நிறங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ஹேமா(சுவிஸ்)******************
எல்லோராரும் முடிவதில்லை
^
எதிர்த்துப்பேச
^
பல் இளிக்க
^
பசப்ப
^
பயப்பட
^
ஒத்துப்போக
^
பொய்யாய் புகழ்பாட
^
புறம்கூற
^
பச்சோந்தியாய் வாழ….
உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.

நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே
நானும் அப்படியே!!!

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)