தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

சி குமாரபாரதி

முன்பொருகாலத்தில்..

பாவனையாளர் பெயர் கடவுச் சொல் போன்ற ‘திறந்திடு சீசேம் ‘ மந்திரங்கள் தேயைற்ற ஒரு எளிமையான உலகத்தில் முன் ஒரு காலத்திலிருந்திருக்கிறோம். தனக்கென ஒரு மின்அஞ்சல் முகவரி, முதல் முறை கணினியை உலகின் வேறொரு கோடியிலுள்ள நண்பரின் கணினியுடன் இணைத்து அவரின் கோப்புக்ளை தொட்டுப் பார்ப்பது, முதல் தடவை வெப் தளத்தை வெற்றிகரமாக கொடியேற்றல் ஆகியவை ஏற்படுத்திய ஆதிக் கிளர்ச்சிகள் இப்பொழுது சைபரில் பூர்ந்து விளையாடுபவர்களுக்கு புதினமாகவே இருக்கும். இன்று இவை நடைமுறையாகி அலுப்பூட்டும் சங்கதியாகிவிட்டன. நான் கூறுவது சென்ற நுாற்றாண்டின் 90 களின் ஆரம்பகாலம் பற்றியது. 1900 களில் மோட்டோர் கார் தெருவில் ஓட்டியவர்களுக்கும் இன்று ஓட்டுபவர்களுக்கும் உள்ள மனநிலை வித்தியாசத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாமா ? ஆரம்ப கார்காலங்களில் ‘வண்டி வருகிறது பராக்! பராக்! ‘ சொல்ல ஆளமர்த்தியிருக்கிறார்கள் – லண்டனில் என வாசித்திருக்கிறேன். கணினியின் முன்னோடிக் காலத்தில் எம்மில் பலர் இதில் காலடி வைத்திருக்கிறோம். றைற் சகோதரர்களிலிருந்து இன்று போயிங் விமானங்கள் வரை புதிய கண்டு பிடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. அன்றிருந்த பரபரப்பு ஒட்டுமொத்தமாக மனிதன் பறக்கும் அதிசயத்திற்காக, இன்றைய புதுமாறுதல்கள் சில கூறுகளுக்கு மட்டுமே. இனி கணினித்துறைகளில் நுழைபவர்கள் சாதனை வேறு பரிமாணங்களில் ஏற்பட வேண்டும். மோட்டார் வாகனங்களற்ற உலகத்தினை இப்பொழுது நாம் கற்பனை செய்து மட்டும்தான் பார்கலாம். காரில்லாத அந்தக் கால உலகத்தின் வரைபடங்களை வேண்டுமானால் மேலோட்டமாக யாராவது கூறலாம். இது கூடத்த திருத்தமாக இராது. ஏனெனில் இது பலகாலமாக ஊறிப்போன விஷயமாதலால் வாழ்வுப் பின்னணியுடன் – கலாச்சாரமாகவே ஒன்றற இணைந்து விட்டது. ஆனால் கணினியின் தாக்கம் இன்னும் எங்கள் எல்லோரிலும் அளவிடக் கூடிய ஒன்றே யாகும்.கடந்த நுாற்றாண்டிலும் வேறு பல வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் வந்திருக்கின்றன. ஆனால் இவைக்கு பழக்கப்பட எங்களுக்கு நீண்ட அவகாசங்கள் தரப் பட்டிருந்தன. ஒவ்வொரு ஊடக தொழில் நுட்ப மாாற்றங்களுக்கு மிடையில் 10 வருடத்திற்கு மேலான இடை வெளிகள் இருந்தன. வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடைப்பட்ட காலம் போல். கணினி விஷயம் ஏற்கனவே மிகவும் ஆழமாக நிறுவப்பட்ட தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், பரவலாக்கப் பட்ட தொழில் நுட்பக் கல்வி ஆகியவற்றின் முதுகில் கணினி ஏறிச் சவாரி செய்கிறது. இதனால் மிகவும் முடுக்கிவிடப் பட்ட கெதியில் முன்னேறுகிறது. இந்த விஷயம் ஏற்படுத்தி வரும் சமூக நெருக்குவாரங்களை ப்பற்றி யாராவது எழுதினால் நன்று.

அக்காலங்களில் (அதாவது சென்ற நுாற்றாண்டின் பிற்பகுதிகளில்), கணினிகள் என்னும் பொழுது இது எனது தனிப் பட்ட ‘வீட்டிலிருக்கும் ‘ கணினி என்று நம்ப முடிந்தது. உலகத்திற்கும் இதற்கும் அவ்வப்போது குறுகிய தொடர்பு – அதுவும் மின் அஞ்சல், உலக வலை ஆகிய உலவிகள்

மூலம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் நாம் நினைக்கும் நேரங்களில் மட்டுமே என்ற மன அடிப்படை இருந்தது. இப்பொழுதோ, மென் பொருட்களின் பதிப்புத் தோது

சரிபார்ப்பது, தளவாடங்கள் செக் செய்வது, வைரஸ் தேடி ஒழித்தல், மென்பொருள் புதிதாக்குகை (update) போன்ற பல மராமத்து விஷயங்களு க்காக நேரடியாகவே கணினிகள் சைபர் நிறுவனங்களிலிருந்து குடையப் படுகின்றன. இவை இப்பொழுது சாதாரணமான மாமூல் மராமத்து நிகழ்ச்சிகள். புரோகிராம்கள் அடக்க ஒடுக்கமாக குறிப்பிட்ட வேலையை செய்துவிட்டு ஓயும் என்ற சென்ற நுாற்றாண்டு நம்பிக்கை இன்றில்லை. ஒவ்வோரு புரோகிராம்களுமே

சமயம் கிடைத்தவுடன் ஒவ்வொரு காரணங்களுக்காக உலகத்தை எட்டிப்பார்க்கும் தன்முனைப்பு உள்ளவையாக இருக்கின்றன. இப்படியானவை எங்கள் தரப்பிலிருந்து மென்பொருட்களால் ஏற்படும் அல்லது எங்களால் மேற் கொள்ளப்படும் உலவும் (browsing) முயற்சிகள்.

உளவு

தவிர வேறொரு வகை தொடர்பு எங்களையறியாமல் ஏற்படுத்தப் படுகிறது. உதாரணத்திற்கு Bookmark எஎன்ற இலவச மென்பொருள் Internet Explorer/Netscape ஆகிய இரு உலவிகளுக்கும் பொதுவான வெப்விலாசங்களை, favourites History ஆகியவற்றை வசதியாக மேசை மேல் பதிவு செய்து வைத்தது இரு உலவிகளும் பாவிக்குக் கூடிய வகையில் அமைந்தது. ஆனால் நாம் செல்லும் ஒவ்வொரு தளத்தையும் தாய்தளத்திற்கு தெரிவித்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக பல காலம் கழித்து கண்டுபிடித்தேன். இதே போல் Radiate என்னும் மென் பொருள் வேறொரு இலவச மென் பொருளின்

(getflash) – நிழலில் ஒதுங்கி பல தகவல்களை ஒலி பரப்பிய வண்ணம் அமசடக்கமாக பதுங்கியிருந்தது.

வலைப் பட்சணங்கள்

பிறிதொரு வகை ஊடுருவல், வலையில் உலவும் பொழுது நடைபெறுகிறது. பல வகை பட்சணங்களை – குக்கிகளை கணினியில் (C:WindowCookies) விதைக்கின்றன. பல குக்கிகள் வலைத்தொடரபுகளை விரைவில் ஏற்படுத்தத் துணைபுரிகின்றன. இன்னும் குறிப்பாகக் கூறினால் குக்கிகள் இல்லாமல் சில தளங்களுடன் ஊடாட முடியாது. குக்கிகளை ஏற்றுக் கொள்ளவும் என்ற கட்டளையை Tools>>Internet Options >>Advanced ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் சில வகைக் குக்கிகள் கணினியில் உட்கார்ந்து கொண்டு பல தகவல்களை வெளியேற்று கின்றன.எங்கள் வாழ்வு முறைகள் வாங்கும் பொருட்கள் போன்றவற்றை சந்தைப் படுத்துகை ஆராய்ச்சிகளுக்காக சேகரித்து அனுப்புகின்றன. இவை மிக நாசூக்காகவே இயங்குவன. உலக வலைத்தளத்தில் எனது நடவடிக்கைகளை ஆராய்ந்து இவர்கள் சந்தை கட்ட முனைந்தால் .. .

