நான் நிழலானால்

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

ஸ்ரீரஞ்சனிஇடியும் மின்னலுமாக சிடுசிடுத்த பெருமழை ஓய்ந்து போக வந்த அமைதி அழகாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. வளவில் இருந்த மரங்கள் யாவும் மழையில் நனைந்து சிலிர்த்து ஒரு புத்துணர்வுடன் நிற்கின்றன. தெருக்கூட நீருற்றி அழகாக கழுவப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தில் மிளிர்கிறது.

என் மனமும் போராடிப் போராடித் தெளிவு பெற்றிருக்கிறது. கையில் வைத்திருந்த என் மருமகளின் கடிதத்தை மீள வாசிக்கிறேன். “மாமி, நன்கு யோசித்து முடிவு எடுங்கோ, உங்களுக்கு எது பிடிக்குதோ அதைச் செய்யுங்கோ, ஆனால் எடுக்கும் முடிவை விரைவாக எடுங்கோ. நீங்கள் இங்கிருந்து போய் 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் இனியும் தாமதிப்பது விசா புதிப்பிப்பதில் பிரச்சனையைத் தரும். ஒரு லட்சம் ரூபா அனுப்பியுள்ளோம். நீங்கள் வரவில்லை என்றால் மாமா ஆசைப்படி அதற்கு ஒரு கார் வாங்குங்கோ……”

பத்து மாதங்களின் முன் கனடா போவதற்கு என வீட்டை விட்டு வெளிக்கிடட போது என் மனம் கனவுகளைச் சுமந்து போகவிலலை, மாறாக குழப்பங்களையும் போராட்டங்களையுமே சுமந்து சென்றது. யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பேப்பர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கனடாவில் முதியோர் படும் அவலங்களை ஒன்றுக்கு பத்தாக படம் போட்டு கதை கதையாக சொன்னது என் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கியது உண்மையே! எங்கோ, ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றவில்லை. என்னைக் கூப்பிடுவது பிள்ளை பார்க்கவும், சமைக்கவும் தான் என்று என் மனம் முடிவுகட்டிவிட்டது. பிள்ளைகள் சொல்வதற்கு உடன்படாவிட்டால் சமூக உதவியும் முதியோர் இல்லங்களும் தான் வரப்பிரசாதம் என்றே என் மூளையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக தற்பாதுகாப்புத் திட்டம் போடுவதிலேயே என் சக்தி முழுவதையும் விரயம் செய்தேன்.

பிள்ளைகளுக்கு நான் வேலைக்காரியாக இருக்கப் போவதில்லை, உழைத்து சீவித்த நான் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்தில் வாழப் போவதில்லை என்ற வைராக்கிய உணர்வுடனேயே கனடா விமான நிலையத்தில் காலடி வைத்தேன்.

அந்த நாள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. ஆறு மாதக்குழந்;தை எழில் மருமகளின் கையில் இருந்து இறங்குவதற்கு அடம் பிடித்துக்கொண்டிருந்தான் மூன்று வயது மகள் மாதுரி தன்னுடம் எங்கோ வருமாறு என் மகனின் கையை இழுத்துக் கொண்டுடிருந்தாள். “எப்படிப்பயணம்?” என ஆர்வமாக மகன் கேட்க அந்;நியரைப்பார்ப்பது போல் பேரப்பிள்ளைகள். “தம்பி என்னால் வேலை செய்ய முடியாது, என்னிடம் எதுவுமே கேட்கக் கூடாது, நாடு பிடியாவிட்டால் உடனே ஊருக்கு போய்விடுவேன்” என்று அச்சாரம் வைத்தேன். “சரி உதைப் பிறகு கதைக்கலாம் இப்ப பயணத்தைப் பற்றிச் சொல்லு” என்றார் என் கணவர். “அம்மா நீங்கள் எங்களுக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை ஒன்றுக்கும் யோசிக்காதேயுங்கோ” இது என் மகன்.

அதன் படி யாருமே எதைச் செய்யச் சொல்லியும் என்னிடம் கேட்பதில்லை. காலையில் அவசர அவசரமாகச் சமைத்து வைத்துவிட்டுப் போவார்கள். மாலை வந்து அதே அவசரத்துடன் அடுத்த சமையல் செய்வார்கள். பின் தமது பிள்ளைகளின் வேலை பார்த்து, அவர்களின் பாடங்களில் உதவி, பிள்ளைகளைப் படுக்க வைக்க பொழுது போய்விடும். சனி, ஞாயிறும் பிரத்தியேக வகுப்புக்கள், கடைக்குப் போவது, உடுப்புத் தோய்ப்பது, வீடு துப்பரவு செய்வது என்று கழிந்து விடும்.

என் பார்வையில் யாருமே என்னையோ, என் கணவனையோ பொருட்டாக நினைத்ததாகத் தெரியவில்லை. நாம் ஏன் இப்படி ஒரு சடப்பொருளாக நாலு சுவருக்குள் சீவிக்க வேணும். எங்கடை ஊரில் என்றால் கடைசி காலாற நாலு நடையாவது வளவுக்குள் நடக்கலாம். நாலு பயிரை நடலாம், நாலு பேரோடை கதைக்கலாம். கோயில், குளம் என்று ஆசைக்குப் போகலாம். இது என்ன வாழ்க்கை. கனடாவில் காரும் கட்டிடமும் தான் கண்ட மிச்சம் என்று மனதுள் ஆவேசம் எழுந்தது. நாங்கள் ஊருக்குப் போகப் போகிறோம் என அடம் பிடித்தேன்.

