துவிடவில்லை. அது தலைமுறை தலைமுறையாய் வெட்டியும், ஒட்டியும் வளர்ந்தும் கிளைக்கின்றன. பெண் வீட்டை உருவாக்குகிறாள் என்கிற பட்டத்துடன் பெரும் பொறுப்புகள் அவள் மீது சுமத்தப்படுகின்றன. அடுத்ததலைமுறை பற்றிய கவலைகள், ஏக்கங்கள் தான் இந்த்ததலைமுறையையின் இருட்டுகள் மீதான சுயபரிசோதனையை நிமிண்டுவிடுகிறதோ என்னவோ ?

ஆசிரியரின் மொழியிலிருந்து :

A) பெரியவர்களை பார்த்து குழந்தைகள் அதுவாக எத்தனையோ விசயங்களை பழகிக் கொள்கின்றன.

B) சூட்சுமமான அம்மா,அப்பா உறவும் அது தொலைதூரத்திலிருந்து கொடுக்கும் படிப்பினையும், மாறும் பாடங்களும் சூப்பர்.
/அம்மா, அப்பா இருவருக்குமான உறவுகள் ரகசியங்கள் நிரம்பியவையோ என்று ஒரிரு சமயம் அவளுக்குத் தோன்றும்.
சூட்சுமமான உறவுகள் இருவரிடையிலும் தங்கள் பிரத்யேகங்களை தாங்கள் காப்பாற்றிக் கொண்டிருப்பதாய் அவளுக்கு தோன்றும்.
குழந்தைவரை வராமல் அவர்களின் அந்தரங்கத்தின் பவித்ரம் பேணப்பட்டது. படித்த அப்பா சரி, அதிகம் படிக்காத அம்மாவிடம்
சிதற விடாத நிதானம்.. இரு நாட்டு ராணுவத்தளபதிகள் கைகுலுக்கு கொண்டாற்போல இல்லாமல்.. 44/
/ பேசிக்கொள்ளாமலே அம்மாவும், அப்பாவும் வேறுவேறு தளங்களில் அவள் முன்னேற்றத்தை குறிவைத்து இயங்கினார்கள் /

C) பாடம் சொல்லிக்குடுத்தல்.. மிரட்டும் அப்பா.. /சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே.. எத்தனை தந்தை அதை செய்யறான்.. என் குழந்தையை சான்றோனாக்க டொனேஸன் முதல் எல்லாத்துக்கு கடன் வாங்கிறோனில்லையா.. அதுதான் அந்த வசனத்துக்கு அர்த்தம்பாங்களோ என்னமோ.. 25 ../

D) குழந்தை வளர்ப்பு :< /குழந்தையில் வளர்ச்சி ஒவ்வொருத்தரும் பார்த்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். 49 நடை வண்டி ஓட்டிப் போகும் குழந்தை கூட யாராவது பிடிக்க வந்தால் விருட்டென்று கையை விலக்கிவிட்டு தானே ஓட்டிப்போக ஆசைப்படுகிறது. விழுவேடி, சொன்னாக் கேளு என்று நாம் தான் அதற்கு பயத்தை ஊட்டுகிறோம்./ [ மெக்கன்ஸி நிறுவனம் ஒரு ஆய்வில், ரிஸ்க் டேக்கிங் இந்திய மேலாளரிடம் குறைவு..என்பதான கண்டுபிடிப்பை வெளியிட்டது. அதீத தத்துவவிசாரணை, விவாதங்களிலிருக்கும் பிடிப்பு புதுக்கண்டுபிடிப்பு, புதுத்தொழில்கள் அதனால் ஏற்படுகிற தோல்வியை ஏற்றுக்கொள்கிற சமுதாய மனம் ஆகியவை இன்னும் இந்தியாவில் குறைவுதான். குழந்தை வளர்ப்பில் சரிசெய்யப்படவேண்டிய குறையிது என்கிறார்கள் உளவியல் வல்லுனநர்கள். ] E) தாய்மையின் பஜனை : பேனாவை தூக்கியெறிந்துவிட்டு