வெட்டியான்கள்

இவைகளை தந்திர புத்தியடையவை என்று கொண்டால், வேறொரு வகை ‘வெட்டியான் ‘ Hackers வகை. தொடர்ச்சியாக கள்ள அப்பிலெட் அனுப்பும் பேர்வழிகள். கணினியிலிருக்கும் ‘துறைகளுக்கு ‘ (ports) அடிக்கடி இவை சென்று ஊடுருவ முயற்சிக்கும். ஒரு கணினிக்கு ஒரே துறைதான் (ஏற்றியிறக்கி யூடகாவே) வெளியுலகு தொடர்புக்கு உண்டு என உங்களைப் போல்தான் நினைத்திருந்தேன். ஆனால் இது பெளதீகத்துறை (physical port) இதுவே பல தருக்கத்துறைகளை (Logical Ports) உள்ளடக்கியதாக ஒரு பாவனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்புத்துறையின் அடிப்படை இயல்பிலிருந்து வரும் விஷயம் இது. சமகாலத்தில் சிறு சிறு பட்டி அகலங்களான மீள்திறன் எண் வரிசைகளில் (frequency)பல விசேட வெவ்வேறு தொடர்புகள் நடைபெற முடிவது நேயர்களுக்குத் தெரிந்ததே. இந்தப் பல்வேறு துறைகளூடாக உட்புகும் குக்கி போன்ற அப்பிளட்கள் கணினியிலி நிலைகொண்டு தகவல் அனுப்பலாம்- கிரெடிட் அட்டை நம்பர்கள் கடவுச் சொற்கள் போன்றவை. அல்லது மிக மோசமான வேலையாக வேண்டுமென்றே கணினியின் கடும் தட்டில் உள்ள தகவல்களை இவை திருப்பிெழூதிப் பழுதாக்கலாம். இவ்வளவு திறன் படைத்தவர்கள் உருப்படியாக ஏதாவது செய்து சம்பாரிக்கலாமே என உங்களைப் போல்தான் நானும் வியப்படைகிறேன்.

தீச்சுவர்

பெரிய நிறுவனங்கள் மட்டுமே பல காலமாக தீச்சுவர் firewall ஏற்படுத்தி இப்படியான துறை ஊடுருவல்களையும் வைரஸ் இணைத்த மின் அஞ்சல்களையும் வடி கட்டிவந்தன. ஆனால் குறைந்த கட்டணத்தில் நிறையநேரம் உலவுவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் தனிப்பட்ட கணினிகளுக்கும் PC இப்போ இந்த ஆபத்து உண்டு என்று

குறிப்பிடுகிறார்கள். ஏற்றியிறக்கிகளின் Modem தகவல் கடத்து வேகம் 13 kbs இல் ஆரம்பித்து 28 kbs பின் 56 kbs ஆக அதிகரித்தாலும் தொலைபேசி லைன்களின் இயல்பான மட்டுப் படுத்தலினால் தனிப்பட்ட கணினிகளுக்கு

ஒரு இயல்பான பாதுகாப்பு கிட்டியது. இவற்றின் அலைவரிசை பட்டை வீச்சு குறுகியது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு (கிபைட்ஸ்) தரவுகளே செக்கனுக்கு பரிமாற முடியும். இப்படியான தெடர்பு மட்டுப்படுத்தல் விளைவாகவே மென்பொருள் இறக்குவதற்கு நேரமெடுக்கிறது. மட்டுப்படுத்தப் பட்ட பரிமாறல் வேகத்தால் தொலைபேசி லைன்மூலம் தொடர்பு இயல்பாகவே பல ஊடுருவல்களுக்கு வடிகட்டி. ஆனால் DSL cable போன்ற விரிவான அலைவரிசைப் பட்டைகளில் நீண்ட நேர வலைத் தொடர்பு ஏற்படுவதால் வீட்டு கணினிகளும் ஊடுருவலுக்கு சுலபமான குறியாகின்றன என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் தொடர்பு இணைப்புக்கள் கட்டணமில்லாமல் கிடைக்கும் பரிசோதனை முயற்ச்சிகள் நடை பெறுகின்றன. குறைந்த கட்டணத்தில் விரிவான அலைப் பட்டை தொடர்பு கிட்டி வருகிறது.

இப் படியான தீச்சுவர் மென் பொருள் ஒன்றை Zonal alarm இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். மிகவும் இலேசாக நிறுவமுடிவதுடன் சரியான காரணிகளை தெரிவு செய்தால் குறிக்கீடு இல்லாமல் பின்னணியிலிருந்து பாதுகாக்கிறது. நாங்கள் ஏற்றுக் கொள்ளும் தொடர்புகளே அனுமதிக்கப் படுகின்றன. மற்றவை மறிக்கப்

படுகின்றன. கணினியிலிருந்து வெளியேறும் சமிக்சைகளும் உள்புகும் சமிக்சைகளும் நமது முழுக்கட்டுப் பாட்டில். நாம் அனுமதிக்கும் மென்பொருட்களே சுவரூடாக ஊடாடலாம்.

