நிகழ்வு

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

ஜெயந்தி சேது


வாழ்க்கையின் நிச்சயம்
வராமலிருப்பதும் நிகழ்வாகி
வந்ததும் வருவதும் நிகழும்..
இது நிகழாமலிருந்தால்..
இது நிகழ்ந்திருந்தால்..
வெற்றிகளையும் விரக்திகளையும்
நிர்ணயிக்கும் நிர்ப்பந்தம்..
நிகழ்வுகள் நிச்சலனமாய்விட்டால்
நிச்சலனமாய்ப் போவதே நிகழ்வாகும்
நிகழ்ந்து நிகழ்ந்து நின்றுவிடுமா ? ?
நிகழாது…
நிகழ்வு நிச்சயம்.
நிகழ்கின்ற வாழ்க்கையைப் போல.

***

jsethu@qwest.com

Series Navigation

ஜெயந்தி சேது

ஜெயந்தி சேது