சப்ளாக்கட்டையுடன் பாகவதர் சங்கரநாராயணன் தாய்மை அந்தாதி, மாதர் குல கண்களில் கண்ணீர் வரவழைக்கும், செண்டிமெண்ட் அட்டாக். பின்னே, அவங்க படிக்க வேண்டாமா ? அவர் என்ன அயர்ண்ராண்டா.. ? /தாய்மை பெண்மையின் பரிபூரணம். அது முற்றிலும் பெண்களின் சமாச்சாரம். ஆண்கள் பாவம். அங்கே வெறும் பார்வையாளர்கள்தாம். முதல் கட்டப் பங்களிப்புடன் அவர்கள் பொறுப்பு முடிந்து விடுகிறது. 77 / /முதல் குழந்தை பெறலுக்கும் இரண்டாவதுக்குமான வித்தியாசம். 'எனக்கு பரிச்சியமான சூழ்நிலையில் விரும்பி இந்த குழந்தையை பெற்றுக்கொள்ளப்போகிறேன். ' 75/ [ இந்த வித்தியாசத்தை மிகப்பிரமாதமான விசுவலாக செய்த படம் சேரனின் தவமாய் தவமிருந்து ] பிரசவ கால வர்ணனைகள் சுகங்கள்.. /கிளம்பப்போகும் ரயில்போல திடீரென்று ஒரு தூக்கி தூக்கி போடுதல், ரகசியத்தின் ஊற்று திறந்து கொண்டாற் போல முகமெங்கும் பூசிய பூரிப்பு.. இரவு உலாவலில், கணவனுடன் கனவுகளை பரிமாறியபட் ஸ்வீட் நத்திங்ஸ்.. பிரத்யேகமாக சுழலும் அவளது பூமி. அவ்வப்போது உடல் அலுக்காத கூடல் / 64 வேகமான மாற்றத்தினால் வருகிற குழப்பங்கள், கேள்விகள், தர்க்கங்கள், கோபங்கள் [ மிகபிரமாதமான வசனங்கள், காட்சி அமைப்புகள், உருவக வர்ணனைகள், முடிந்த அளவு ஆசிரியரின் மொழியிலே கீழே தந்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் விரிவுறும் மனநிலை மாற்றம்.. அதனை குழப்பமின்றி, பதிவு செய்வது, எழுத்துக்கும், காட்சிக்குமான தூரத்தை குறைக்க முற்படுவது எல்லாம் ஸங்கரநாராயணனின் முத்திரைகள். - இதை ஊன்றி படித்தல், வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு Case Study ஆக உபயோகப்படலாம். ] குறைகள் : கருச்சிதைவுக்கான காரணமென்ன என்பது இன்னும் தெளிவாய் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம். கதாநாயகியின் புலம்பலில் அது நடராஜனின் வெறும் பொருளாதார அல்லது ஆணாதிக்கப்பார்வையோ என குழம்பவைக்கிறது. நடராஜனின், அமிர்தவல்லியின் அலுவலங்கள் தேவைக்கதிகமான நீளங்களோடு பதியப்பட்டிருக்கின்றன. அவன் அமைச்சருக்கு செய்கிற சேவை அரசாங்கவேலை போல சுருக்கமாகயிருந்திருக்கலாம். துப்பாக்கி சுடப்படாமலும், தோட்டாயில்லாமலும். நாவல் எழுப்புகிற கேள்விகள் : 1) வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறதா..ஆமென்றால் அது என்ன ? 2) இல்லையென்றால் நமக்கு கற்பிக்கப்பட்ட பேரின்பம், சத் ஆனந்தம் எல்லாம் புரூடாவா. 