This entry is in the series 20040108_Issue

மதுமிதா


===========
உலகமெனும் மேடையில்
எப்போது என்ன நாடகம்
எங்கு என்ன பாத்திரம்
என அறியாத வரையில்
கடினமாய் இருந்தது

கொஞ்சமாய் நடிக்க
கற்றுக்கொண்டதும்
சுலபமாய் விட்டது
வாழ்க்கையே

இன்பவியல் காட்சியோ
துன்பவியல் காட்சியோ
சரியோ தவறோ
எதுவாயினும்

அவன் கொடுக்க
நான் ஏற்றுக்கொண்ட
பார்வையாளன் பாத்திரத்தால்.
=======================
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation