நீயும்…

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

கற்பகம்


—-
இருள் விலகாத
இளங்காலைப்
பொழுதைப் போல…

ஒலியெழுப்பாத மெல்லிசையாக
விரிகின்ற
மலரிதழ் போல…

மனதுக்குள் நுழைகின்ற
சுகத் தென்றல் உன் நினைவு!!

இளம் வேர்களை
ஈர மண்ணுக்குள்
முதன்முதலாய்
புதைக்கின்ற விதை போல…

கருப்பையின்
சுவர்களை உரசி
அசைகின்ற குழந்தைபோல…

உயிரின் நாதத் தந்திகள் மீட்டும்
அதிசயம்தான் உன் ஸ்பரிசம்!!

ஆழமில்லா அலைகளின் மேல்
ஆடுகின்ற கட்டுமரமாய்…

வெளிச்சம் வந்தும்
அகல மறுத்த
மங்கலான முழு நிலவாய்…

புல்லின் கீழே
ஒளிந்துகொண்டு
மிச்சமிருக்கும் பனித்துளியாய்…

மனதின் சந்து பொந்துகளிலெல்லாம்…
புகுந்து கொள்ளும்
போய் வா என்ற
உந்தன் கடைசீ பூமுகம்!


karpagam610@yahoo.com

Series Navigation

கற்பகம்

கற்பகம்