3) புரூடாவாயிருந்தாலும் வாழ்க்கை சூட்டுக்கு அந்த பொய்க்குளிர்தேவையா ? யதார்த்தம் அ கனவுகலந்த யதார்த்தம் தேவையா [ ஸ்தயமாயை ] / ஒரு கம்பெனிக்கு vision தேவையா ? mission தேவையா ? vision - நாளை ; mission - அதை அடைய இன்று கிழிக்கப்படவேண்டிய குப்பைகள். 4) பழையதெல்லாம் குப்பையா ? அதெல்லாமே முற்றிலும் எறியப்ப்படவேண்டியவையா ? 5) நாளை நேற்றின் போதாமையை நிரப்ப, அடைய முன்னேறும் பயணமா.. 6) இதையெல்லாம் மனிதசமூகம் எப்படி தனக்குள் எடுத்துக்கொள்கிறது.. ஜூரணிக்கிறது. அங்குதான் சிந்தனையாளர்களின் இலக்கியவாதிகளின் வேலை வருகிறதா..? நாளைய நம்பிக்கையில்லாமல், இன்றின் மெட்டீரியலிசத்தில் முழுக்க மூழ்கிவிட்ட வாழ்க்கையின் அவலத்துக்கு இந்தக்கதை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. /லாசாரா / சுருங்கக்கூறின், வீட்டுச் சமையல் இது. சரியான அளவில் கலக்கப்பட்ட பருப்புசாதம். வெங்காய சாம்பார். வேலைக்குபோகிற பெண்களின் மன உளச்சலை கொஞ்சம் நீட்டித்து, யதார்த்தமாய் பதிவு செய்யமுயற்சிக்கிற கதை. லாசாராவோடு பிரியச்சண்டைபோட்டுக்கொண்டு அவரை பின் தொடரவிழைகிற சங்கரநாராயணனின் கதை வெறும் பல்லவன் பஸ்ஸின் பின்சீட்டில் எழுதக்கூடியதுதான். லாசாரா அந்தக்காலத்து தெரு. சங்கர்நாரயணன் இந்தக்காலத்து தெரு. இன்னும் கொஞ்சகாலத்தில் வானுயர பிளாட்டுகளும், காண்டம்ஸ் அடைத்த பிபிஒக்களும், பறக்கிற மெட்ரோவும் , ஹைவேயுமே, சர்வீஸ் ரோடுமே வழக்கத்திலிருக்கலாம். அப்போது இந்தக்கேள்விகளும், பழைய தலைமுறையை விடுத்து எழுந்த பார்வைவேறுபாடுகளும் வெறும் காலக்குறிப்பாகலாம். அதனாலென்ன.. இன்னும் சில பத்தாண்டுகளுக்கு பெண்கள் இந்தமாதிரி ஏதாவது மன உளச்சலுக்கு ஆளாயிக்கொண்டுதானிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அப்படியில்லாவிட்டாலும் கதைஞர்கள் இப்படி ஏதாவது கதை எழுதிக்கொண்டிருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. ஆனாலும், வேகம், கவித்துவமான யதார்த்தங்கள், பிரமாதமான நடை, சீராய் ஓடும் நகைச்சுவையென வறண்டு போகாத்தன்மையோடும் சங்கர் நாவல் ஒரு மிடில் கிளாஸ் Hot cake. ====================================================================================== எழுத்தாளர்கள் மட்டும் தேவையெனில் படிக்கலாம். வேகமான மாற்றத்தினால் வருகிற குழப்பங்கள், கேள்விகள், தர்க்கங்கள், கோபங்கள் கோபங்கள் : வாழ்வின் சுவாரஸ்யங்களைத் தானாகவே ஏற்படுத்திக் கொள்ள இங்கே எந்தப் பெண்ணுக்குமே அனுமதியில்லை அதிலும் பிளடி மிடில் கிளாஸ். பாவம் திண்டாடி போவது அவர்கள் தான்.. 59 எனக்கு இன்னும் அந்த சீராடல் புத்திபோகவில்லை. செல்லங் கொஞ்சும் பூனைக்குட்டியின் வால் இழுவல்போல.. அவன் செய்யும் சிச்ருஸை உள்ளூற எனக்கு பிடிக்கிறது. வீட்டில் அவள் அவனிடம் பாராட்டை எதிர்பார்க்கிறது குறித்து கிண்டலென்ன வேண்டிக்கிடக்கிறது. சிறகுகளை கோதிக்கொள்ளும் பறவையை போன்றது என்றான் அவன். கல்லும் இல்லை, பாராட்டுப்பாத்திரமுமில்லை. இரண்டையும் அலட்சியப்படுத்து என்பதுதான் அவன் கணக்கு.. 41 நடராஜ முத்திரை.. புராணக்கதைகள் எல்லாமே பெண்ணடிமைக்கதைகள் தானே.. பரத நாட்டிய சிருங்காரக்கலையே ஆணாதிக்க கண்டுபிடிப்புதானே.. என்கிறாள் தோழி. குழந்தையை காலில் போட்டுக்கொண்டு ஆடும் நடராஜன்.. பணிதல், மரியாதை விட்டுக் கொடுத்தல் எல்லாம் என் இரத்தத்தில் ஊறியது. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் .. அதைத் தாண்டிவர என்னால் முடியவில்லை.. 110 அழகுணர்வு வாழ்வின் சாறு. தாஸ்தயேஸ்வகி சொல்றான் - பூயூட்டி வில் சேவ் தி வேர்ல்ட். அழகுன்னா. சம் சார்ட் ஆப் டிசிப்ளின். புரியுதாடி.. 66 அதே கோபத்தோடு போட்டியாக அல்ல.. நடராஜா. நாம் சேர்ந்தே நடனமாடலாம்.. [ நடராஜன் இங்கு கடவுள் மட்டுமல்ல.. கணவனும்தான் என்பது ஊடாடும் சர்ரியலிஸம்..] பாரதி கூட வீணையடி நீயெனக்கு என்றுதான் பெண்ணை ஒரு மாற்று கீழிறக்கித்தான் பாடுகிறான். வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள். அத்தனை சீராய் வாழ்ந்தாள் என்கிறதாக் ஐதிகம். என்ன சீர் போ.. தன் பெண்மையை வெறுத்துப் போய்த்தான், இடது கொங்கையை பிய்த்து, பெண்மையாவது, வெங்காயமாவது என்று எறிந்தாளோ ? உடனே, புஸ்பக விமானம் வந்து அவளை மேலுலகத்துக்கு அழைத்து போனதாக ஐதிகம் புஸ்பக விமானமென்ன ஆம்புலன்சா.. என்ன அபத்தங்கள்.. அவனது வாட்ச், ஆட்டோவில் குடை, பஸ்ஸில் அவள் பர்ஸ், ஆச்பத்திர்யில் சிசு என்று தொலைந்துகொண்டேயிருக்கிறது. தொலைதல் நாகரிக யுகத்தின் அடையாளம். அடையாளந் தொலைதலே கூட நவீனத்தின் அடையாளம்தான். வன்மம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அது பெண்மையின் நிலைக்கு எதிர்நிலை அது. பெண்களுக்கு மெளனம் ஆயுதம். ஆண்களுக்கு கோபம். ஆனால் மெளனம் செளகரியமானது. அதில் கொச்சத்தனம் கிடையாது. மெளனத்திலிருந்து தோல்விபாவனை இல்லாமல் எத்தருணத்திலும் சுமுகத்துக்கு வரலாம். cold war கேள்விகள் : குழந்தை என்பது வாழ்வின் பிராடக்டா, பைபிராடக்டா. என்பதிலேயே இங்கே பிரச்னை.. 