இதைச் சொன்ன கையோடு. கடந்த 8 மாதங்களாக சுமார் நாளுக்கு ஓரிரண்டு ‘வெளி ஊடுருவல்கள் ‘ தடுக்கப் பட்டது எனத் தெரிகிறது இதில் 90 விகிதம் நம்பகரமான தளங்களிலிருந்து வந்தன என்று ஊகிக்க முடிகிறது. இந்த தீச்சுவர் முறை வீட்டு கணினிகளுக்கு (நாளுக்கு ஓரிரு மணி வலைஉலா) overkill என்றும் சொல்லலாம்.

ஆனால் வைரஸ் (கிருமி) விஷயம் அப்படியல்ல என்பது அனுபவம். ஆனால் நிச்சயமாக வைரஸ் காப்பு அவசியம் என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும். பொதுவாகவே இந்த அவைரஸ் மென் பொருட்களில் இருக்கும் தேர்வுகள் பூலியன் தருக்க அமைப்புக் கொண்டவை. எல்லா தேர்வுகளையும் ஒருமித்து சேர்த்து கொஞ்சம் நிதானித்து யோசியுங்கள் தேவையேற்படின் பேப்பரில் கிறுக்கிக் கொண்டே நேரமெடுங்கள். இம்மாதிரி தருக்கங்களின் விளைவுகள், கறாரான உதவி மொழிகள், எச்சரிக்கைகள் ஆகியவற்றினால் மொழிப் பயன்பாடுகூட மாறுகிறதா ? குறிப்பாக வைரஸ் மென்பொருட்களை நிறுவுவதில் பல தேர்வுகள் உண்டு. எல்லா கோப்ப்புக்களையும் குடை என்பது ரிக் பண்ண எளிது ஆனால் கணினியின் செயல் வேகத்தை பாதிக்கிறது. மின் அஞ்சல்களுக்கு சிறப்பான அ/வைரசு கவனம் தேவை. சில மென் பொருட்கள் (நோட்டன்) மடல்களை ஒரு தற்காலிக பெட்டியில் முதலில் எடுத்து குடைகிறது. நிச்சயமாக வைரஸ் இல்லை இன்றால் வழமையான தபால் பெட்டியில் போடுகிறது. சமுசயமான தபால்கள் குவாரன்டைன் செய்யப் படுகிறது.

இவ்வளவு தொழில்நுட்பம் வியாபார உத்திகள் தெரிந்தது சரி. கெட்டிக்காரர்கள்தான். இதைவிட இந்த விண்ணாணங்களை வைத்து மனநிறைவுடன் என்னதான் சாதிக்கப் போகிறோம் என்பதே எனது மறுமொழி எதிர்பார்க்காத ஒரு கேள்வி.

பரம்பரை மூர்த்தங்களும் கணினிப் பாவனையும்

கணினியுகம் வருங்காலத்தில் எப்படியான பாரதுாரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பல குருவானவர்கள் ஆரூடம் கூறுகிறார்கள். இவற்றைப் பற்றி நான் அதிகம் கூறப்போவதில்லை. நந்தி வாக்கியம் நாடி

ேஐாசியம் போல் இதுவும் ஒன்று. நம்பினால் கேட்கலாம். எல்லாமே அதனதன் பிரகாரம் சொல்லப் படும் முன்செலுத்தும் தொலை நோக்கு. ஆனால் நண்பரொருவர் கூறியது அவர் நேரடி அவதானம். இருட்டும்

சமயமாக வேலைவிட்டு வீடு செல்லும் பெண் ஆண் இருவர். கணினித்துறையில் வேலை செய்பவர்கள். இவரது அலுவலகத்திலிருந்து பார்த்த பொழுது இருவரும் தலையை முன்னுக்கு நீட்டியபடி கண் முன்னால் இருக்கும் திரையைப் பார்க்கும் ஒரு பாவத்தில் நடந்து சென்றார்கள். நண்பரின் கேள்வி, வருங்கால மனித பரிணாமம் இந்தச் சூழலுக்கு இசைவாக்கமாக எங்கள் உடல் வாகுகளையும் மாற்றுமா என்பது. சில சமயம் நுாறு இருநுாறு வருடங்களில் கூட இப்படியான மாற்றங்கள் சாத்தியமாகலாம் – ஏனெனில் கணினி பற்றிய எங்கள் வாலாயம் (pre occupation) இப்படியான மரபணு மாற்றங்களை துரிதப் படுத்தலாம் என்றார். யார் கண்டது. ஆனால் பல வருடங்களாக நிலையாக இருந்தது பார்வை. கணினி பாவிக்க ஆரம்பித்து கடந்த பத்து வருடங்களாக வருடா வருடம் எனது கண்ணாடி பவர் கூடிக் கொண்டு போவது உண்மை. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையா ?

