நம்பிக்கை துரோகி

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சுஜாதா சோமசுந்தரம்


நம்பிக்கை துரோகியே
நயவஞ்சகத்தின் திருவுருவே
உன்றைப்பற்றி எழுத
என் பேனாக்கூட மறுத்துவிட்டது
இருந்த போதிலும்
நேரத்தின் கட்டாயத்திற்குள்
சிக்குண்டு
மனதில் உள்ளதை
மறைக்காமல் கொட்டுகிறேன்.
நட்பு என்றால் என்ன ?
உனக்கு தெரியுமா…உந்தன்
அகராதியை புரட்டிப்பார்.
என் வாழ்வில்
நட்பு என்ற வாசலில்
ஒரு சிலர் மட்டுமே
கோலம் போட்டவர்கள்-அதில்
நீயும் ஒருத்தியென்று
அசட்டுத்தனமாக நம்பினேன்.
நீ போட்ட கோலத்தால்
அந்த இடமே கறைபடிந்து விட்டதடி..
உனக்காக….நான்
இழந்ததை எழுத வார்த்தைக்கு
வழி தெரியவில்லை.
என்னுடன்..பழகியது,
பேசியது,சிரித்தது
எல்லாமே நடிப்பா.. ?
நம்பமுடியவில்லையடி..
எந்தன் மனக்குமுறல்
இரவையும் பகலாக்கி விட்டதடி..
பஸ் பிராயணத்தில்
ஹாய் சொல்வதில்லடி நட்பு
உணர்வு பூர்வமாக அனுபவிக்கும்
உன்னத உறவடி அது.
உனக்காக
இந்த நிமிடத்திலிருந்து
நேரத்தை செலவழிக்க
எந்தன் மனம் மறுக்கிறது
உன்னுடன் பழகிய நாட்களை
அழிக்க முயன்ற போதிலும்
நீ…கூறிய வார்த்தைகளை
ஜீரணிக்க முடியவில்லையடி
மறக்க முயல்கிறேன்…
எந்தன் மனதில் சுவடு பதித்த
அந்த நாட்களை….
—-

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்