89 [ அடிப்படை கேள்வி ] இலட்சியத்தினவு அதுசார்ந்த தேடல் இல்லையோ .. ஆ தன்னடையாளம். அது இல்லை. அப்பா, அம்மா இரு ஒட்டுக்குள்ளான முத்து நான். சிப்பியின் பராமரிப்பில் முத்துக்கு பெருமை. அல்லாமல் முத்து எப்படி உருவாயிருக்கும். 47 வாழ்க்கை சிலசமயம் அறிவுபூர்வமாயும் சிலசமயம் உணர்வு பூர்வமாயும் நமக்கு அறியக் கிடைக்கிறது. இரண்டுமே முக்கியம்தானே ? இதில் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை. உணர்வு பூர்வமான வாழ்க்கைக்குத்தானே நீங்க என்னை கல்யாணம் பண்ணீட்டிங்க.. 58 நேற்று இன்றைப் போலல்ல நாளை. சுழல்வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிற வாழ்க்கை பம்பரம். மானுட மதிப்பீடுகள் வீர்யம் வற்றிக்கொண்டே வருகின்றன. உலகம் சுருங்கிக்கொண்டே வருகின்றன. இயற்கையின் பிரமாண்டம் அடிபட்டு போயிற்று. ஆச்சரியம் விட்டு போயிற்று. மதிப்பும் ஆகவே விட்டு போயிற்று. உலகம் சுருங்கி உள்ளங்கைக்குள் வருகிறது என்பது மானுடத்தின் வெற்றி.. என்றால் வீடே, வாழ்விடங்களே.. அதனால் மனங்களே ஒடுங்கிப் போகிறதை என்ன சொல்ல.. 24 யந்திரங்களுக்கும் நமக்கும் உணர்ச்சி அடிப்படையிலான வித்தியாசம் தானே பாஸ் ? யதார்த்தமான விசயங்களை கூட இந்த யந்திரத்தனங்கள் துருப்பிடிக்க வைத்துவிடுகின்றன. சோகமான உண்மை. வேலைகளை அதிகப்படுத்திக் கொள்வது எதற்கு, நாளை நமது அன்றாட வேலைப்பளுவிலிருந்து, சுமையிலிருந்து விடுபடத்தான், என்றால நாளை நாளை என்று அந்த நிலையோ எட்டாத அளவுக்கு விலகி விலகிப் போகிறாற்போல கண்ணாமூச்சி காட்டுகிறது. உணவை சமைத்து சாப்பிட ஆரம்பித்த பின் உடல் வலு கூடுவதற்கு பதில் குறைந்தல்லவா விட்டது. எந்த யந்திர வருகையினாலும் மனிதனுக்கு அதிக ஒய்வு கிடைக்கவில்லை. இருக்கிற ஒய்வும் குறைந்ததுதான் கண்டபலன். 40 சுகந்திரம் என்பது ஒரே கருத்தை இருவரும் சொல்வதல்ல. மாற்றுக் கருத்தை மற்றவர் சொல்ல அனுமதிப்பதே. அவளே கூட அவளுக்கு இல்லாத அளவுக்கு அவளையே இந்த சமுதாயம் மூளைச்சலவை செய்திருக்கிறது. இங்கே பெண்கள் ஆண்களின் சொத்தாக சுவீகரிக்கப்பட்டவர்கள். என் குழந்தையை நான் பெற்றுக்கொள்ளவே எனக்கு அநுமதி தேவைப்படுகிறது. தங்கக் கூண்டில் அடைபட்ட கிளி நான். குழப்பங்கள்: அவள் அவனிடம் வாதிட்டதில்லை. தேவையுமில்லை என்று வை.. எனக்கென்ன பெரிய லட்சியங்கள் இருக்கிறதா. உலகில் பெரும்பாலோர் போலத்தான் நானும் அவனும். சில எளிய சந்தோசங்கள் எங்களுக்கு. அதற்குள் நிறைவு காணும் வாழ்க்கை. தொட்டி மீன்கள். கிணற்றுத்தவளைன்னு வேணா வெச்சிக்கோயேன்.. 