வ.ஐ.ச.ஜெயபாலன்
ஏன் அழுதாய் தாமிரபரணி.
என் தாய்மொழியின் கருவறையே.
தமிழ்நாட்டின்மேகலையே.
முகிலூர்ந்து
தென்பொதிகைமீதிறங்கி
பாண்டியர்கள்
பசிதீர்க்கஓடிவரும்
பச்சைவயல்த் தேவதையே.
அன்னியர்முன்
இந்தியகல்வேலி எல்லாம்
தலை சாய்ந்த கரிநாளில்
நிமிர்ந்தஉன் நெல்வேலி
இன்று உள் வீட்டுள் மோதி
ஏனம்மாசாக்கடையில்.
நதிகளுள்துர்க்கை நீ.
பூமியையேசிறைப்பிடித்த
வெள்ளைஅசுரரையுன்
பாளையத்துச்சிறுவர்கள்
பம்பரமாய்ஆட்டினரே.
காதலிலேசா இன்றேல்
மோதலிலேசா என்று
வாழுகிறதெற்கத்தி மண்ணின்
வன தேவதையே
வாய்விட்டுஅழுததென்ன.
பாஞ்சாலம்குறிச்சிப்
புலி தூக்கில் தொங்கிய நாள்
நீ அழுதாய் ஆனாலும்
உன் நெஞ்சழிய வில்லை அம்மா.
வெல்வோம்நாம் என்ற உந்தன்
வீறழியவில்லை அம்மா.
இன்று எல்லாம் அழிய
ஏனழுதாய்சொல் தாயே.
நதி விம்மும்.
‘தம்பிநிமிர
அண்ணன்மகிழாத
குடி வாழ்ந்த துண்டோ
துரியோதனனும்வீமனும் போலெந்தன்
பிள்ளைகள்மோதுகையில்
எப்படிநான் தலை நிமிர்வேன். ‘
உன் கரைக்கு மீண்டும்
கட்டபொம்மன்புறம் கண்ட
கம்பனியார்வந்தனரோ.
இன்றுனதுபிள்ளைகள் மேல்
வேட்டுகளைக்கொட்டியதார்.
வெறியோடுபாய்ந்தது யார்.
நதிகளின்இளவரசி
எத்தனைநாள் நீ அழுவாய் ?
‘என் சின்ன மகனை
நுகம் பூட்டி வயல் உழுத
கால இருட்டுக்
கலையும்வரை அழுவேன்.
கத்திகளைவீசிவிட்டு
அண்ணனும்தம்பியும்
என்னோடுகை கோர்த்து
நடக்கும்வரை அழுவேன் ‘
திண்ணை
|