அபுல் கலாம் ஆஸாத்
திருவல்லிக்கேணியைச் சுற்றி இருக்கின்ற அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை காலை எட்டு மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். கடற்கரையிலென்றால் ஒன்பது ஆகிவிடும். அவையெல்லாம் பப்பூர்ஸ் மொம்மதுக்கு சரிப்பட்டு வராது. தொழு கை முடிந்து, குத்பா முடிந்து, தெரிந்தவர்களிடமெல்லாம் முலாகாத் செய்து விட்டு வரவேண்டுமென்றால் மணி பத்தாகிவிடும். பிறகு சென்று பிரியாணி செய்ய ஒப்புக் கொண்ட இடங்களில் அடுப்பைப் பற்ற வைத்து சிஷ்யப்பிள்ளைகளிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆளைப் போட்டுவிட்டு வருவதென் பது முடியாத காரியம். அப்படியே முடிந்தாலும் ‘தம்’ கட்டி இறக்குவதற்கு இரண்டு
மணியாகிவிடும். ‘பார்ட்டி’கள் அடுத்த பெருநாளுக்கு ‘ஆர்டர்’ தரமாட்டார்கள். அதனால் அவருக்குத் தோதுவானது ஆழ்வார்ப்பேட்டை திவான் சாகிப் பள்ளிவாசல்தான். அங்கு மட்டும்தான் காலை ஏழு ஏழரைக்கெல்லாம் பெருநாள் தொழுகை முடிந்துவிடும். எட்டுமணிக்கு வீட்டிற்கு வந்து ட்ரைசைக்கிளில் தேக்சா, முக்கோண அடுப்பு, கப்பிகாரா எல்லாவற்றையும் ஏற்றி அட்ரஸ் சொல்லி அனுப்பும்பொழுது முஹல்லாவாசிகள் தொழுகைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
மொம்மதின் மகன் அப்பொழுதான் புதிய கைலியும் சட்டையும் போட்டுக்கொண்டு, “வாப்பா தொளுவத்துக்கு வரலியா” என்றான்.
“நான் திவான் சா பள்ளில தொளுதுட்டம்’பா. நீ செய்யிது சாச்சாவோட போய் தொளுதுட்டு வந்துடு. இன்னா, பென்னா துட்டு”
“போன வர்சமும் எங்கூட நீங்க வரல்ல. இந்த வர்சமும் வரல்ல. எப்பவுமே வர்ரதில்ல”
“பாஷா பாஷா.. நீ படிச்சு நல்ல வேலக்கிப்போ. நா இந்த பப்பூர்ஸ் வேலைய வுட்டுர்ரேன். அப்பப் பாரு நீயும் நானும் புதுத் துணி போட்டுக்கிட்டு ஒண்ணா, தோ இந்த லெப்ப மஜீத்துக்குப் போவலாம்” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் திரும்பி சிஷ்யப்பிள்ளையிடம் திரும்பி, “மொப்பத்து, நிஜாம் கிட்ட டல்லியான் அம்பது கிராம் மேனிக்கு வெட்டச்சொல்ரா. எனக்குன்னு சொல்ரா. இல்லாக்காட்டி போட்லா போட்ரப்போறான்” வேகமாக இரைந்தபோது பாஷா கொஞ்சம் பின்னால் நகர்ந்தான்.
“செரி பாஷா, சாச்சா கூடப்போயிட்டு வா. செய்யிது சாச்சா கிட்ட உனக்கு டுப்பாக்கி வாங்கித் தரச்சொல்றேன்”
மொம்மதின் மகன் இதனாலெல்லாம் சமாதானமடைந்துவிடவில்லை. மற்ற பிள்ளை களைப்போலத் தானும் வாப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்று புதிய சட்டையையும் கைலியையும் எல்லோருடமும் காண்பித்து விட்டு, ‘க்யா’பா சோட்டே’ என உருதுக்காரர்கள் தன்னைக் கன்னத்தில் செல்லமாகக்கிள்ளித் தூக்கி அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்தது. சாச்சாவுடன் போவதால் அத்ற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. சாச்சா அன்று மாலை திரைப்படத்திற்குச் செல்வ தற்கு நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதற்காக அவசரம் அவசரமாக தொழு கை முடிந்தவுடன் ஓடிவிடுவார். இவனைத் தெரு முனையிலேயே விட்டுவிட்டு துப் பாக்கி வாங்கிவருவதாகச் சொல்லிப்போனால் சாப்பாட்டு நேரத்துக்குதான் வருவார்.
