நாயின் வயிற்றில் மணிக்கயிறு

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

என் எஸ் நடேசன்பூவ்¢ பூழ்¢ ஞ்அக்றூவ்

வேலை சம்பந்தமாக குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குப் போயிருந்தேன். அங்கு நிற்கும் போது மெல்பனிலிருந்து மனைவி தொலைபேசியில் சொன்ன தகவல்

‘எங்கள் வீட்டு நாய் மகளின் காலுறையை விழுங்கி விட்டது.”

வீட்டில் நாய்க்கு வேளாவேளைக்கு உணவு வைக்காதமையால்தான் நாய் பசியில் காலுறையை விழுங்கிவிட்டது என எண்ணிவிடாதீர்கள்.

சிலநாய்களுக்கு இப்படியும் சில பழக்கங்கள் உண்டு: பந்து, காலுறை, மணிக்கயிறு, விதைகள் இப்படி ஏதாவது ஒன்று அதன் விளையாட்டுப்பொருள். விளையாடும் வரையில் சா¢, விழுங்கிவிட்டால் வினைதான். நாய்க்கு மட்டுமல்ல, நாயை பராமா¢ப்பவர்களுக்கும்தான்.

‘நாளைவரையும் பொறுத்திருந்து பாருங்கள், சிலவேளை வாந்தி எடுக்கும். எதற்கும் நான் வரும்வரையில் காத்திராமல், நான் வேலைசெய்யும் ‘லோர்ட் ஸ்மித்” மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்”- என்று மனைவியிடம் சொன்னேன்.

அதன்பின்பு மனைவியிடமிருந்தோ மகளிடமிருந்தோ தொலைபேசி வரவில்லை. வீடு திரும்பி, ஒரு வாரகாலத்தின் பின்பு- வீட்டின் பின் வளவை சுத்தப்படுத்திய வேளையில் – எங்கள் வீட்டு நாய் விழுங்கியதாக சொல்லப்பட்ட, மகளின் காலுறை சிறிய கயிறுபோன்று தி¡¢ந்து உருமாறி அனாதையாகக் கிடந்ததைக் கண்டேன்.

நாய்கள் சிறிய கடற்பாறைகள், கற்களையும் விழுங்குவதுண்டு, இங்கிலாந்தில் ஒரு தச்சுத் தொழிலாளியின் நாயின் வயிற்றிலிருந்து 3.5 கிலோ எடையுள்ள ஆணிகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

நாய்களை வளர்ப்போர் – இதுவிடயத்தில் சற்று அவதானமாகத்தான்
இருக்கவேண்டும். நான் மேலே குறிப்பிட்ட பொருட்கள் மாத்திரமல்ல, தூண்டில் கயிறு, மணிக்கயிறு, முதலானவையும் பிரச்சினைக்கு¡¢யவைதான்.

சிலவேளையில், தூண்டில் கயிறில் பொருத்தப்பட்ட இரையை விழுங்க எத்தனிக்கும் நாய் – அந்த ரையுடன் கயிறையும் விழுங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

மீன்பிடிக்கப்புறப்பட்டவர் – தூண்டில் கயிறுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிப்பார்.

நாயால் விழுங்கப்படும் தூண்டில்கயிறு நீளபாட்டில் நாயின் குடலுக்குள் இருந்து, குடலின் அசைவுகளுக்கு ஏற்ப – உருளும். அதனால் குடல் வெட்டுப்பட்டு சேதமுறும்.

இப்படியொரு நிலைமை நாய்களுக்கு நேர்ந்தால் குடல் அழுகும். குடலை வெட்டி எறிய வேண்டிய நிலைமையும் தோன்றும்.

அண்மையில் நடந்த சம்பவம் வெகு சுவாரஸ்யமானது.

ஒரு இத்தாலியர், தமது நாய் வாந்தி எடுப்பதாக காண்பிக்க வந்தார்.

அது பொ¢ய நாய். மலமூட் இனத்தைச் சேர்ந்தது. நாய் வாந்தி எடுத்தமைக்கான காரணம் எதுவும் அவருக்கும் தொ¢யாது, எனக்கும் தொ¢யாது. எனினும், வாந்தியை தடுப்பதற்கான மருந்தைக் கொடுத்து அனுப்பினேன்.
எனினும், நாய் குணமடையவில்லை. இரண்டாம் நாள் அவர் கவலையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அத்துடன் வீட்டிலிருந்த மணிக்கயிறு காணாமல் போயிருப்பதாகவும், நாய் அதனுடன் விளையாடுவதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருப்பதாகவும் சொன்னார்.