தம்பையா பரியாரியாரும் குவாண்டக் குணப்படுத்துகையும்

ஊரில் தம்பையா பரியாரிடம் எந்த வியாதிக்கு மருந்துக்கு போனாலும் ஒரே விதமான குளிசை களைதான் தந்து கொண்டிருந்தார் (ஆயுர்வேத வைத்தியம்) ஆனால் பத்தியத்தில்தான் மாறுதலிருக்கும். சர்வரோக நிவாரணி மருந்தைப்

பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புற்று நோயில் ஆரம்பித்து கால்மூட்டு வலி என எல்லா நோய்களுக்கும் கொடுக்ப்படும் மருந்துக் குளிசைகள். அது போலத்தான். வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என்ற புராதனஉடம்புத் தத்துவத்தைதான் பரியாரியார் வியாதிக்கு விளக்கமாக கூறி ஆறுதல் படுத்துவார். தோளில் சால்வை போட்டுக் கொண்டு மிடுக்காக ஊருக்குள் பெரிய மனிததராக உலாவியவர் பரியாரியார். பாருங்கள், Dr தீபக் சோப்ராகூட வாத பித்த கப என்று விளங்க வைத்து ( ‘ம் ‘ மை விழுங்கி) நாடி பிடித்துபார்கிறார். எந்த

வியாதியானாலும் வாத் பித் கப் ஆகியனவற்றின் சமநிலையை சரி பண்ணினால் போதுமென்பது விளக்கம். இதைச் சொல்லிச் சொல்லியே சோப்ரா குபேரனாகி விட்டார். பரியாரியாரின் சால்வை குசேலரினது போல் செம்பாட்டு நிறமேறிய பழம் சால்வை என்பதையும் சொல்ல வேண்டும். இந் நிலமைக்கு விளக்கங்கள்

பல இருக்கலாம்தான் – ஆனால் சுழி என்பது இதுதானோ ?

எனக்கு வியாதி வந்தால் ஆங்கில வைத்தியம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஆனால் மற்றைய நேரங்களில் எனது அபிமானம் சித்த ஆயுர் வேதம் மேல்தான். சிந்துாரம், லேகியம், பஸ்மம், பாஷாணம், குளிகை, கஷாயம்

என்ற மருந்துவகை அதிமதுரம் ஆடுதின்னாப்பாலை சிவனார் வேம்பு சித்தரத்தை கத்தாளை கண்டங்கத்தரி என்ற மூலிகைத் தொடர்களின் பெயர்களைப் படிக்கும் போது கவிதையாகி மனஇசைவாக அமைகிறது. அப்படி ஒரு அத்தியந்தத் primeval தொடர்பு. முச்சந்தி மருந்துக் கடையின் கதம்பமான வாசனை, கைமருந்துக்காக வேலிகளில் தோட்டங்களில் தலைகளில் கடகங்களுடன் தேடித்தேடி மூலிகை பிடுங்கும் பெண்கள், சென்னை ரத்தினசாமி நாயக்கர் அன்டு சன்ஸ் புத்தகங்களான போகர் சத்த காண்டம், ஒன்பது விஷ ஆரூடம் ஆகியவை நினைவுக்கு வந்து போகின்றன.

குறியில்லாக் குறிப்புகள்

கடைத்தெருவில் கல்லாப் பெட்டியில் செட்டியார், அவரைச் சுற்றி றைவர் சிப்பந்திகள் என ஆளணி மும்மரமாக அவரை காலை வங்கிக்கு அனுப்பும் சடங்கில் பம்பரமாகச் சுழல்கிறது. ஆழ்தமிழ்நாட்டின் மூலையில், ஆதீனமொன்றில் இளைப்பாறிய உத்தியோகத்தர் சேர்ட் இல்லாமல் ஹாயாக ஓரடி உயர மேசைமுன் நிலத்திலமர்ந்து அலுவல் பார்க்கிறார், பக்கத்தில் பெரிய சாமியார் நெல்லு மூட்டையில் சாய்ந்த படி மராமத்து பண்ணுகிறார். இவர்களைச் சுற்றி கைகட்டி வாய்பொத்தி reverse ல் போகும் அடியாட்கள். சூழலே இசைவாகத்தான் இருக்கிறது. ஒரு நிமிடம் தரித்துப் பார்பதைவிட இவற்றுடன் இணைய முடியாதது. அளவெட்டி கிராமத்து வீட்டுத்திண்ணையில் ஜோசியர், மூக்குக் கண்ணாடியை கீழே தள்ளி, முகத்தைத் தாழ்த்தி கண்ணாடிச் சட்டத்திற்ம் புருவததுக்கு மிடையில் என்னை நோட்டம் விட்டபடி, குரு பகவானும் சனீஸ்வரனும் தங்கள் எதிரெதிர் ஈர்ப்புவிசையால் என் பொறியல் படிப்பை எப்படி மாவாகப் பிசையப் போகிறார்கள் என்று விசுவாசமான குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இரவல் சைக்கிளில் இரண்டு மணித்தியாலம் மிதித்து விளக்கி வந்திருக்கிறேன். பார்த்தால் எப்பவுமே நான் வேண்டிக் கட்டும் பக்கத்தில்தான் இருந்திருக்கிறேன். ராசி.

