நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

மொருங் எக்ஸ்பிரஸிலிருந்து


உங்களுடைய சம்பளம் உங்களுடைய பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைவிட மெலியது

உங்களுடைய வேலை, செய்தி சேகரிப்பதிலிருந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு டீ வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே..

முதலமைச்சார் நெய்ஃபூ ரியோ அவர்களை பற்றிய செய்தியை வெளியிடுகிறீர்கள். தலைப்பு எப்போதுமே ஒரே தலைப்புதான். “அமைதிக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்கும் ரியோ வேண்டுகோள் விடுத்தார்”

அதே செய்தியை மற்ற பத்திரிகைகளிலும் வரிக்கு வரி தலைப்புக்கு தலைப்பு படிப்பீர்கள்.

முந்திய தினங்களிலும் இதே தலைப்பைத்தான் வைத்தீர்கள் என்பதை மறந்திருப்பீர்கள்

வாழ்க்கையில் ஒரு தடவையாவது நாகா தலைமறைவு இயக்கத்தின் நபர் ஒருவர் உங்களை மிரட்டியிருப்பார்

முதல் பக்கத்தில் தலைமறைவு இயக்கங்களின் செய்தியை வெளியிடவில்லை என்பதற்காக தலைமறைவு இயக்கத்தின் ஆள் ஒருவர் உங்களை ஒருதடவையாவது மிரட்டியிருப்பார்

தலைமறைவு, போராளி, இயக்கத்தினர் என்ற எந்த வார்த்தையை உபயோகப்படுத்தியிருந்தாலும் அதற்காக உங்களை அவர் மிரட்டியிருப்பார்

இருக்கும் பல இயக்கங்களின் எந்த இயக்கத்தின் செய்தியை வெளியிட்டாலும், அந்த இயக்கத்தை நியாயப்படுத்துகிறீர்கள் என்று மற்ற இயக்கங்களிலிருந்து மிரட்டலை சந்தித்திருப்பீர்கள்.
ஏதாவது ஒரு செய்தியை வைத்துக்கொண்டு, பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் இந்த முக்கியமான செய்தியை உடனே பிரசுரிக்கும்படி ஒரு குடிமகனாவது உங்களிடம் கேட்டிருப்பார்

சொல்லப்போனால், எல்லா குடிமகன்களும் இதே மாதிரி நிறைய செய்திகளை வைத்துக்கொண்டு முதல் பக்கத்தில் உடனே பிரசுரிக்கும் படி கேட்டிருப்பார்கள்.

ஐந்தாம் பக்கத்தில் அந்த செய்தியை போட்டிருப்பீர்கள். அதற்காக அவர்கள் உங்களை பாரபட்சம் காட்டுகிறீர்கள், சமூகத்தில் அக்கறை இல்லை என்று உங்களை கரித்து கொட்டியிருப்பார்கள்.

உங்கள் மீது வழக்கு போடுவதாக ஒருதடவையாவது மக்கள் உங்களை மிரட்டியிருப்பார்கள்.

உங்களது பத்திரிக்கை ஆசிரியர் எப்போதாவது ஏதாவது ஒரு வழக்கில் இருந்துகொண்டே இருப்பார்.

க்வரேஜ் கொடுக்கும்படி பிறந்தநாள் பார்ட்டிகள் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் உங்களுக்கு அழைப்பு வரும்
தேவையில்லாமல் ஒரு ஆள் உங்களிடம் குழைந்து இனிப்பாக பேசினால், அவரது மடத்தனமான விஷயத்தை முதலாவது பக்கத்தில் போடுவதற்காக இருக்கும் தெருக்களை சுத்தம் செய்வதை “சமூக சேவை” என்று கூறுவீர்கள். அதே மாதிரிதான் 12 லட்சம் நாகாக்களும் கூறுவார்கள்.
திருடர்களை “பணத்தை எடுப்பவர்கள்” என்று எழுதுவீர்கள். (மற்ற நாகா பத்திரிக்கைகளும், கற்பழிப்பவர்களை “கன்னித்தன்மை எடுப்பவர்கள், அல்ல்து இது மாதிரி வினோதமான பெயரகளை சூட்ட்லாம்)
உங்கள் பத்திரிக்கையின் சிறப்பான வினியோகிப்பவர் பெரும்பாலும் நாகாவாக இருக்கமாட்டார்

183000 மைல்கள் பயணம் செய்து நாகாலாந்துக்கு எந்த வெளிநாட்டவர் வந்தாலும் அவர்களிடம் நீங்கள் கேட்கும் ஒரே கேள்வி, :உங்களுக்கு நாகாலாந்தை பிடித்திருக்கிறதா?” என்பதுதான்

எல்லா வெளிநாட்டுக்காரர்களுக்கும் நாகாலாந்தின் அரசியல் பிரச்னைகள் தெரிந்திருக்கும் என்று நம்புவீர்கள். அவர்களுக்கு நாகாலாந்து என்றாலே என்னவென்று தெரியாது என்பதை பேச ஆரம்பித்ததும் தெரிந்துகொள்வீர்கள்.

உங்கள் பைசைக்கிள் காணாமல்போனால், உங்களது தலைமுடியை பிய்த்துக்கொண்டு உரத்த குரலில் ஓலமிட்டு, முதலமைச்சர், கவர்னரிலிருந்து, இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி, பராக் ஒபாமா வரைக்கும் முறையிடுவீர்கள். ஆனால், தலைம்றைவு இயக்கங்களின் ஆட்கள் எந்த பத்திரிக்கையாளரை உதைத்தாலும் (இது தினசரி நடப்பது) உங்களிடமிருந்து ஒரு முனகல் கூட வராது.

http://www.morungexpress.com/united_colors_of_naga/43139.html

Series Navigation

மொருங் எக்ஸ்பிரஸிலிருந்து

மொருங் எக்ஸ்பிரஸிலிருந்து