நெஞ்சுக்குள்ளே ஆசை

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பிருந்தா சரண்


கோடிஆசை கொட்டிகிடக்கு
ஆசைமச்சான் உள்ளத்திலே
காட்ட ஏனோ தடையிருக்கு
பூட்டிவச்சீக நெஞ்சுக்குள்ளே

கருத்தமச்சான் அணச்சுகிட்டான்
முருக்கோிய கைகளிலே
அன்னகிளி சரணடஞ்சேன்
உரம்பாய்ஞ்ச நெஞ்சத்திலே

ஜன்னலோர மரங்களல்லாம்
எட்டிஎட்டி பாக்குது
படுக்கைவிாிப்பு நம்மபாத்து
வெக்கத்தோட சிவக்குது

மீசையிலே நரைச்சமுடி
கிரங்கடிக்குது என்னையே
பாசத்தோடு காந்தக்கண்கள் ?
கவர்ந்திழுக்குது தாங்கலே

ஒட்டிக்கிடக்கும் அன்றில் போல
பிாிய எனக்கு மனசில்லே
எம்மச்சானைவிட்டு பிாியணூம்னா
உசுரு பிாியும் உடலிலே!

—-
Bkonar@aol.com

Series Navigation

பிருந்தா சரண்

பிருந்தா சரண்