71 கட்டிக்கொடுத்த சோறுதான் என் வாழ்க்கை. வழி நடத்தப்படுவதை விரும்பி ஒடுங்கி கொள்கிறவள்தான் நான். இதுவரை கணவனை அதிகமாய்ப் பேசி விட்டதால் மனம் தன்னையே வருந்திக் கொள்கிறதோ என்னமோ ? சுயம் என்பது கூட ஒரு இன்பார்ன் பீலிங்தான். நானும் படித்திருக்கிறேன். என்றாலும் இவளின் தைரியம் இயக்கம் என்னிடம் இல்லையே.. அது படிப்பாலோ குடும்ப சூழலாலோ அல்ல.. இவற்றால் அது உரம் பெற்றாலும், இயல்பாகவோ மண்சத்து போல இல்லாவிட்டால் தேறாது.. 60.. தெரிந்த கண்டக்டர்.. மாசமான மகளிருக்காக வழி செய்து கொடுக்கிறான். [மும்பாயிலும் அதே..] அவளின் மகிழ்ச்சி.. இதைப்போன்றதொரு எளிமையான, சுயநலமில்லாத மகிழ்ச்சி, நட்பு நடராஜனிடம் இல்லை. காரண காரியங்களின்றி அவனுக்கு நண்பர்களே இல்லை. 63 ஒரு நேரத்தில் என்னை நான் தைரியம்மிக்கவளாக, தர்மாவேசம் மிக்கவளாக வரித்திருந்தேன். தர்மாவே வேசம் என்றாகிவிட்டது இப்போது. எனது பாவனையே, பாரதியாரின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டவள் நான் என்கிற எனது கற்பனையே, என்னை மேலும் மேலும் ஏமாற்றியிருக்கலாம். 106 யாருக்குமே மாறுதல் என்பது வெளிப்படை அடையாளங்கள்தானோ என்னவோ ? சமாதனாப்புறாக்களும், நம்பிக்கை மருந்துகளும்: உயரே, உயரே போகும் ராக்கெட் என்ன செய்கிறது ? ஒவ்வொன்றாய்க் கழற்றிப் போட்டுக் கொண்டே போகிறது. நிர்வாணமாகிக் கொண்டே போகிறது. ஸ்ட்ரிப் டீஸ். இழ. முற்றிலுமாய் இழப்பது மரணம்.. என் முன்னோர் வாழ்க்கை எனக்கு அபத்தம். என் வாழ்க்கை என் பெண்ணுக்கு மிக அபத்தம். நாளை எப்படியிருக்குமோ ? நேற்று. இன்றல்ல நாளை. வரும்நாள், நேற்றும், இன்றும் போலல்ல. நேற்றை விட இன்று மாறியிருக்கிறது. தலை கீழாய்க்கூட சில விசயங்கள் மாறிப்போயிருக்கின்றன. நாளை இதைவிட குப்பைகள் சேரலாம். அதற்கு இடம் ஒதுக்கு. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைகிறது. அறிமுகமாகிறது. அதில் முழுதும் முழுகி முத்துக் குளிக்க யாராலும் கூடாது.. முற்றிலும் போராட்டங்கள் நிறைந்ததாக வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட ஹெமிங்வேயின் கூறுகள், காலரில் அழுக்கப் பட விரும்பாதவர்கள், அல்லது சுத்தம் பேணுகிறவர்கள் என்று தோன்றும் ஸ்டீன்பெக்கிடமும் பேட்சிடமும் காணக்கிடைக்கின்றன. உணர்ந்து வாழ்ந்து அனுபவிக்கிற ஒன்று என்று எல்லோருக்குமே தேவை என்கிற பொதுவிதி கூட அத்தனை சரியல்ல. மூட்டை தூக்கிப் பணக்காரன் ஆகிறவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில், ஒரே வசதி வாய்ப்புகளும் சூழலும் அமைந்திருக்கும் இரு குழந்தைகள் ஒரே மாதிரி வளர்வதில்லையே.. 