நிலவுக்கும்…….

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

றஞ்சினிஇருள் பொறாமைகொள்ள
வெளிச்சம்போட்டு
எனை இழுத்து
முத்தமிடும் நிலவை
என் மகன்
படம்பிடிக்கிறான்
நிலவுக்கும் எனக்கும்
காதலென்பது
அவனுக்கும் தெரியும்
நிலவும் அவனிடம்
அன்பாய் இருப்பதால்
அவனுக்கும் நிலவை
அதிகம் பிடிக்கும்


shanranjini@yahoo.com

Series Navigation