நிழலின் ஒளி
ஆர் கணேஷ்
என் மனைவியின்
சினேகிதியும்
அவளின்
நான்கு வயது மகனும்
ஒரு விபத்தில்
பலியாகினர்
மெதுவாய்…
பத்திரமாய்…
உடையாமல் பார்த்துக் கொள்….
என்று
கூறியவண்ணம் நான்
ஒவ்வொரு முறை
அவள் கொடுத்த
குபேர விளக்கை
என் மனைவி சுத்தம் செய்யும் போது !
ganeshadhruth@yahoo.co.in