48 சுவைத்து வாழ்கிற மனிதன். சுகமும் நிம்மதியுமான வாழ்க்கைக்கு, சராசரித்தனங்களும் கொஞ்சம் கொஞ்சம் அசட்டுத்தனங்களும் கூட, சகிப்புத்தன்மையும் கூட வேண்டித்தான் இருக்கிறது. சார்ந்து வாழ்தல், நம்பி வாழ்தல், நம்பிக்கை பொய்கையில் அவர்கள் திகைத்து திணறி அழுது, பிறகு இன்னொரு நம்பிக்கையைப் பற்றி கொள்கிறார்கள். அதைப்பற்றியும் கேலிபேச என்ன இருக்கிறது ? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றில் நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் யாராலும் வாழ முடியாது, அல்லவா ? 27 சம்சார சாகரத்தில் எந்தப் பிரச்சனைக்களுக்கும், ஆணானாலும் பெண்ணானாலும் ஏற்கனவே சில ரெடிமேட் தீர்வுகள் ஏற்பட்டுவிட்டன. நான் படித்தது, பேசியது எல்லாமே பிறர் சொன்னவைதான். ரெடிமேட் ஐட்டம்ஸ் பாஸ்ட் புட்ஸ்.. கருத்துயந்திரம். குழந்தை வாழ்வின் அர்த்தம். வாழ்க்கைக்கு அது கண்டிப்பாய்த் தேவையாவும், சில சமயம் அதிகம் என்று படுகிறது. தாகூர். குழந்தையை தூக்கிக்கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது. 74 வாழ்வில் பெரிதும் பிடிப்பில்லாமல் அக்கறையும் இல்லாமல் குழந்தைக்காக வாழும் பாவனை முகமூடியுடன் கோடானு கோடி பெண்கள் ஏதோ வாழ்கிறார்கள். தனது கஸ்டங்கள் தன் குழந்தைக்கு வேண்டான் என்றுதான் ஆண்வாரிசுகளை கூட அவர்கள் விரும்புகிறார்கள். தாம்பத்தியப் பிணக்குக்கும் தீர்வுகள் அறிந்தோ, அறியாமலோ குழந்தைகளை மையங் கொள்கின்றன. குழந்தைகளால் கூட சிலசமயம் அவை தீர்மானிக்கப்படுகின்றன.குழந்தைகளை கருத்தில் கொண்டு இழப்புகளே கூட விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறதாய் ஆகிப் போகின்றன. தன்னிடம் இளக்கம் காட்டும் அப்பாவின் இன்னொரு முகம் கணவனின் முகம் அம்மாவை குதறிப் போட்டிருக்கலாம் அல்ல்வா.. 95 இந்தக்குடும்பத்தில் என் பிடிப்பு தளரவில்லைதான். நான் விலகிப் போய்விடவில்லை என்றெனக்கு புரிகிறது. இந்த பயம் எப்போது பெண்ணைவிட்டு விலகுகிறதோ, அன்றைக்குத்தான் அவளுக்கு விமோசனம் பிறக்கும். அன்றைக்குதான் அவள் சார்பில் பேச ஆள் வரும் [ இந்த பயம் தான் அவளின் எல்லா வலைக்கும் மூல காரணம்.. பெண்ணுக்குமட்டுமில்லை. அயர்ன்ராண்டு சொன்ன தாய்ப்பாசத்திற்கும் அந்த பயம்தான் காரணம்.. ? ] 110 அறிவு சார்ந்த வாழ்க்கையும் சரி, உணர்வு சார்ந்த வாழ்க்கையும் சரி. இரண்டையும் நம்பமுடியவதில்லை. மதிப்பீடுகள் திடீரென்று நம்மை கைவிட்டுவிடுகின்றன.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி