நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பா .தேவேந்திர பூபதி


என்றைக்கோ
சிதைந்து போயிருக்க
வேண்டியவற்றையெல்லாம்
நீ
பாதுகாத்து வைத்திருக்கின்றாய்
பாலாய்
தயிராய்
உனது பேரழகு கவனிக்கப் படாமலேயே
இருக்கின்றது
வேலியில் பிறந்த கள்ளிச் செடியாய்
உன்னை உனக்கு
பெயர் சூட்டச் சொல்லி
கட்டளையிட்டது யார் ?
உன்னில் குடிகொண்டிருக்கும்
உன்னையன்றி !

எத்தனையோ பேரதிசயங்கள்
தினம் தினம் நிகழ்ந்த போதும்
சில பூக்கள்
வேருக்குத் தெரியாமலே
மலர்ந்து கொண்டேயிருக்கின்றன!
ஒரு
பிச்சை காரனின்
எதிர்பார்ப்பற்ற
குரலைப் போல

—-
kousick2002@yahoo.com

Series Navigation

author

பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி

Similar Posts