X Ray மூலம் மணிக்கயிறு தொ¢யாது. Ultra Sound மூலம் பார்க்கலம். ஆனால் என்னிடம் அந்த வசதி இல்லை. Ultra Sound எடுத்து வாருங்கள்” என்று சொன்னேன்.

ஒரு மணி நேரத்தில் நாயுடன் வந்தார். ‘என்ன நடந்தது?”

Ultra Sound இங்கு அதிக பணம் கேட்கிறார்கள். நீங்கள்தான் நாயைக்குணப்படுத்த வேண்டும்” – என்று அப்பாவித்தனமாக பேசினார்.

‘இனி – இதனைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. வயிற்றைக் கீறி வெட்டிப்பார்க்க வேண்டும். (Exploratory Laparotomy).
கயிறு இருந்தால் எடுக்கமுடியும். எனினும், இந்த சத்திர சிகிச்சையை என்னால் தனியாக நின்று செய்ய முடியாது. இன்னுமொரு மிருக வைத்தியர் வேண்டும். செலவும் வரும்” – என்றேன்.

அதற்கு அந்த நபர் சம்மதித்தார். அவரது நாயின் பெயர் அலெக்ஸ்.

சத்திர சிகிச்சையின் பின்பு, எனது கிளினிக்கில் ஐந்துநாட்கள் வரையில் வைத்திருந்து பராமா¢த்தேன்.

ஐந்தாம் நாள் கிளினிக் வாசலில் காத்திருந்தார்.

‘எப்படி எங்கள் அலைக்ஸ்?”
“உங்கள் அதிர்ஷ்டம்தான், அலெக்ஸ் உயிர் பிழைத்துவிட்டது. என்னாலும் நம்ப முடியவில்லை” – என்றேன்.
‘அப்படியா?” – அந்த இத்தாலியர் முகத்தில் அதிர்ச்சி முலாமிட்ட மகிழ்ச்சி.

‘மூன்று அடி நீளமான சிறுகுடல் வெட்டி அகற்றப்பட்டது. பெருங்குடலிலும்,இரைப்பையிலும் துவாரம் இட்டு, அந்த கயிற்றை சிறு சிறு துண்டுகளாக எடுத்தோம். ஐந்து மணிநேர சத்திர சிகிச்சை” – எனச் சொல்லிவிட்டு அவரது முகத்தை கூர்ந்து கவனித்தேன்.

எந்த சலனமும் இல்லை.

நான் சொன்னவற்றை அவர் பூ¢¡¢ந்து கொண்டதாகவும் தொ¢யவில்லை.

இனிமேல் – கயிறுகளை நாயின் கண்களுக்கு தென்படும் விதமாக வைத்துவிடாதீர்கள். நாய், கயிறுடன் விளையாடுவதைக் கண்டால், நாயிடமிருந்து கயிறை அப்புறப்படுத்தப்பாருங்கள். இல்லையேல், மீண்டும் கஷ்டம்தான்.” – என்றேன்.

‘டொக்டர், நான் உடனே வீட்டுக்கு நாயுடன் செல்ல வேண்டும். அங்கே சுமார் இருபத்தி ஐந்து பேர் அளவில் அலெக்ஸ் வருகைக்கு காத்திருக்கிறார்கள்” என்றார்.

நாய் எனது கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து வீட்டில் பலரும் துக்கம் அனுட்டித்திருக்கிறார்கள்.

நாய் பிழைக்குமா – பிழைக்காதா – என்ற கவலையுடனேயே – அவர்கள் ஐந்து நாட்களையும் கழித்திருக்கிறார்கள்.

ஆனால் – இந்த அலெக்ஸ_க்கு அது தொ¢யுமா?

நாய்க்கு நடந்த ய சத்திர சிகிச்சை அல்ல, அவரது அப்போதைய கவலை.

அதனை உயிருடன் மீட்டு வீட்டுக்கு எடுத்து வருகிறேன் – என்பதை வீட்டிலிருந்து காத்திருக்கும் அந்த இருபத்திஐந்து பேருக்கும் புளகாங்கிதத்துடன் பிரகடனப்படுத்தவேண்டும் என்பதுதான் அவரது ஆவல்.

—————————————————————————–

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்