இப்படி இவர்களைப் போல் ஆறுதலாக எப்பவாவது இருக்க முடிந்ததா என என்னில் ஒரு பொறாமை. இது எவ்வளவு உண்மை எவ்வளவு எனது கற்பனை என்பது அக் கணங்களில் தெரிவதில்லை. இந்த மாதிரி சூழல்களில் மனதர்கள் ஆறுதலாக பாந்தமாகத்தான் இருக்கிறார்கள் என்ற உளப்பாங்கு ஒரு பாவனையே என்பதை அறிவது சுலபமல்ல. இதைத்தான் விழுமங்கள் என்று குறிக்கிறார்களோ தெரியாது. ஆனால் இவர்கள் பாதணிகளுக்குள் என் கால்களை நான் நுழைக்க விரும்பவில்லை என்றும் தெரிகிறது. இரு வேறு உலகங்களிடையே இழுபடும் முரண்பாடு. கண்டிருப்பீர்கள் சேலையில் ஒரே ஒரு நுாலைப் பிடித்து இழுத்தால் முடிவில்லாமல் நுால் வளர்ந்து கொண்டிருக்கிறது. சின்ன விஷயமானாலும் ஆழமான வேறு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது.

‘படித்தவர்கள் ‘ – உத்தியோகத்தவர் தங்களின் சூழலுக்கு இசைவாக்கம் adoptation பெறமுடியவில்லையா ? இதைத் மறுதலையாக புரட்டினால் (inverse) ஏற்படும் நிலை அந்நியமாதல் – alienation. இடறுகிறது, தடத்தை மாற்றுவோம்.

மீள்உதை

இந்த இடத்தில் காரண காரியத் தொடர்பற்ற ஒரு சக்திச் சொட்டுப் பாய்ச்சல் போடுவோம். Quantum leap. சன்னல் Windows கணினிகளின் பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணி மீள்உதைதான் – reboot. கணினி ஒரு நிகழ்த்துகை (புரோகிராமின்) நடுவில் நிலைகுத்தி நின்றால் வேறொன்றும் செய்வதற்கு இல்லை மீள்உதைதான். RAM ராமிலிருக்கும் ஞாபகம் ஆவியம் volatile. மின்சாரம் இல்லாவிடின் கரைந்துவிடும். திரும்பவும் உதைக்கும் பொழுது கடும் தகட்டிலிருக்கும் நிரந்தர ஞாபகத்திலிருந்துதான் நிகழ்த்துகைகள் மறு ஏற்றம் செய்யப் படுகின்றன.

நிரந்தர/ஆவிய ஞாபகங்கள்

மீள்உதை தீர்க்கக் கூடிய பிரச்சனைகள்தான் என்ன ? புரோகிராம் முடிவிலாச் சுழற்ச்சியில் நுழைந்து (infinite looping) சிக்குவது, கோப்பு கெடுதல் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப் படுகின்றன. கோப்புக்கள் கடுந்தகட்டில் உள்ள படியே மறு ஏற்றம் load செய்யப் படுகின்றன. கெட்டுப்போன கோப்புக்களின் நகல்கள் மறுஏற்றம் செய்யப்படுகின்றன. ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். ஆனால் மீளுதைக்கும் வரையில் செய்த வேலைகள் முன்பு கடும் தகட்டில் சேமித்த வரைதான் மிஞ்சும். கடைசியாக காப்பாற்றப்பட்ட- Saved நிலையிலிருந்தே ஆரம்பிக்கும். காப்பாற்றுதல் என்பது நாங்கள் கொடுக்கும் கட்டளை. காப்பாற்றும் இந்தக் கட்டளையானது ராமிலிருந்த கோப்புக்களை கடும் தகட்டுக்கு எழுத மையச் செய்கைக் கூற்றை – CPU நிர்ப்பந்திக்கிறது.

