தேவை ஒரு மரணம்…

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ஹேமா(சுவிஸ்)


*********************************
மரணம்….
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை…
இதைவிட சுகமாய் அது !
எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !
மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ…பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்.

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !
ம்ம்ம்…நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்…
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புளு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்…
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

Series Navigation