நிலவு ஒரு பெண்ணாகி

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

கே ஆர் விஜய்


நிலவே
நீயும் பெண்ணோ
துயிலும் நேரத்தில்
உடனிருக்கும் நீயோ
வானம் நிறம் மாற
மறைகின்றாயே…

நிலவே
நீயும் பெண்ணோ
துணையாக வருகிறாயே தவிர
துணைவியாய் வருவதில்லையே…

நிலவே
நீயும் பெண்ணோ
என்னுள் வெளிச்சம் தருகிறாய்
சில நேரங்களில்…மட்டுமே…

பெண்ணே
நீயும் நிலவோ
நிலவிலும் களங்கம் உண்டென்பதால்..

பெண்ணே
நீயும் நிலவோ
வானம் உன்னை வழிநடத்துதல் போல
ஆடவர் உனக்கு வழி அமைப்பதனால்…

பெண்ணே
நீயும் நிலவோ
எட்டாத உயரத்தில்
அமர்ந்து என்னை வதைப்பதனால்…

Series Navigation