மாய ஞாபக முகாமை

ராம் என்பதும் ஞாபகம் தகடும் ஞாபக கொள்கலம் என்பதை கண்டுகொண்டோம். அப்படியாயின் நடுவில் எதற்காக இந்த ராம். CPU நேரடியாகவே தகட்டிலேயே எழுதி வேலை செய்யலாமே ? என்ற கேள்வியைக் கேட்கவேண்டும். CPU வின் செய்கைகள் 1 MHz மீள்திறன் எண்ணை எட்டிவிட்டது (பென்ரியம் 111). இந்தக் கணக்குகள் உறைப்பது கஷ்டம். ஒரு செக்கனுக்கு 1,000,000 முழுச்சுற்று இயங்குகிறது. ஒரு செக்கனில் இவ்வளவு எண்ணிக்கையுள்ள எளிமையான கூட்டலோ பெருக்கலோ இந்த செக்கனுக்குள் முடிந்துவிடும் என்று யோசிக்கலாம். என்ன வேகமாகச் சுற்றினாலும் தட்டிலிருந்து (3600/ 7200 rpm) தகவல் வரவழைக்க மில்லி செக்கன் (1/100 செ) நேரமாகிறது. வேண்டப்பட்ட தகவல் இருக்கும் சரியான புள்ளிகளில் வாசிக்கும் முனையை கொண்டு வந்து நிறுத்துவதிலேயே ெருமளவு நேரமாகிறது. ஆனால் மையச் செய்கை CPU மைக்கிரோ செக்கன் (1/1,000,000 செ) கணக்கில் அடுத்த டுத்து செயல்படுகிறது என்பதை முன்பு கண்டோம். இந்த வேகத்திற்கு தீனி போட எந்த அசையும் எந்திர சாதனங்களாலும் முடியாது. பெளதிக வேகத்திற்கும் எலத்திரோனிக் வேகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது.Mismatch. ஆகவே CPU தேவையான தகவலுக்காகக் தகட்டின் பரிவுக்காக – response காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாகச்

செயலாக்கும் முறமை (OS – வினைத்தளம்) சோம்புகிறது. இப்பொழுது வரும் எஸ்டி ராமின் மீள்திறன் எண் 166 MHz. இது ஓரளவு சீபியு வின் செயல் வேகத் திற்கு (1000 MHz) ஈடுகொடு க்கக் கூடியது. எனவேதான் ஒரு குறிப்பிட்ட புரோகிராமின் ஆரம்பத்தில், தேர்ந்தெ டுத்த சில குறிப்பிட்ட பகுதி தகட்டிலிருந்து ராமிற்கு ஏற்றப் படுகிறது. வேகமாகச் செயல்படும் ராமில் குடிகொண்ட நிகழ்துகை பகுதி CPU வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிகிறது.

பக்கமாக்குகை

சரி நிகழ்ததுகையின் ஒரு சிறிய பகுதிதான் ராமில் ஏற்றப்படுகிறது என்பது நேயர்கள் தெரிந்ததே. இந்தக் குறிப்பிட்ட பக்கங்கள்தான் இப்போ தேவை என்பதை எப்படியனுமானிக்கலாம் ? உதாரணமாக ரஜனி காந்த் ரசிகர்களை ரஜனியின் பட முதல்நாள் விழா அல்லது 100 வது நாள் விழாவில்

சந்திக்கக் கூடிய இயல்பான சாத்தியக்கூறுகள் அதிகம்.Locality reference. எந்தப் பகுதியுடன் எப்பக்கங்கள் தொடர்புடையன என்பதற்கான சில சுலபமான கணிப்புகள்தான் அலுகோரிதம். இவை எப்பொழுதுமே துல்லியமாகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. இப்படியாக பக்கமாக்குதல் paging ஒப்பேற்றுவதற்கு பல அலுகோரிதம் உள்ளன. இம் முறையினால் ஒரு சிறிய பகுதி புரோகிராமை ராமிலேற்றிவிட்டு முழு புரோகிராமுமே செயலுக்கு தயாரகி நிற்கிறது என்ற ஒரு பிரமையை நிகழ்த்துகைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் ஒரே சமயம் பல் வேறு