அவனும் அம்மாவிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்துவிட்டான். இந்தப் பெருநாளுக் காவது அப்பா தன்னை அழைத்துக்கொண்டு முஹல்லா பள்ளிவாசலுக்குப் போகவே ண்டும் என்று நோன்பு ஆரம்பித்ததிலிருந்து சொல்லி வருகின்றான். சரி சரி என்று சொல்லிவிட்டு கடைசியில் முக்கியமான ‘ஆர்டர்’ இரண்டு மூன்று கிடைத்திருப்ப தாகச் சொல்லி புறப்பட்டுவிட்டார்.
மொம்மதின் மனைவிக்கு இது புதிதல்ல. திருமணம் ஆன நாளிலிருந்து எந்தப் பெரு நாளிற்கும் மொம்மது வீட்டில் இருந்ததில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே ஜட்ஜு வீடு, பார்-அட்-லா வீட்டிலிருந்தெல்லாம் ஸ்கூட்டரில் ஆள்கள் வந்து சாமான்களின் பட்டி யலை வாங்கிக்கொண்டு அட்வான்ஸ் தந்து விட்டுப் போய்விடுவார்கள். புதுச் சேலை கட்டியிருக்கும் மனைவியைப் பார்ப்பதற்குக் கூட நேரம் இருக்காது. தொழுகை முடிந்ததும் ஓட்டமும் நடையுமாகப் புறப்படுவதைப் பத்து வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பழகிவிட்டது.
அன்று மாலை மூன்று மணிக்குப் பிறகே பிறகே மொம்மது வீட்டிற்கு வந்தார். “ஏங்க, சாயந்திரம் பாஷாவக் கூட்டிக்கிட்டு பீச்சுக்குப் போவலாமா. பிள்ள காத் தால ரொம்ப ஏங்கிட்டாங்க”
“ளா, எனக்கு மட்டுமென்ன ஆசை இல்லியா’ளா. தொளில் அன்ன மாரி, என்ன பண்ண. இன்னிக்குப் பாரு மத்தியானச் சோத்துக்கு வரணும்னுதான் நெனச்சேன். இந்த மொப்பத்து கிட்ட தயிர்ச்சட்னி பண்ணக்குடுத்துப்போனா, மூத்தவ பச்சமொளகாவத் தூக்கக் கலக்கத்துல போட்டுருக்கா. வாயில வக்க முடியாத காரம். அட் லா வூட்டு விருந்தில்ல. அவசர அவசரமா ஒடச்ச கடலையத் திரிச்சு சட்னில போட்டு தயிர ஊத்தி ஒரு மாரி அட்ஜஸ்ட் பண்ணிக்குடுத்துட்டுவர லேட்டாய்ருச்சு. எம் பொளப்பு இப்படியே போவட்டும் பாஷாவாவது நல்ல படிச்சு என்னமாச்சும் வேல பாக்கும்போது அவன் பொண்டாட்டியோட பென்னாவக் கொண்டாடட்டும்”
“பீச்சுக்குப் போறதப்பத்தி ஒண்ணும் சொல்லமாட்றீங்கொ” “ஒனக்குத் தெரியாதா’ளா. பென்னா அண்ணிக்கு மெத்த வூட்ல தாவத் இருக்குமுல்ல. முப்பது பேருக்கு ரொட்டி சால்லான் செய்யணுமாம். கூப்ட்ருக்காங்க. செய்யிதக் கூ ட்டிக்கிட்டு பீச்சுக்குப் போங்களேன்”
“செய்யிது கூட்டாளிங்களோட சினிமாவுக்குப் போறானாம்”
“சரி’ளா, வர்ர நாயித்திக் கெளமை பாஷாவக் கூட்டிக்கிட்டு சினிமாக்குப் போவலாம். வூட்ல ஒண்ணுஞ் செய்யவேணாம். புகாரில தின்னலாம். நா வந்திருக்கேன்னா காக்கா பெசலா என்னமாச்சம் செஞ்சு தருவாரு. தோ கொஞ்சம் கெடந்துட்டு மெத்த வூட்டுக் குப் போறேன்”.
“நாயித்திக் கெளமை மெத்த வூட்லயும் அட் லா வூட்லயும் ஒங்களக் கூப்டாம ஈக்க ணுமே”
இரண்டு பேருமே சிரித்தார்கள்.
பப்பூர்ஸ் என்று அழைக்கப்படும் பாவர்ச்சிகள் – சமையல்காரர்களின் நிலைமை இப்படி த்தான். விசேஷ நாள்களில் வீட்டில் தங்க முடியாது. வேலை வேலை என்று ஓடவேண் டியிருக்கும். ஓடி ஓடி மொம்மதுக்கும் வயதாக பாஷாவும் படிப்பை முடித்துவிட்டு வே லைதேடிச் சுற்றி, சோர்ந்து ஒரு நாளில் எதோ ஒரு உந்துதலில் சின்னதாக ஒரு லைசென்ஸ் வாங்கி அப்பாவின் சிஷ்யப்பிள்ளை ஒருவரிடம் பிரியாணி செய்யச் சொல்லி பொருட்காட்சியில் ஒரு ஸ்டால் போட்டான். வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது.
இப்பொழுது பாஷா முஹல்லாவின் பெரிய மனிதர்களில் ஒருவன். விசிட்டிங் கார்டு லெட்டர் பேட் எல்லாம் அடித்து லைசென்ஸ் வாங்கி செல்ஃபோன் எம்80 சகிதமாக சமையல் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்கிறான். ஒரு டெம்போவும், ஒரு சாண்ட்ரோவும் ஓடுகிறது. சென்னையில் பல இடங்களுக்கும் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் பிரியாணிப் பானைகள் டெம்போவில் ஏறிச் சென்றுகொண்டிருக்கின்றன. செல்ஃபோன் ஒலித்தால் “எத்தினி பேருக்கு, எங்க, செய்து அனுப்பணுமா வந்து செய்யணுமா, ரேட்டு என்ன
பெரிய ரேட்டு, பாய்சாப் சொல்றதுதான்” இப்படி எதாவது தொழில் முறைப் பேச்சுகள்தான்.
“மொப்பத் காக்கா, நாளக்கிப் பென்னா. சட்டுபுட்டுன்னு திவான் சா பள்ளில தொளு துட்டு சீக்கிரமா வந்துடுங்க என்னா. பெரியமேட்டுக்குப் பன்னண்டு மணிக்குப் பானை ஏத்தி அனுப்பிடணும் தெரியுதா” இரைந்து சொல்லிவிட்டு எம்80 யைக் கீழே இறக்கினான். கதவருகே மனைவி,
“ஏங்க, நாளக்கி வாப்பா நம்மளப் பாக்க வரோம்னு இருக்காங்க. வீட்ல இருப்பீங்களா”
“பென்னா நாளும் அதுவுமா நான் பிசியா இருப்பேன்னு தெரியுமில்ல. எப்படி ‘பா முடியும். நாளக்கி கட்சிக்காரங்க ஈத் மிலன் பார்ட்டி ஒண்ணு இருக்கு. மொத தடவயா பண்றேன். கூட இருந்து பாத்துக்கணும். இந்த காண்ட்ராக்ட்டுல பார்ட்டி திருப்தியாய்டுச்சுன்னு வைய்யி. மாநாட்டுக்கே நமக்கு ஆர்டர் கெடச்சாலும் கெடை க்கும். இப்பப் போயி என்னை நாளைக்கி வூட்ல இருக்கச் சொன்னா எப்படி. வாப்பா உம்மா இருக்காங்கல்ல பாத்துக்குவாங்க”
“முஹம்மதக் கூட்டிக்கிட்டு பென்னா தொளுகைக்கு லெப்ப மஜீத்துக்கு. . . ” என்று இழுத்த மனைவியைக் கையைக் காட்டி நிறுத்தினான்.
“ஏம்’பா, மொப்பத் காக்காவ திவான் சா பள்ளில தொளச் சொல்லிருக்கேன். நானும் ஆழ்வார்ப்பேட்ட போய்த் தொளுதுட்டு சீக்கிரமா வந்தாத்தான வேல நடக்கும். முஹம்மத, செய்யிது சாச்சாவோட போவச் சொல்லு. ட்ரைவரத் தொளுக ட்ரிப்பு முடிச்சுட்டு லீவு எடுத்துக்கச் சொல்லு. . . ” சொல்லிக்கொண்டே செல்ஃபோனை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டான்.
***
அபுல் கலாம் ஆசாத்
azad_ak@yahoo.com
===== azad_ak@yahoo.com
- ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கான முதன்மை ஜீனைக் கண்டறிந்துள்ளார்கள்
- நான்
- பாரதீ
- நான்
- இவன் யுவராஜன் போலே
- பிரச்னை
- பெயர்ச்சி பெயர்ச்சி பெயர்ச்சி
- நெல்லையப்பன் போல
- திண்ணைக்கு ஒரு கவிதை வைரமுத்துக்களின் வானம் – 10
- நல்நிலம்
- கவிமனம்
- பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்களை விளக்கிய இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc. [பி-1938]
- பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –
- இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்
- நிலை
- கடிதங்கள் – நவம்பர் 27,2003
- சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம்
- ‘முரசொலி ‘ மாறன் (1934-2003)
- ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள்
- குறிப்புகள் சில-27 நவம்பர் 2003-பாரம்பரிய நெல் வகை-உலக மக்கள் தொகை-தேகம் திரைப்படம்-தமிழில் என் வலைக்குறிப்பேடு
- வாகோ சோகக்கதை (1994)
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 1
- எனக்குப் பிடித்த கதைகள் – 87-குகைக்குள் ஒரு பயணம்-ஆர்.ராஜேந்திரசோழனின் ‘கோணல் வடிவங்கள் ‘
- முப்பருண்மையோடு நீர்கீழ் நிழலும் பிரும்மராஜன் எழுத்தும்
- கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்
- தமிழ் சினிமா.. உல்டா படலம்…
- முகங்கள் – அலென் வியோம் – கவிஞர் வைத்தீஸ்வரன்
- ஆகஸ்டு-15
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து நான்கு
- காய்ச்சல்
- கனவின் கால்கள் – பாகம் 2
- மேட் ரிக்ஸ் டே..
- யானை
- தொழில்
- அம்பி
- கண்டதும் கொண்டதும்
- கடலில்
- காற்று –வீடுகுறித்த என் ஏழாவது கவிதை
- தெரிந்தாலும் சொல்லாதிரு
- நலம்
- விடியும்!(நாவல்) – (24)
- தன்னேய்ப்பு
- அடையாளம்
- மாலதி கவிதைகள்
- கவிதைகள்
- சரிவில் ஒரு சிகரம்
- மொழியின் அலகு
- சீதனச் சிறையுடைப்போம்
- என் கந்தல்
- பாரதியார் பாதையில்….
- வேலைக்காரன்
- பி.ச.குப்புசாமி கவிதைகள்
- புரிசை கண்ணப்ப தம்பிரான் நினைவில்