நான் பதித்த மலர் கன்றுகள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சித்தகவி


கடும் குளிரிலும் நெஞ்சினில் கனன்றெரியும்
காதல் சூட்டின் இதத்துடன்
உன்னை மனதில் நினைத்துக் கொண்டே
பரவசத்துடன் நான் பதித்த கன்றுகள் அனைத்தும் பூத்துக்
குழுங்குகின்றன விதம் விதமான மலர்களுடன்;

இதோ ஒரு பட்டு ‘ரோஜா ‘ உன் மேனியைப் போல, அதோ ஒரு மஞ்சள் ‘துளிப் ‘ உன் நிலவொளி
ததும்பும் முகத்தைப் போல; இங்கே பார் மரிக்கொளுந்துக் கூட்டம் உன் புன்னகை போல; அங்கே பாரடி
உன்னைப் போலவே தலை சாய்த்து பார்க்கும் ஒற்றை லில்லியை;
உன்னை நகல் எடுத்து நான் பார்த்து ரசிக்க என் காதல் கனவுகளை
உரமாக்கி நான் பதித்து பூத்து குழுங்கும் மலர் கன்றுகள்;
பச்சை பசும் புல்வெளியில் பூத்துக் குழுங்கும் மலர்கள் பார்த்தும்
காய்ந்த சருகாய் என் மனம்; நகல்கள் எப்படி அசலாக முடியும் தோழி ?

msksam@hotmail.com

Series Navigation