புரோகிராம்களை சமகாலத்தில் ஓட்டுவது சாத்தியமாகிறது.Multitasking. இருக்கும் பக்கங்களை ஓட்டிவிட்டு புதுத் பக்களை கோருகிறது சீபியூ. இந்தக் கணத்தில் பழைய பக்கங்கள் இறக்கப் பட்டு புதிய அண்மைத்தன்மையுள்ள பக்கங்கள் ஏற்றப் படுகின்ற, இதே வேளை இந்த புரோகிராமின் வேலையை தடங்கல் படுத்தி ேறொரு புரோகிராமுக்கு சீபியூ கவனம் செலுத்துகிறது. ஆனால் புரோகிராம் நிற்பாட்டப் படவில்லை. சிபியூ செயல்கூற்றின் இடையீடு தேவையின்றியே பக்கங்கள் அலுகோரிதப் படி ஏற்றப் படுகின்றன. இதனால் பல புரோகிராம்களை சமகாலத்தில் நிகழ்த்த முடிகிறது. ஆக சீபியு-ராம் -தகடு செயல்பாட்டு வேக வித்தியாசத்தை சாதகமாக பயன்படுத்தும் முறைதான் மாயஞாபக முகாமை (virtual memory management- VMM).

ராமில் குடிகொண்ட இப்பகுதியில் தேவையான தகவல் இல்லாவிட்டால்தான் சீபியு தகவலுக்காக தகட்டை விசாரிக்கிறது. இப்படி அடிக்கடி யேற்பட்டால் புரோகிராமின் ஓடுகையின் பொழுது தகட்டிலிருந்து ராமுக்கும்

ராமிலிருந்து தகட்டிற்கும் பக்கங்கள் அடிக்கடி எழுதப்பட வேண்டியேற்படும். Misses. ராமில் ஒரு சிறிய பகுதியே இருப்தால் அங்கு குடிகொண்ட தேவைமுடிந்த பக்கங்களை இறக்கி தேவையான பக்கத் தொகுதிகளை மறுபடி

எழுத வேண்டும். இதற்கு பெயர் பக்கமாக்குகை Paging. இக் காரணத்தால் சமயத்தில் கடுகு தாளிப்பது போல் சத்தம் எழுப்புவது கடும் தகடு தான்.

அடிக்கடி இப்படி யேற்பட்டால் மாயஞாபக முகாமை virtual memory management சரியாக வேலை செய்யவில்லை என்றோ அல்லது ராமின் கொள் அளவு ஓடும் பாரிய புரோகிராமிற்கு போதாது என்றாகிறது.சாதாரணமாக இந்த ஞாபக முகாமை வின் 98 வின் 2000 போன்ற (வினைத்தளம்) செயலாக்க முறமைகளால் தன்னிச்சையாக செய்யப்படுகிறது. ஆனால் இந்த காரணியை பாவனையாளரே ஏற்றுக் கொள்ளும்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். System tools > System information >performance. அடோபி போட்டோஷாப் போன்ற பாரிய நிகழ்த்துகைகளுக்கு இந்த cache ‘ அதாவது ராமில் ஒதுக்கப் பட்ட ஞாபகதொகுதி அளவையை பாவனையாளரே நிர்ணயிக்க முடியும்.

ஒரு மாதம் தினம் சில மணி நேரங்கள் பெரிய புரோகிராம்களை ஓட்டினால் காலாகாலத்தில் தகட்டில் கோப்புக்கள் சீரான தொடர்ச்சியின்றி அங்குமிங்குமாக சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன – துணுக்காகி விட்டன. நிகழ்த்துகையின் ஒரு பகுதி தகட்டின் மையத்திலிருக்கு அதற்கடுத்த பக்கம் ஒரு ஓரத்தில் குடியிருக்கலாம். இவை எங்கு இருக்கின்றன என்பதும் தேவையேற்படின் அவற்றை இணைத்து ஏற்றம் செய்வதும் அட்டவணைகள் விலாசங்கள் பிரகாரம் நடைபெறும். ஆனால் தொடர்ச்சி விட்டுப் போனதால் இந்த ஏற்றம் அதிக நேரமெடுக்கலாம் என்பதை சுலபமாக அனுமானிக்கலாம். இந்த நிலையை சீர் செய்வதற்கு துணுக்கற்றி defragmentation tool- மென் பொருள் ஆயுதத்தை மாதமொரு முறை ஓட்ட வேண்டும்.

Optimization: ‘ஆறு பணத்துக் குதிரையும் வேண்டும் ஆறு (சிற்றாறவது) கடக்கப் பாயவும் வேண்டும் ‘.

Series Navigation