நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

ஞாநி


pareeksha

on stage since 1978

dear friends

please publish the following news in your cultural columns and oblige. thank you

gnani

writer director

9444024947 or 09869046486

——————————————————————-

a play on you, me, muniyan & the nuclear deal :

pareeksha theatre group performs badal sircar’s play in tamil – Muniyan directed by gnani on august 17th sunday at 6.30 pm at infosys hall, ramakrishna mission school, off north usman road, t.nagar, chennai under the auspices of Mudhra.

about pareeksha: a pioneering theatre group founded in 1978 performing regularly to date. pareeksha has introduced the plays of vijay tendulkar, badal sircar, brecht, priestley and pinter in tamil besides the tamil works of indira parthasarathi, na.muthusami, jeyanthan, pirabanjan, aranthai narayanan, ambai, s.m.a.ram,sundara ramasami, gnani, arigner anna to the theatre audiences of chennai.

about badal sircar: The founder of the street and open space theatre as a movement in India. He introduced the new concept of third theatre, and spread the principle of theatre for conscientisation. His plays continue to be regularly performed in several indian languages.

about muniyan: badal sircar’s bhoma is muniyan in tamil. muniyan is the village. we are muniyan. without muniyan we dont exist. Then what is the city ? muniyans driven out by the villages are in the city. the city grows into a megapolis rushing towards nuclear energy and weapons. which will prevail ? nuke or love ? This play through the chorus form mirrors our life to us. Pareeksha’s version has transformed the play to the contemporary tamil milieu.

நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்

பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் நாடகம் ஞாநி இயக்கத்தில் ஆகஸ்ட் 17, ஞாயிறு மாலை 6.30க்கு நடைபெறுகிறது. இடம்: இன்ஃபோசிஸ் அரங்கு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை அருகே, தியாகராய நகர். நிகழ்ச்சி ஏற்பாடு; முத்ரா.

பரீக்ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன நாடகக்குழு. விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர், பிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளது.

பாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில் மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல் சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.

முனியன்: பாதல் சர்க்காரின் போமாதான் தமிழில் முனியன். முனியன்தான் கிராமம். முனியன்தான் நாம். முனியன் இல்லாமல் நாம் இல்லை. அப்படியானால் நகரம் ? கிராமம் துரத்தும் முனியன்கள் நகரத்தில். நகரம் வளர்ந்து வளர்ந்து அணு சக்தி அணு ஆயுதம் என்று பிரும்மாண்டமகிறது. அணுவா? அன்பா ? எது மிஞ்சும் ?முடிவில் ? கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம் பிடித்துக் காட்டும் கண்ணடி இந்த நாடகம். பரீக்ஷாவின் தயாரிப்பில் இது முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.


gnanisankaran@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி