நீ திணித்த மூளையின் சத்தம்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

அஸ்காரி


காட்டுக் கத்தல் கத்துங்கள்
கூச்சலிடுங்கள்
செவிக்கினிய நாதமாயிருக்கின்றது.
ஓங்கி அறையுங்கள்
முரசத்தை
ஏங்கள் செவிப்பறைகள் கிழிய.
ஏங்கள் செவிகளுக்கு வலிக்கவுமில்லை

எங்களை வெட்டாயும் சுட்டும்
வாழிடங்களிலிருந்து விரட்டியபோதும்
எழுப்பிய ஓலக்குரல்கள்
அற்ப காகக் கரைவுகளாகட்டும்.
ஏங்கள் சுதந்திரத்தின்மீது
எழுப்பிய குரல்கள்; வெறும்
கூக்குரலாகட்டும்.
ஏங்கள் வாழ்வின்மீது
பாடப்பட்ட எளிய பாடலகள்
வெற்றுப் பிதற்றலாக தொியட்டும்.
எங்கள் வணக்கங்களின்
வசனங்களி;ன் ஆலாபனைகள்
காட்டுக் கத்தலாகட்டும்.
ஏங்களின் பிணங்களின் மீதுபாடப்பட்டட
ஓப்பாாிகள்
வெறும் துன்பியல் சம்பவமாகட்டும்.

எங்களின் இடிக்கப்பட்ட
குடிசைகளின் சிதைவுகளின் சத்தங்கள்
உன் பளிங்கு மாளிகையின்
அத்திவாரங்களின் இசையாகட்டும்.

எங்களின் உாிமைக்காய்
பாடிய நாக்குகளை
வெட்டியதால் குருதி
வடிந்தோடி உயிர்பிாியும்
ஈனசுரத்தில் முனகியது
மலர் பூக்கும் சத்தத்தையே
வெறும் காது கொண்டு கேட்கும்
சத்தங்களின் அனுபவஸ்த்தனான
உனக்கு கேட்டிருக்காது.
ஏனெனில் நாங்கள் கபாலத்தில்
சுமந்துகொண்டிருப்பது
நீ திணித்த மூளையை.
—-
அஸ்காாி, இலங்கை

Series Navigation

அஸ்காரி

அஸ்காரி