நான்கு ஹைக்கூக்கள்
Published May 5, 2002 • By
ரமேஷ்
ரமேஷ்.

பேருந்துக்குள் வந்த வேகத்தில்
ஓடிப்போனது நிலவொளி
சாலை திருப்பம்.
% % %
காற்று…
படபடத்துப் பறக்க முயல்கிறது
ஜன்னலோர புத்தகம்!
% % %
‘க்றீச் ‘சிட்டு
ஓடியது இயந்திரம்
கீழே இறந்த எலி.
% % %
இன்னும் இளமைதான்
நடனமாடுகிறது
முதியவரின் கைபேனா.