This entry is in the series 20031218_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


1.

உன்னைக் குத்தினால்
குருதி வழிகிறது
சிவப்பாய்
நீயும் மாறுகிறாய்
சிவப்பாய்
பிறகேன் இப்படி இருக்கிறாய்
கறுப்பாய்
வெளுப்பாய்
பழுப்பாய்
மஞ்சளாய்
பச்சையாய்
நீலமாய்

2.

எல்லாருக்கும்
இரத்தம்
சிவப்புதான் என்று
சொல்லிச் சொல்லிப்பார்த்தாகிவிட்டது
இன்னும்
சோதித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்

3.

சில கருப்புச்சட்டைகள்
இருட்டில் கைதொழும்
காக்கிச்சட்டைகள்
கற்பினைச் சூறையாடும்
சிவப்புச்சட்டைகள்
கறுப்புப் பணம் புரட்டும்
காவிச் சட்டைகள்
நீலப்படம் செய்யும்
பச்சைத் துண்டுகள்
கட்டடங்கள் வளர்க்கும்
எல்லாவற்றையும்
பார்த்துச் சிரிக்கும்
நிறமற்ற என் நிர்வாணம்


(gk_aazhi@yahoo.com)

Series Navigation