நிஜங்களையும் தாண்டி…

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

வேதா மஹாலஷ்மி


மணி 6!
இளம் காற்று
இனிய தட்பம்
ஓசையின்றி சாலை….
….
காய் தீர்ந்துவிட்டது
கடலைமாவு வாங்க வேண்டும்
நாளை ஞாயிறு…
அரிசி கடை இருக்காதோ ?
ஒரு காபி குடித்தால் தேவலை!
….
….
மணி 6!
அழகு மாலை,
அணில் சத்தம்,
வெற்றுக் காகிதம்…

ஊடலுக்குப் பிறகான
நம் கூடலை,
நினைவூட்டும் கானம்!

ம்ஹூம்…
வீணாகக் கூடாது…
காய்தானே!
சப்பாத்தி போதுமே….
பிறகு பார்க்கலாம் – இப்போது
கவிதை எழுதலாம்!!

veda
piraati@hotmail.com

Series Navigation