நிர்வாண நடனம்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ஹெச்.ஜி.ரசூல்


உடல்கள் வெந்து தெறித்து எரிய
திசைப்பரப் பெங்கும் தீப் பிழம்பின் நாக்குகள்
குளிரின் உறைதலில் அலறல் மேலிட
உயிரிழந்து மரத்துப் போகும் உடல்கள்
இன்னொரு நரகில்
தாகத்திற்கு உருகிய செம்பின் பானம்
தொண்டைக் குழி கருகி உதிரும்
படமெடுத்த பாம்பின் கொத்தல்களில்
ரத்தம் சொட்ட சொட்ட
தேள்களின் கொடுக்குகளால் கீறப்பட்டு
சகாமல் செத்து தொலைக்கும்.
நெருப்பை உடுத்திக் கொண்ட
நிர்வாண உடல்களில்
எரியாமல் கருகாமல்
துருத்திக் கொண்டிருக்கின்றன
குறிகள் மட்டும்

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்