ஒருவருட வாழ்வு ஒரு யுகம் போலிருந்தது. கடுகடுக்கும் குளிரில் pயவெளஇ டிழழவளஇ அவைவநளெ என்று எல்லாம் மாட்டி கொண்டு பேரப்பிள்ளைகளை பாடசாலைக்கோ, விளையாட்டு மைதானத்துக்கோ கூட்டித்; திரியும் என் வயது ஒத்தவர்களைப் பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கும். காசுக்கு வழியில்லாததால் க~;டப்படுதுகள் என்றே எண்ணத் தோன்றியது.

எங்களுக்கு எங்கடை காசு இருக்கும் போது நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல என்று வீம்பு பேசியதை நினைக்க இப்ப வெட்கமாக இருக்கிறது. அந்த முதியவர்கள் பேரப்பிள்ளைகளின் பொறுப்பை சந்தோ~மாகக் கூட செய்திருக்கலாம். நான் அல்லாத என்னை எனக்குள் நான் தேடித் தேடிப் பார்த்து ஏமாந்து போனேன் நான்! இங்கு இப்ப எல்லாம் இருக்கின்றது. பணம், எல்லைகள் அகலப்படுத்தப்பட்ட பெரிய வளவு, வீடு எல்லாம் இருந்தும் என்ன? மனதில் அமைதி இல்லை. ஏதோ ஒரு தாகம்! பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது. ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சி! குற்ற உணர்வு! முடிவு எடுத்து விட்டேன்.

நான் மீண்டும் கனடா போகத்தான் போகிறேன். ஆனால் புதிய கனவுகளுடனும் திட்டங்களுடனும். போகப் போகிறேன். போய் முன்பு போல் ஒட்டாமல் வாழப்போவதில்லை. இனி வாழப் போவதோ சில காலம் தான். வாழ்க்கையில் ஒரு அர்;த்தம் இருக்க வேண்டும். அதனால் போய் என் மனத்தாங்கல்களைப் பேசித்தீர்ப்பேன்! இங்கு போல் விறகு தேடி நெருப்பு ஊதிஊதி புகையில் கண் வெந்து கலங்கி அழும் சமையலா அது!
சமையலில் பேரப்பிள்ளைகளின் வேலைகளில் ஒரு பங்கு ஏற்பேன். அதே போல் அவர்கள் பங்காக தினமும் அரைமணி நேரம் எனக்கு ஒதுக்கச் சொல்லி என் மகனைக் கேட்பேன். பேரப்பிள்ளைகளுடன் பாடசாலையில் நடந்தவற்றைக் கதைக்க அவர்கள் உணர்வுகளைப் பரிமாற என்பிள்ளை டிநனவiஅந என தினமும் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் எனக்கும் ஒரு உhயவ வiஅந வேண்டும். வானொலியில் நான் கேட்டது பற்றி கதைக்க, தொலைபேசியில் உரையாடியதை பங்கிட என் உணர்வுகளை வெளிப்படுத்த என் மகனின் நேரம் எனக்குத் தேவை என உரிமையாகக் கேட்பேன் அவர்கள் சுமையில் நான் பங்கு கொள்வதை என் திருப்தியாக நான் நினைக்கும் பொது என்னுடன் கதைப்பதை நிச்சயம் அவர்கள் சுமையாக நினைக்க மாட்டார்கள். நேரத்துடன் ஓடும் அவர்களுக்கு அவகாசம் கிடைக்க நாமும் ஒத்துழைக்க வேண்டும். இது ஒத்துழைப்புத்தான் அன்றி அடங்கிப் போதல் அல்ல.

விழாக்களுக்குப் போக பிள்ளைகளால் முடியாவிட்டால் நாம் வாடகைக் காரில் போகலாம். எங்கள் இருவரது பென்சனையும் கனடாவுக்கு மாற்றிவிட்டால் பிள்ளைகளின் காசைச் செலவழிக்கும் மன உளைச்சலும் இராது. யோசிக்க எல்லாமே பொருத்தமாகவும் அர்த்தமாகவும் இருக்கிறது.

நான் எனக்காக வாழ்வதிலும் பார்க்க என் சந்ததிக்காக வாழப் போகிறேன் என்பதில் மனது இனிக்கிறது. நிறைய சுமை குறைந்து காற்றில் பறப்பது போல் மனசு இலேசாக இருக்கிறது. பிள்ளைகளை வளர்த்த போது பட்ட அவலங்களிலும் தியாகங்களிலும் கிடைத்த வெற்றி மனதை நிறைத்து பொருள் உள்தாக்கியது போல் என் இந்த முடிவும் எம் அனைவரதும் வாழ்வையும் பொருள் மிக்கதாக மாற்றும் என்று நினைப்பில் சிலிர்த்துப் போகிறேன் நான்! பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் அவர்களுடன் விளையாடுவதிலும் என் நேரம் செலவழி;ய—–அவர்களின் முக்கிய ஒரு உறவாக நான் மாறிவி;;ட என்னை விட்டு விலகாமல் என்னைச் சுற்றி வரப்போகும் என் பேரப்பிள்ளைகள் என் கண் முன் வந்து போகிறார்கள். எத்தனை ரம்மியமான உணர்வு அது!

வாழ்க்கை ஒரு போராட்டம் தான், ஆனால்
போராட்டம் தான் வாழ்க்கை அல்ல!


sri.vije@gmail.com

Series Navigation

ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி