நீயும் நானும்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

நாகூர் ரூமி


====
நா செத்துப் போயிட்டதா
நெனச்சுக்குங்குங்கன்னு
ரெண்டு வருஷம் கழிச்சு சொன்ன
உன் குரலைக் கேட்டுத்தான் எனக்கு
உயிரே வந்தது.


2:20 AM 04/03/04
ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

நீயும் நானும்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

பவளமணி பிரகாசம்


உருவத்திற்கு உண்டு ஒரு நிழல்,
ஒலிக்கு உண்டு ஓர் எதிர் குரல்.

நீயும் நானும் அது போலத்தானே,
ஆனால் காணவில்லை அந்த இசைவுமே.

என் கோணல் நிழலாய் இருக்கிறாய்,
ஏறுக்கு மாறாய் எதிரொலிக்கிறாய்.

வானவில்லை குழந்தை போல் ரசிக்கிறேன்,
இயற்கை நிகழ்வென்று இகழ்வாய் நகர்கிறாய்.

குதித்தோடும் அருவி எனக்கு குதூகலம்,
புவிஈர்ப்புதானே என்றுரைத்து சலிக்கிறாய்.

கெட்டிமேளம் கேட்டெனக்கு கொண்டாட்டம்,
தளைகளைப் பூட்டிக்கொள்ளும் சடங்கென்பாய்.

இனிய இல்லறம் நல்லறமென்பேன்,
நயமாய் ஏய்க்கும் நாசவலை என்பாய்.

குழவியை கொள்ளை இன்பம் என்பேன்,
கழுத்தில் மாட்டிய நுகத்தடி என்பாய்.

இளையோர் ஆட்டம், பாட்டம் எனையிழுக்கும்,
தனிமை இருட்டைத் தேடி நீ தவமிருப்பாய்.

புதிதாய் பிறந்த நாளை வரவேற்பேன்,
சென்று மடிந்த நாளுக்கு துக்கிப்பாய்.

இருண்ட மேகத்தை வெறுத்திடுவாய்,
ஒளிந்திருக்கும் ஒளிக்கீற்றை நினைத்திடுவேன்.

நற்கதி கிடைக்குமென்று நம்பியிருப்பேன்,
தலைவிதியை எண்ணி நொந்திருப்பாய்.

வடக்கும், தெற்கும் எதிரெதிர் துருவந்தான்,
இருந்தும் இரண்டிற்குமிடையே ஈர்ப்புதான்.

ஒரு ஓட்டுக்குள் முட்டை கருவிரண்டு குடியிருக்கும்,
என் ஆவிக்குள்ளுரையும் கருப்பு, வெள்ளை மனமிரண்டு.

எதிர்மறை மனோதத்துவமிது மிக வினோதமே,
எளிதில் விளங்காது, ஏற்று வாழ்வதும் இடர்பாடு.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்