This entry is in the series 20100227_Issue

ஆ. மீ. ஜவஹர்


அடிக்கடி எதிர்படும்
தற்செயல்களின் நீட்சியில்
இப்பொழுது நிறைய சேர்ந்துவிட்டது
முற்பிறவி பற்றியதான
நம்பிக்கைகள்
நிகழ் நிமிடங்களின்
வரிசையற்ற சம்பவங்கள்
அடிக்கடி வந்து
கனவுகளை கெடுக்கின்றன
சம்பவங்களை நேர்த்தியாக
பொருத்தி பார்க்க
வாய்ப்புகளை
அளித்துகொண்டயிருக்கிரார்கள்
முகம் மாறிய மனிதர்கள்
மூன்றாம் தலைமுறை நாகரீகத்தில்
ஏதேனும் ஒரு ஓரத்தில்
ஒட்டியபடியே
வந்துகொண்டிருக்கிறது
ஆச்சரியமூட்டும் மூடநம்பிக்கைகள்.

– ஆ. மீ. ஜவஹர் nagaijawahar@gmail.com

Series Navigation